பாரத் என்கேப்பில் வரப்போகும் புது ரூல்ஸ்! மாருதி, டாடா எல்லாம் கதி கலங்கி போய் நிக்குறாங்க!
மத்திய அரசு பாரத் என்கேப் என்ற சோதனையில் கனெக்டிவிட்டி கார் அம்சங்களுக்கு தனி மதிப்பெண்கள் வழங்க ஆலோசனை நடத்தி வருகிறது. இதன்படி வருங்காலங்களில் கனெக்டிவிட்டி அம்சங்கள் பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் அதிக மதிப்பெண்களை பெறும் வாய்ப்புள்ளது. அதே நேரம் முழு மதிப்பெண்களைப் பெற கார்களின் இந்த அம்சம் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியாவுக்கான பிரத்தியேகமாக கார் சோதனை முறை அமலுக்கு வந்துவிட்டது. பாரத் என்கேப் என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவிலேயே சோதனை செய்து அதற்கான ஸ்டார் மதிப்பெண்களை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் இருக்கிறது. அதன்படி கார்கள் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டு அதில் வரும் சேதாரத்துக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மதிப்பெண்களுக்கு ஏற்ப ஸ்டார் புள்ளிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது பாரத் என்கேப் சோதனையின் போது, சோதனை செய்யப்படும் காரில் கனெக்டர் கார் தொழில்நுட்பம் இருந்தால் அதையும் கணக்கில் எடுத்து அதற்கு தகுந்தாற்போல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக முழு வரையறை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கனெக்டெட் கார்டு தொழில்நுட்பத்தில் எதையெல்லாம் சோதனை செய்ய வேண்டும் என்ற ஒரு ப்ளூ பிரிண்ட் தயார் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இது போன்ற கனெக்டெட் கார்களின் தொழிற்நுட்பத்திற்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுவது போல இந்தியாவில் வழங்கப்பட இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தில் வி2எக்ஸ் எனப்படும் வாகனத்தின் அருகே எந்த பொருள் இருந்தாலும் அதை கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்ட ஒரு கார் சாலை விபத்தில் சிக்க வாய்ப்புகள் குறைவு என்பதால் அதை ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணமாக கருதி அதற்கான மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வி2எக்ஸ் தொழில்நுட்பம் என்பது ஒரு கார் சாலையில் செல்லும் மற்ற காரர்களுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் டிராபிக் லைட் சாலையில் உள்ள சிக்னல்கள் போன்றவற்றை கண்காணித்து அதற்கு தகுந்தாற்போல் காரின் டிரைவருக்கு எச்சரிக்கை மற்றும் அபாய ஒலிகளை எழுப்புவது உள்ளிட்ட விஷயங்களை செய்யும் திறன் வாய்ந்தது.
இந்த கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தை கிராஷ் டெஸ்டில் சேர்க்க 58 பக்க வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து விதமான கார் தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட இந்த விதிமுறைக்கு கனெக்டெட் நுட்பத்தை வடிவமைத்திருந்தால் அவர்கள் கார் கிராஷ்டெஸ்ட் செய்யப்படும்போது சோதனை செய்யப்பட்டு அதற்கான மதிப்பெண்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை புள்ளிகள் பெற இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்ற தகவல் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்தியா போன்ற நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இந்த சாலை விபத்துகளில் மரணம் அடைகிறது மரணம் அடைகின்றனர். பலர் படுகாயம் அடைகின்றனர். இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கார்களில் கட்டாயமாக வந்துவிட்டால் சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை குறையும்.
இப்போது பாரத் என்கேப் என்ற விதிமுறைகளின் கீழ் கார் தயாரிப்பாளர்கள் எந்த விதமான கனெக்டெட் தொழில்நுட்பத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும் அது இருந்தால் தான் குறிப்பிட்ட ஸ்டார் வழங்கப்படும் என்று எந்த விதிமுறையும் வகுக்கவில்லை. தற்போது மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் இந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் விரைவில் இதற்கான விளக்க அறிவிப்பு குறித்த தகவல் வெளியே வரும்.
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பல கார்களில் முன்பக்க கோலிஷன் வார்னிங், எமர்ஜென்சி பிரேக்கிங் டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்படுகிறது. அதாவது காருக்கு அருகே மற்றும் ஏதாவது ஒரு பொருளோ அல்லது வாகனமோ வந்தால் தானங்கியாக இந்த கார் செயற்படும் வகையில் இந்தத் தொழிற்நுட்பம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கார்களிலும் ஒரே மாதிரியான சிஸ்டம் வரும் பட்சத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்யப்போகிறது. குறிப்பாக சாலை விபத்துகளை பெரும் அளவில் இந்த கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்காக தற்போது முறையான வழிகாட்டுதல்கள் அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு இந்த கிராஷ் டெஸ்ட் மூலம் விதிமுறைகளை வகுப்பது என்பது சரியான திட்டம் தான்


Click it and Unblock the Notifications









