துபாய் ஷேக்குங்களே இந்நேரம் மிரண்டு போயிருப்பாங்க.. இந்தியர் இப்படி ஒரு காரை வாங்கிட்டாரா!
துபாய் ஷேக்குகளையே மிரள செய்கின்ற வகையில் இந்தியர் ஒருவர் துபாயில் தரமான சூப்பர் கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளம் மற்றும் வளர்ந்து வரும் தொழிலதிபர் சோவம் ஜெனா. இவரே துபாய் ஷேக்குகளை மிரள செய்கின்ற மாதிரியான ஆடம்பர வாங்கிய இந்தியவர் ஆவார். அவர் ஃபெர்ராரி 296 ஜிடிஎஸ் சூப்பர் கார் (Ferrari 296 GTS Super Car)ரையே அவர் வாங்கி இருக்கின்றார். இதன் மதிப்பு ரூ. 3.2 கோடி ஆகும்.
துபாயிலேயே இந்த விலையில் அது விற்கப்படுகின்றது. இந்தியாவில் இதைவிடஅதிக விலையிலேயே இந்த கார் மாடல் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இவரிடம் இந்த கார் மாடல் மட்டும் அல்ல இன்னும் பல ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. அனைத்தும் ஆடம்பர கார்களே ஆகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜே வேகன் (Mercedes-Benz G350d) மற்றும் போர்ஷே (Porsche Taycan Turbo S) உள்ளிட்ட கார் மாடல்களே அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது பெர்ராரி காரையும் அவர் இணைத்திருக்கின்றார். இத்தனை கார்களுக்கு அதிபதியாக இருக்கும் சோவம் ஜெனா, மிகவும் அடிமட்ட இடத்தில் இருந்து வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
இதை அவரே தன்னுடைய கடந்த கால இன்ஸ்டா பதிவின் வாயிலாக அவர் கூறியிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒடிசாவில் இருந்த காலகட்டத்தில் அவர் உடைந்த ஓட்டு வீட்டிலேயே வசித்து வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் வழக்கமான இந்தியர்களைப் போல தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள துபாய் சென்றிருக்கின்றார்.
அங்கு சென்று பின்னரே அவர் உச்சத்தை எட்டி இருக்கின்றார். ஆனால், இந்த உச்சத்தை அவ்வளவு எளிதில் எட்டவில்லை. மிக முக்கியமாக அவருடைய அதீத வளர்ச்சிக்கு பின்னால் அவரின் கடின உழைப்பே காரணமாக உள்ளது. இந்த நிலையிலேயே மனைவி மற்றும் பிள்ளையுடன் உடன் சென்று 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புக் கொண்ட சூப்பர் காரை அவர் வாங்கி இருக்கின்றார்.
இதற்கு முன்னர் இந்தியாவில் இருக்கும்போது வரை டாடா இன்டிகா காரையே அவர் பயன்படுத்தி வந்தார் என்பது கவனிக்கத்தகுந்து. துபாய் வாழ் இந்தியர் ஜெனா வாங்கி இருக்கும் இந்த ஃபெர்ராரி கார் இந்தியாவில் ரூ. 6.2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 830 பிஎச்பி மற்றும் 740 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு 330 கிமீ திறன் கொண்டவை ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதே அது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடினமாக உழைத்தால் என்ன மாதிரியான வளர்ச்சியைக் காண முடியும் என்பதையே ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் துபாயில் செய்துக் காட்டி இருக்கின்றார். இவரின் இந்த வளர்ச்சி இந்தியர்களுக்கு மட்டுமல்ல துபாய் வாழ் மக்களுக்கும் பேராச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








