எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனையும், அணியின் துணை கேப்டனுமான சுமிருதி மந்தனா புதியதாக லேண்ட் ரோவர் எவோக் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்தும், அவரது புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் காரை பற்றியும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

சினிமா பிரபலங்களையும் சொகுசு கார்களையும் பிரிக்க முடியாது. ஏற்கனவே லக்சரி கார்களை வைத்திருந்தாலும், சினிமா நட்சத்திரங்கள் புதியது புதியதாக வேறொரு சொகுசு கார்களையும் வாங்குவதை அவ்வப்போது பார்த்திருக்கிறோம். சினிமா நட்சத்திரங்களை போன்றுதான், கிரிக்கெட் ஸ்டார்களும் சந்தைக்குவரும் புதிய லக்சரி கார்களை கவனித்து கொண்டே இருந்து, உடனடியாக வாங்கிவிடுகின்றனர்.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

இந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வாங்கியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மாருதி சுஸுகி டிசைர், ஹூண்டாய் க்ரெட்டா கார்களை வைத்திருக்கும் ஸ்மிருதி மந்தனாவின் புதிய ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.72.09 லட்சமாக உள்ளது.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

ஸ்மிருதி மந்தனாவின் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் சிலிக்கான் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. 2020இல் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் எவோக் கார் தற்போதைக்கு ஆர்-டைனாமிக் எஸ்.இ என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆற்றல்மிக்க எஸ்யூவி காரை மைல்ட்-ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடன் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் தேர்வில் வாங்கலாம்.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

இரு என்ஜின் தேர்வுகளிலும் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஒன்றே ஆகும். ரேஞ்ச் ரோவர் எவோக் ஆனது அதனை காட்டிலும் அளவில் பெரியதான வேலர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக 2ஆம் தலைமுறை எவோக் எஸ்யூவி காருக்கு புதிய முன்பக்க க்ரில், எல்இடி டிஆர்எல்-கள், ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் புதிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

கூடுதலாக ஆர்-டைனாமிக் எஸ்.இ வேரியண்டிற்கு எரிக்கப்பட்டது போன்றதான காப்பர் ஹைலைட்கள் காரை சுற்றிலும் கொடுக்கப்படுகின்றன. அப்படியே காரின் உள்ளே பார்த்தோமேயானால், 3டி சரவுண்ட் கேமிரா, கேபின் காற்று அயனியாக்கி உடன் பிஎம் 2.5 காற்று சுத்திகரிப்பான், வயர்லெஸ் சார்ஜிங் உடன் புதிய பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முதலியவை வழங்கப்படுகின்றன.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

ஓட்டுனர் இருக்கை உள்பட இருக்கைகளை 16 விதமாக மடக்கி அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் முழு டிஜிட்டலில் கொடுக்கப்படுகிறது. எவோக் கேபின் ஆனது எபோனி & அடர் கார்னெட் ஷேடில் வடிவமைக்கப்படுகிறது. என்ஜின் தேர்வுகளாக 2.0 லிட்டர் இங்கேனியம் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் இங்கேனியம் டீசல் என்ஜின்களை ரேஞ்ச் ரோவர் எவோக் காரில் லேண்ட் ரோவர் நிறுவனம் வழங்குகிறது.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதுவே டீசல் என்ஜினின் மூலம் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். ஆனால் இவை இரண்டில் எந்த என்ஜின் உடன் எவோக் காரை ஸ்மிருதி மந்தனா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

இந்த இரு என்ஜின் தேர்விலும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கியர்பாக்ஸாக வழங்குகின்றனர். அளவில் காம்பெக்ட்டான லக்சரி எஸ்யூவியான முதல் தலைமுறை எவோக்கின் உற்பத்தி முதன்முதலாக 2011 ஜூலையில் துவங்கி 2018 வரையில் நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் 3 மற்றும் 5 கதவு வெர்சன்களில் ரேஞ்ச் ரோவர் எவோக் கார்கள் உருவாக்கப்பட்டன. அதேநேரம், 2-சக்கர-ட்ரைவ் & 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகளிலும் எவோக் தயாரிக்கப்பட்டது.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

பின்னர் 2ஆம் தலைமுறை எவோக் கார் உலகளவில் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் எவோக்கின் 2ஆம் தலைமுறை வெர்சன் 2020இல் தான் அறிமுகமானது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அந்த மாடலை தான் ஸ்மிருதி மந்தனாவும் வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீராங்கனை சுமிருதி மந்தனாவின் முதல் லக்சரி கார் இதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

ஏனெனில் இதனை வாங்குவதற்கு முன்பு வரையில் மாருதி சுஸுகி டிசைர் & ஹூண்டாய் க்ரெட்டா என பட்ஜெட் விலை கார்களையே இவர் கொண்டிருந்தார். ஏற்கனவே கூறியதுபோல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக விளங்கும் சுமிருதி மந்தனா கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் தான் 3,000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்துள்ளார்.

எவ்வளவு பெரிய கிரிக்கெட் வீராங்கனை... முதல் லக்சரி காரையே இப்போதான் வாங்குறாரா!! என்ன ஒரு எளிமையான வாழ்க்கை

இத்தகைய மைல்கல்லை எட்டிய 3வது இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார். இவருக்கு முன்னால் மிதாலி ராஜ் மற்றும் கேப்டன் ஹர்மந்த்ப்ரீத் கவுர் எட்டியிருந்தனர். இத்தகைய முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக விளங்கும் ஸ்மிருதி மந்தனா தனது முதல் லக்சரி காரையே இப்போதே தான் வாங்கியுள்ளார் என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அவரது எவோக் காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 25, 2022, 10:56 [IST]
English summary
Indian cricketer smriti mandhana buy new range rover evoque priced rs 72 09 lakh
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+