இவங்கிட்ட இருக்கும் வசதிக்கு இதைவிட பெரிய காரையே வாங்கி இருக்கலாமே! இந்த எலக்ட்ரிக் காரை வாங்காத ஆளே இல்ல!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார் (Electric Car), விண்ட்சர் இவி (Windsor EV) ஆகும். BaaS (Battery-as-a-service) முறையில் பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம் என்பதினாலேயே எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை அதிக பேர் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவின் 'கோல்டன் சகோதரர்கள்' (Golden Brothers) என அழைக்கப்படும் சகோதரர்கள் இருவர் பிராண்ட்-நியூ எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கில் கஸ்டமர்கள் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்குகின்றனர், அப்படியிருக்க இந்த சகோதரர்களை மட்டும் குறிப்பிட்டு பார்க்க காரணம், அவர்களது தோற்றம் ஆகும்.

எந்நேரமும் கிலோ கணக்கில் நகைக்களை அணிந்தப்படியே உலா வருபவர்களை எந்த நாட்டை காட்டிலும் இந்தியாவில் அதிகமாகவே பார்க்க முடியும். தமிழ்நாட்டிலேயே 2, 3 பேர் இருக்கின்றனர். அப்படியென்றால், வட இந்தியாவில் எத்தனை பேர் அவ்வாறு இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். அத்தகையவர்களுள் இருவர் தான், ஆகாஷ் மல்லாவ் மற்றும் நிஷாந்த் மல்லாவ் என பெயர் கொண்ட இந்த சகோதரர்கள் ஆவர்.
சொகுசு பங்களா, ஹெலிகாப்டர் (Helicopter), லக்சரியான கார்கள், ஆடம்பர உடைகள் என சொகுசான வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ்ந்துவரும் இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்பதை அவர்களது சமூக வலைத்தள பதவுகளின் மூலம் அறிய முடிகிறது. சகோதரர்கள் இருவரில் ஆகாஷ் மல்லாவ் தற்போது எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார்.

மனைவி, குழந்தை மற்றும் சகோதரர் நிஷாந்த் மல்லாவ் உடன் எம்ஜி டீலர்ஷிப் ஷோரூமுக்கு (Dealership Showroom) சென்று புத்தம் புதிய விண்ட்சர் இவி காரை ஆகாஷ் மல்லாவ் டெலிவிரி பெற்றுள்ளார். எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.16.15 லட்சம் வரையில் உள்ளன.
அதுவே, BaaS முறையில் பேட்டரியை வாடகை முறையில் பெற்றால், காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.99 லட்சம்- ரூ.12.14 லட்சம் மட்டுமே ஆகும். விண்ட்சர் இவி காரில் 38kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை எம்ஜி நிறுவனம் வழங்குகிறது. அதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 331கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது எம்ஜி நிறுவனம்.

அதேநேரம், விண்ட்சர் இவி புரோ என்கிற காரும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொருத்தப்படும் அளவில் பெரியதான 52.9kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 449கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ஸ்டாண்டர்ட் விண்ட்சர் இவி மற்றும் விண்ட்சர் இவி புரோ கார்கள் இரண்டிலும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது காரின் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை ஆகாஷ் மல்லாவ் பேட்டரி உடன் வாங்கியுள்ளாரா? அல்லது BaaS முறையில் வாங்கியுள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருபவராக இருப்பினும், BaaS முறையில் குறைந்த விலையில் காரை வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்பதால், அந்த வழியை ஆகாஷ் மல்லாவ் பின்பற்றி இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.
Source: Cartoq


Click it and Unblock the Notifications









