எந்த நாட்டுக்கு போனாலும் நம்ம ஆளுங்க தனியா தெரிவாய்ங்க! 21 லட்ச ரூபா பைக்கிற்கு சவுகரியமா பூஜை போட முடியல!
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஜெர்மனியில் விலையுயர்ந்த பைக்கை வாங்கிய இந்தியரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்தியர்கள் உலகில் எங்கு வசித்தாலும் அவர்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுப்பது கிடையாது. பல வெளிநாடுகளில் இந்து கடவுள்களின் கோவில்கள் உள்ளன. இதனால் மக்களும் வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டாலும், தங்களது மத பழக்க வழக்கங்களை மறப்பது இல்லை.
இதையெல்லாம் ஏன் இப்போது கூறுகிறோம் என்றால், ஜெர்மனியில் விலைமிக்க பைக் வாங்கியுள்ள இந்த தொகுப்பில் பார்க்க போகும் இளைஞர் அதனை இந்து முறைப்படி பூஜை செய்து வீட்டிற்குள் வரவேற்றுள்ளார். இந்தியாவில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஜெர்மனியில் அப்படியே எதிர்மறையாக உள்ளது.

ஜெர்மனியில் காலை மற்றும் மாலை நேரங்களில் மைனஸ் டிகிரி வரையில் கூட வெப்பநிலை மிகவும் குறைகிறது. இந்த நாட்டில் பைக்கை வாங்கியிருக்கும் இந்த இந்தியர் மைனஸ் 2 டிகிரி குளிரில் பைக்கிற்கு பூஜை செய்துள்ளார். கடவுளை வணங்கி பூஜை செய்வதால், அவ்வளவு குளிரிலும் செருப்பு கூட அணியாமல் இந்த பூஜையை இவர் செய்துள்ளார்.
மனைவி பூஜை தட்டை வைத்து நிற்க, இந்த நபர் ஊதுபத்தி கொளுத்தி தீ ஆராதனைகளை காட்டி பூஜை செய்துள்ளார். இறுதியாக, நம்ம ஊர் வழக்கப்படி பைக்கின் சக்கரத்திற்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்கி திருஷ்டி கழித்துள்ளார். ஆனால், நம்மில் நிறைய பேருக்கு டயருக்கு அடியில் ஏன் எழுமிச்சை பழத்தை வைத்து இவ்வாறு செய்கிறோம் என்பதே தெரிவதில்லை.

குதிரை வண்டி, மாட்டு வண்டிகளை பயன்படுத்திய சமயத்தில் விலங்கின் கால் பாதங்களில் காயம் ஏற்பட கூடாது என்பதற்காக அவ்வப்போது எலுமிச்சை பழத்தை மிதிக்க வைத்தனர். பின்னர் அது மாட்டு வண்டியின் கட்டை சக்கரங்களுக்கும் வழங்கப்பட்டது. தற்போது ஏன் எதற்கு என்றே கேட்காமல் ரப்பர் டயரை எழுமிச்சை பழத்தின் மீது ஏற்றி வருகிறோம்.
ஜெர்மனியில் வசிக்கும் இந்த இந்தியர் வாங்கியிருப்பது ஏப்ரிலியா (Aprilia) நிறுவனத்தின் துவாரக் 660 (Tuareg 660) பைக் ஆகும். இந்தியாவிலும் இந்த ஏப்ரிலியா பைக் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே எவ்வளவு தெரியுமா? ரூ.21 லட்சம் ஆகும். இத்தாலியன் பைக் நிறுவனமான ஏப்ரிலியா உருவாக்கும் இந்த இத்தாலியன்-ஸ்டைல் பைக்கில் 659சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது.
இரு சிலிண்டர்களை கொண்ட லிக்யுடு-கூல்டு 270-கிரான்க் என்ஜினான இது அதிகப்பட்சமாக 80 பிஎச்பி மற்றும் 70 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இரும்பு குழாய் ஃப்ரேமில் உருவாக்கப்படும் துவாரக் 660 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இவ்வாறு விலையுயர்ந்த வாகனங்களுக்கு இந்து முறைப்படி பூஜை செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. அதேபோல், இந்தியாவில் உள்ளவர்களும் இந்த அளவிற்கு விலைமிக்க சூப்பர் பைக்குகளை வாங்காமல் இல்லை. பல லட்ச ரூபாய்களில் பைக்கை வாங்கி அதனை வழக்கமாக செல்லும் அருகில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை போட்டவர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.
சமீபத்தில் கூட பெங்களூருவில் பெண் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) சூப்பர் பைக்கிற்கு கோவிலில் பூஜை போட்டார். ஏப்ரிலியா துவாரக் 660 பைக்கை காட்டிலும் சுஸுகி ஹயபுஸாவின் விலை அதிகம் ஆகும். ஹயபுஸா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ. லட்சத்தில் இருந்து ரூ. லட்சம் வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








