85% வங்கி கடனில் அரும்பாடு பட்டு பெற்றோருக்கு மெர்சிடிஸ் எஸ்யூவி காரை பரிசளித்த சுரேஷ் ரெய்னா..!!
85% வங்கி கடனில் அரும்பாடு பட்டு பெற்றோருக்கு மெர்சிடிஸ் எஸ்யூவி காரை பரிசளித்த சுரேஷ் ரெய்னா..!!
இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுரேஷ் ரெய்னா நாடு முழுக்க தேடி அலைந்து தான் ஆசைப்பட்ட மெர்சிடிஸின் ஒரு மாடல் காரை மிகவும் சிரமப்பட்டு வாங்கியுள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ 350டி மாடல் காரை நீல நிறத்தில் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாகவே சுரேஷ் ரெய்னாவிற்கு இருந்த கனவு.

குறிப்பாக இந்த காரை சுரேஷ் ரெய்னா தனது பெற்றோர்களுக்கு பரிசளிக்க வாங்க காத்துக்கொண்டு இருந்தார் என்பது தான் இதிலிருக்கும் சுவராஸ்யமான பின்னணி.

ஆனால் அவர் வாங்க நினைத்த மெர்சிடிஸ் ஜிஎல்இ 350டி கார் ஸ்டாக்கில் இருக்கிறது, ஆனால் சுரேஷ் ரெய்னா எதிர்நோக்கும் நீல நிறத்தில் இல்லை.

கிட்டத்தட்ட இதற்காக பல நாட்களாக இந்தியாவின் முக்கிய நகர் பகுதிகள் மற்றும் கார் விற்பனை செய்யும் டீலர்களிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் வசதித்து வரும் அவர், மும்பைக்கு விளையாட்டு தொடர்பாக அடிக்கடி போக வேண்டி இருப்பதால், மெர்சிடிஸ் ஜிஎல்இ 350டி கார் வாங்குவதற்கான டீலிங்கை தொடர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டெஹரடூனின் மெர்சிடிஸ் ஜிஎல்இ 350டி கார் சுரேஷ் ரெய்னா எதிர்பார்க்கும் நீல நிறத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு பறந்து சென்று பார்க்க, அவருக்கு மெர்சிடிஸ் ஜிஎல்இ 350டி கார் நீல நிறத்தில் மிகவும் பிடித்துப்போய் விட்டது. உடனே புக் செய்துவிட்டார்.

ரூ.80 லட்சம் மதிப்பிலான இந்த காருக்கு 85 சதவீத பணத்தை வங்கி கடன் மூலம் சுரேஷ் ரெய்னா செலுத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் உத்தரகாண்ட்டில் வாங்கி இருந்தாலும், டெல்லியில் தான் சுரேஷ் ரெய்னா வாங்கிய ஜிஎல்இ 350டி காரை பதிவு செய்கிறார்.

தனது அப்பா, அம்மாவிற்கு பரிசளிக்க ஜிஎல்இ 350டி காரை அவர் எதிர்பார்த்த நீல நிறத்தில் வழங்கிய டெஹரடூன் மெர்சிடிஸ் ஷோரூம் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.


Click it and Unblock the Notifications