உலகில் எந்த நாடும் செய்யாத அதிரடியை செய்ய போகும் மத்திய அரசு! ஓலா, ஊபர் பொழப்புல மண்ண அள்ளி போட போறாங்க!
முன்பெல்லாம் வாடகைக்கு டாக்ஸி (Taxi) பிடிக்க வேண்டுமென்றால், அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. நீங்கள் எங்கு இருந்தாலும், இருக்கும் இடத்திற்கே ஒரு சில நிமிடங்களில் டாக்ஸிகள் வந்து விடுகின்றன. டாக்ஸி பிடிக்கும் வேலையை மொபைல் செயலிகள் (Mobile Apps) எளிமையான விஷயமாக மாற்றி விட்டன. செல்போன் செயலியில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை பதிவிட்டால், ஒரு சில நிமிடங்களில், நீங்கள் இருக்கும் இடத்திற்கே டாக்ஸி வந்து, உங்களை 'பிக்-அப்' செய்து கொள்ளும்.
அத்துடன் முன்பு போல், செல்ல வேண்டிய இடம் பரிட்சயமாகி இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதாவது நீங்கள் டாக்ஸி டிரைவருக்கு வழி எல்லாம் சொல்லி கொண்டிருக்க தேவை இல்லை. அவர்களே 'மேப்' உதவியுடன் உங்களை பத்திரமாக கொண்டு சென்று சேர்த்து விடுவார்கள்.

தற்போதைய நிலையில் ஓலா (Ola), ஊபர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) போன்ற நிறுவனங்கள்தான், இந்த தொழிலில் கொடி கட்டி பறந்து வருகின்றன. ஆட்டோ, கார் ஆகிய டாக்ஸி சேவைகளுடன் சேர்த்து, பைக் டாக்ஸி சேவைகளையும் கூட இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
ஆனால் கூடிய விரைவில் இந்த நிறுவனங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படவுள்ளது. இதை கேட்டவுடன், தனியார் நிறுவனம் ஒன்று புதிதாக இந்த தொழிலில் களமிறங்க போகிறது என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் மத்திய அரசு புதிய டாக்ஸி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது!

ஆம், உண்மைதான். ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, கூட்டுறவு டாக்ஸி சேவை (Cooperative Taxi Service) ஒன்றை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நடக்கும்பட்சத்தில் இது போன்ற டாக்ஸி சேவையை தொடங்கும் உலகின் முதல் அரசு என்ற பெருமையை இந்தியாவின் மத்திய அரசு பெறும்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Home Minister Amit Shah) பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''ஓலா மற்றும் ஊபர் போன்று, கூட்டுறவு டாக்ஸி சேவையை, வரும் மாதங்களில் தொடங்கவுள்ளோம்'' என்றார். இது இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களை போன்று, அரசின் கூட்டுறவு டாக்ஸி சேவை திட்டத்திலும், டூவீலர்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களில் நீங்கள் பயணம் செய்ய முடியும். ஆனால் தனியார் நிறுவனங்களை போல் அல்லாது, அரசின் கூட்டுறவு டாக்ஸி சேவை திட்டத்தில், வருமானம் முழுமையாக டிரைவர்களுக்கு சென்று விடும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்களின் டாக்ஸி சேவைகள் உண்மையில் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளன. ஆனால் கட்டணம் அதிகம் என்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கின்றனர். எனவே அரசின் கூட்டுறவு டாக்ஸி சேவை குறைவான கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்டால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.


Click it and Unblock the Notifications








