எலெக்ட்ரிக் கார் எல்லாம் ஏன் கம்மியா விக்குது? இதுக்கெல்லாம் காரணம் இதுதான்...

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை குறித்து சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.இதனால் தான் பலர் எலக்ட்ரிக் வாகனங்களை தயங்குகின்றனர் என்ற பேச்சு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது.

எலெக்ட்ரிக் கார் எல்லாம் ஏன் கம்மியா விக்குது? இதுக்கெல்லாம் காரணம் இதுதான்...

அந்த ஆய்வில் இந்திய வாடிக்கையாளர்களில் 50 சதவீதமானோர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மொத்த வாடிக்கையாளர்களில் 54 சதவீதம் பேர் எலெக்டரிக் வாகனங்களில் தரம் குறித்துச் சந்தேகிக்கின்றனர் அல்லது கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு ரேஞ்ச் குறித்த பெரிய கவலை எல்லாம் இல்லை. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்துத் தான் அதிகம் யோசிக்கின்றனர். என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளாகவே எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மந்தமாக்குவது இந்தியாவில் போதுமான இவி சார்ஜிங் கட்டுமான வசதிகள் இல்லை, வாகனங்களில் போதுமான ரேஞ்ச் இல்லை என்ற கவலைகள்தான் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மந்தமாக்கி வருகிறது எனப் பேச்சு இருந்தது.ஆனால் இந்த ஆய்வில் முடிவில் மக்கள் பலர் ரேஞ்ச் குறித்துக் கவலைப்படவில்லை இன்று இந்தியாவில் முழு சார்ஜில் 200 கி.மீ வரை பயணிக்கும் வாகனங்கள் எல்லாம் வந்துவிட்டன. மக்களின் பெரும்பாலான கார் பயன்பாடு அதற்குள் அடங்கி விடும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல சார்ஜிங் கட்டமைப்புகளும் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. பல பொது சார்ஜிங் மையங்கள் பெரு நகரங்களில் எல்லாம் வந்துவிட்டன. மேலும் நிறுவனங்கள் கூட்டமைப்பு முறையில் சார்ஜிங் வசதிகளைக் கட்டமைத்து வருகிறது. விரைவில் போதுமான சார்ஜிங் கட்டமைப்புகள் இந்தியாவிற்குள் வந்துவிடும். அதனால் எலெக்டரிக் வாகனங்களை வாங்க சார்ஜிங் கட்டமைப்புகள் தேவையில்லை என்றே மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் தரம் குறித்து மக்கள் அதிகம் யோசிக்கின்றனர். இந்தியாவில் நடந்த எலெக்ட்ரிக் தொடர் எலெக்டரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பு சம்பவத்தால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் தரத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதோ என யோசிக்கின்றனர். அதுவும் தரம் என்றால் காரின் வெளிப்புற தரம் மட்டுமல்ல காரில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களின் தரம் குறித்தும் மக்கள் அதிகம் யோசிப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அரசின் பல திட்டங்களால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஆர்வமாக வாங்கி வருகின்றனர். வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிறது. மேலும் இதனால் பல வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரும் புரட்சியே ஏற்பட்டிருக்கிறது எனச் சொல்லிவிடலாம்.

மேலும் தற்போது மத்திய மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கப் பல மானியங்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் தற்போது இந்தியாவிலேயே பேட்டரி தயாரிப்பு குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் பேட்டரிகள் தான். இந்தியாவிலேயே வாகனங்களுக்குத் தேவையான பேட்டரிகளை தயாரித்துவிட்டால் விலை பெட்ரோல் கார்களை விடக் குறைவாக இருக்கும். தற்போது தரமான எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பது மட்டுமே எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்களின் தலையான நோக்கமாக இருக்க வேண்டும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Article Published On: Tuesday, November 8, 2022, 16:44 [IST]
English summary
Indian expecting safest EV than long range EV study says
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+