ஆடி எலக்ட்ரிக் காரில் கெத்தாக வந்து இறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர் - வீடியோ இணையத்தில் வைரல்!!

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காருக்கு சொந்தக்காரர் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். விராட் கோலி அவரது இந்த ஆடி எலக்ட்ரிக் காரில் சமீபத்தில் காட்சி தந்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி ஆட்டோமொபைல் வாகனங்களை மிகவும் விரும்பக்கூடியவர். இவர் இந்தியாவில் ஆடியின் முதல் எலக்ட்ரிக் காரான இ-ட்ரான் 55 எஸ்யூவியை வாங்கிய போது, அது சமூக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது. ஏனெனில் இந்தியாவில் இப்போதும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது.

அப்படிப்பட்ட சூழலில் நாடு முழுவதும் பிரபலமான விஐபி ஒருவர் ஆடி எலக்ட்ரிக் காரை வாங்கியது பலரால் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி தனது ஆடி இ-ட்ரான் 55 காரில் காட்சி தந்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை மேலே காணலாம்.

விராட் கோலி உடன் சில பிரபலமான டான்சர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் பாதுகாப்புகள் பலமாக இருந்தன. இருப்பினும் விராட் கோலி அவரது ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரில் வந்து இறங்கும் காட்சிகளை அவரது ரசிகர்கள் இலாவகமாக தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பில் விராட் கோலி உடன் வெளிநாட்டு டான்சர்களும் நடித்துள்ளனர்.

அவர்களுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விராட் கோலியிடம் ஆடி இ-ட்ரான் கார் பளபளப்பான நீல நிறத்தில் உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் பச்சை நிற நம்பர் பிளேட் பொருத்தப்படுகிறது, அந்த வகையில் விராட் கோலியின் இந்த ஆடி இ-ட்ரான் காரிலும் பச்சை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளதை மேலே பதிவிட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ஆடி எலக்ட்ரிக் காரில் கெத்தாக வந்து இறங்கிய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வீடு டெல்லியில் உள்ளது. ஆனால் அவரது இ-ட்ரான் 55 எலக்ட்ரிக் கார் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ-ட்ரான் 55 ஆனது இந்தியாவில் ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்களிலேயே விலைமிக்கது ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.18 கோடியாக உள்ளது. இந்த காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இவை காரின் அனைத்து சக்கரங்களையும் ஒரே நேரத்தில் இயக்குகின்றன.

எலக்ட்ரிக் மோட்டார்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து காருக்கு அதிகப்பட்சமாக வழங்கும் ஆற்றல் 402 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க் ஆகும். இந்த எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு ஆற்றலை வழங்க இ-ட்ரான் 55 வேரியண்ட்டில் 95kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 480கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

விராட் கோலியிடம் இருக்கும் இந்த விலைமிக்க எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 5.7 வினாடிகளில் எட்டிவிட முடியும். இ-ட்ரான் 55 காரின் 95kWh பேட்டரியை 50 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜரில் 2 மணிநேரத்தில் 0-வில் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். அதுவே காருடன் வழங்கப்படும் 11 கிலோவாட்ஸ் மாறுதிசை மின்னோட்ட சார்ஜரில் 0-80% சார்ஜ்க்கு 8.5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 14:01 [IST]
English summary
Indian cricketer virat kohli spotted in his audi e tron 55 electric car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+