ஏழையாக இருந்த இந்தியரை பணக்காரராக மாற்றிய துபாய்! இந்த காரை எல்லாம் வச்சிருக்காரா! கோடீஸ்வரராகியும் பழச மறக்கல

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சௌமேந்த்ரா ஜெனா. துபாயில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர் ஆவார். ஏழை இருந்த இவரை துபாய் பெரும் பணக்காரராக மாற்றியிருக்கின்றது. மேலும், தொழில் காரணமாக அவர் தற்போது துபாயிலேயே குடி புகந்துள்ளார். இருப்பினும், அவ்வப்போது சொந்த ஊருக்கு அவர் வந்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் சொந்த ஊர் வரும்போதெல்லாம், பழசை மறக்காமல் தன்னுடைய பழைய வீட்டுக்கும் அவர் சென்று வருவார்.

அந்தவகையிலேயே சமீபத்தில் இந்தியா வந்த அவர் ஒடிசாவில் உள்ள தன்னுடைய பழைய வீட்டிற்கு விசிட் கொடுத்திருக்கின்றார். அத்துடன் தன்னுடைய பழைய வீட்டுக்கு முன்னால் நின்றவாரு குடும்பத்துடன் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட அந்த படத்தை இணையத்திலும் பகிர்ந்திருக்கின்றார். பெரிய வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் அவர், தன்னுடைய கடந்த காலத்தை நினைவுக் கூறும் விதமாக இந்த செயலைச் செய்திருக்கின்றார்.

From humble home to luxury cars

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமலேயே இந்த படத்தை அவர் பகிர்ந்திருக்கின்றார். குறிப்பாக, தான் இந்த ஓட்டையும் - ஒடைச்சலுமான வீட்டிலேயே 17 ஆண்டு காலம் வசித்து வந்தேன் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு ஓர் தொழிலதிபர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை வெளியில் கூறுவது அபூர்வம்.

ஆனால், சௌமேந்த்ரா ஜெனா இதை வெளிப்படையாக கூறி இருக்கின்றார். அத்துடன், துபாயில் தான் வசித்து வரும் அரண்மனை மாதிரியான வீட்டையும், அவர் தினந்தோறும் பயன்படுத்தும் இரண்டு கார்களையும் இந்த பதிவின் வாயிலாக காண்பித்திருக்கின்றார். இதன் வாயிலாக அவர் இப்போது என்ன மாதிரியான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

குறிப்பாக, அவர் வைத்திருக்கும் கார்கள் இரண்டின் விலையும் நம்மை வாயை பிளக்க செய்யும் வகையில் இருக்கின்றன. மேலும், அந்த இரண்டும் கார்களும் கார் காதலர்கள் பலரின் கனவு வாகனம் என்பது கவனிக்கத்தகுந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) சொகுசு எஸ்யூவி கார் மற்றும் போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் செடான் (Porsche Taycan electric sedan) ஆகியவற்றையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த இரண்டும் மிக மிக காஸ்ட்லியானவை. போர்ஷே டேகேன் எலெக்ட்ரிக் காரின் இந்திய மதிப்பு மட்டும் ரூ. 1.89 கோடி ஆகும். இதைவிட கூடுதல் விலைக் கொண்டதே தொழிலதிபர் வைத்திருக்கும் பென்ஸ் கார். அதன் இந்திய மதிப்பு ரூ. 2.53 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காஸ்ட்லியான கார்களையே ஒடிசாவில் இருந்து துபாய் சென்றிருக்கும் தொழிலதிபர் சௌமேந்த்ரா ஜெனா பயன்படுத்தி வருகின்றார்.

இந்த கார்கள் அதிக விலைக் கொண்டவை மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கக் கூடியவை மற்றும் அதிக லக்சூரி வசதிகளைக் கொண்டவையும்கூட. குறிப்பாக, அவர் வைத்திருக்கும் போர்ஷே கார் மணிக்கு 260 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதில் 761 பிஎஸ் மற்றும் 1050 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி மிக அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 585 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 240 கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதீத ஆற்றலை உருவாக்குகின்ற காரணத்தினாலும், அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு உலக அளவில் நல்ல வரவேர்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்திய பணக்காரர்கள் மத்தியிலும் சூப்பரான வரவேற்பு இந்த மின்சார கார் மாடல்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 8, 2025, 5:00 [IST]
English summary
Indian entrepreneur shares journey from humble beginnings to luxury cars
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+