டாடா இன்டிகாவை ஓட்டிட்டு இருந்தவரு இப்போ ஃபெர்ராரி காருக்கு ஓனர் ஆகி இருக்காரு.. வளர்ச்சினா இப்படி இருக்கணும்!

நடந்து செல்பவர்களுக்கு சைக்கிள் மீதும், சைக்கிளில் செல்பவர்களுக்கு பைக்கின் மீதும், பைக்கில் செல்பவர்களுக்கு கார்கள் மீதும், கார்களில் செல்பவர்களுக்கு அதைவிட அதிக ஆடம்பர அம்சங்கள் கொண்ட கார்கள் மீதும் ஆசை வருவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால், எத்தனை பேரால் அதை நிறைவேற்ற முடிந்திருக்கின்றது என்பதே இங்கு கேள்வி. பல கோடி மக்களில் ஒரு சிலர் மட்டுமே தங்களின் நிறைவேறா ஆசையை நிறை வேற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான ஓர் இந்தியரை பற்றிய இந்த ஸ்டோரியில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

நாம் பார்க்க உள்ள அந்த இந்திய இளைஞர் ஒரு காலத்தில் டாடா இன்டிகா காரில் பயணித்து வந்திருக்கின்றார். ஆனால், இப்போதோ அவர் புத்தம் புதிய பெர்ராரி 296 ஜிடிஸ் (Ferrari 296 GTS) கார் மாடலுக்கு சொந்தக்காரராக மாறியிருக்கின்றார். மேற்கூரையை நீக்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட வெர்ஷனையே அவர் வாங்கி இருக்கின்றார்.

From tata indica to ferrari 296 gts

17 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பின்னரே அவர் இந்த காரை வாங்கி இருக்கின்றார். சௌமேந்திரா ஜெனா, இவரே டாடா இன்டிகா காரில் இருந்து தற்போது ஃபெர்ராரி கார் பயன்பாட்டிற்கு மாறியவர் ஆவார். அரபு நாட்டில் வளர்ந்து வரும் தொழிலதிபர்களில் தற்போது இவரும் ஒருவர் ஆவார்.

இந்த நிலையிலேயே அவர் ஃபெர்ராரி காரை வாங்கி உள்ளார். துபாயிலேயே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார். இதற்கான ஆர்டரை கொடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 6.24 கோடி ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், துபாயில் 13,80,000 அரபு திராம்களுக்கு விற்கப்படுகின்றது. அதாவது, ரூ. 3.2 கோடிக்கு அது அங்கு விற்கப்படுகின்றது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உச்சபட்ச வரி விதிக்கப்படுவதன் விளைவாகவே மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிக மிக அதிக விலையில் சில கார்கள் விற்கப்படுகின்றன.

2008 ஆம் ஆண்டில் இன்டிகா காரை வாங்க ரூ. 15 ஆயிரம் பணப் பற்றாக்குறையால் சிக்கி தவித்த ஓர் நபரே ஜெனா. இந்த காரணத்தினாலேயே அப்போது அவருக்கு காரை டெலிவரி வழங்க மூன்று நாட்கள் கால தாமதமாகி இருக்கின்றது. இந்த மாதிரியான நிதி பற்றாக்குறையில் சிக்கி வந்த ஓர் நபரே தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் காரை வாங்கி இருக்கின்றார்.

இது அவர் அடைந்திருக்கும் அபரீதமான வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. மிக அதீத வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஓர் கார் மடாலே ஃபெர்ராரி 296 ஜிடிஎஸ் ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 830 எச்பி மற்றும் 740 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். அதேவேளையில் இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 செகண்டுகளே போதுமானது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் பெரும் பணக்காரர்கள் பலரின் கனவு வாகனமாக ஃபெர்ராரி 296 ஜிடிஎஸ் மாடல் உள்ளது. இந்த காரை ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தற்போது வாங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியருக்கும் ஆச்சரியம் மற்றும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 11:54 [IST]
English summary
Indian entrepreneur soumendra jena transitions from tata indica to ferrari 296 gts inspiring story
மேலும்... #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+