இந்திய டிரைவிங் லைசன்ஸுக்கு இவ்வளவு மரியாதை கொடுப்பாங்களா? ஃபாரீனுக்கு சென்றால் இது தெரியாமல் இருக்காதீர்கள்!!

ஒரே ஓட்டுனர் உரிமத்தை வைத்துக் கொண்டு இந்தியா மட்டுமின்றி, பல வெளிநாடுகளிலும் வாகனங்களை ஓட்ட முடியும். இதனை சர்வதேச ஓட்டுனர் உரிமம் என அழைக்கின்றனர். சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெறுவது எவ்வாறு என்பதை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் கூறியிருக்கிறோம்.

சர்வதேச ஓட்டுனர் உரிமம் இல்லாவிடினும், இந்திய ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்திக் கூட சில வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட அனுமதி உண்டு. ஆனால், அந்த நாடுகளிலும் நீண்ட நாட்களுக்கு நிரத்தரமாக இந்திய டிரைவிங் லைசன்ஸை பயன்படுத்த முடியாது. அவ்வாறு இந்திய ஓட்டுனர் உரிமத்தை ஏற்கக்கூடிய சில வெளிநாடுகளை பற்றி இனி பார்க்கலாம்.

indian driving licenses accepting countries

அமெரிக்கா: அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்திய ஓட்டுனர் உரிமத்தை கொண்டு உங்களால் வாடகைக்கு கார் எடுத்து ஓட்ட முடியும். ஆனால், இதற்கு உங்களிடம் ஐ-94 விண்ணம் மற்றும் அமெரிக்காவுக்கு எப்போது வந்தீர்கள் என்ற விபரங்களையும் உடன் வைத்திருத்தல் அவசியம். இவை அனைத்தையும் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால், உங்களால் அமெரிக்காவில் இந்திய ஓட்டுனர் உரிமத்தை கொண்டு 1 வருடத்திற்கு வாகனம் ஓட்ட முடியும்.

ஜெர்மனி: அமெரிக்கா போல் அல்ல, ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இந்திய டிரைவிங் லைசன்ஸை 6 மாத காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அத்துடன், டிரைவிங் லைசன்ஸில் விபரங்கள் அனைத்தும் ஜெர்மன் மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவை மட்டுமின்றி, மேலும் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அவற்றை அறிய ஜெர்மனி தூதரகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

indian driving licenses accepting countries

ஆஸ்திரேலியா: இந்த நாட்டின் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, சவுத் ஆஸ்திரேலியா, தி கேப்டல் பகுதி மற்றும் வடக்கு பகுதிகளில் மட்டும் இந்திய ஓட்டுனர் உரிமம் அங்கீகரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த பகுதிகளில் 3 மாத காலத்திற்கு இந்திய ஓட்டுனர் உரிமத்தை கொண்டு வாகனம் ஓட்டலாம். சில பகுதிகளில் 1 வருடம் வரையில் கூட இந்திய ஓட்டுனர் உரிமம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இங்கிலாந்து: இங்கிலீஷ் நாட்டில் இந்திய ஓட்டுனர் உரிமம் 1 வருடத்திற்கு செல்லப்படியாகிறது. ஆனால், இந்திய டிரைவிங் லைசன்ஸை வைத்துக் கொண்டு எல்லா விதமான வாகனங்களையும் உங்களால் இங்கிலாந்தில் ஓட்ட முடியாது. சில வகை கார்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவு வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும்.

indian driving licenses accepting countries

நியூசிலாந்து: இந்திய லைன்சன்ஸை கொண்டு நியூசிலாந்தில் 1 வருடத்திற்கு வாகனம் ஓட்டலாம். நியூசிலாந்தில் வாகனம் ஓட்ட குறைந்தப்பட்ச வயது வரம்பு 21 என்பதை மறந்துவிடாதீர்கள். லைசன்ஸில் விபரங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அல்லது, நியூசிலாந்து போக்குவரத்து ஏஜென்சி மூலமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பூடான்: இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்று. பூடானில் இத்தனை மாதங்களுக்கு தான் இந்திய டிரைவிங் லைசன்ஸை பயன்படுத்த வேண்டும் என்கிற கால வரம்பு எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் இந்தியராக இருந்தால், பூடானில் வாகனம் ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் உடன் பாஸ்போர்ட், வாக்காளர் அட்டையை உடன் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இத்தனை இருந்தாலும், மலைப்பிரதேச நாடான பூடானில் வாகனம் ஓட்டுவதற்கு ஓர் தனி திறமை வேண்டும்.

indian driving licenses accepting countries

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஓட்டுனர் உரிமத்தை பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொள்வதற்கு, இந்தியாவில் ஓட்டுனர் உரிமத்தை வழங்குவதில் பின்பற்றப்படும் முறையான செயல்முறைகள் முக்கிய காரணம் ஆகும். அத்துடன், கரடு முரடான சாலைகளில் ஓட்டி பழகியதால் இந்தியர்கள் போதுமான அளவிற்கு வாகனம் ஓட்டும் திறமையை கொண்டிருப்பர் என மேற்கூறப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் நம்புகின்றன. இந்த நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டுமெனில், டிரைவிங் லைன்சன்ஸ் வழங்கும்போது இன்னும் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 22:42 [IST]
English summary
Indian driving licenses accepting countries check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X