தள்ளாடுற வயசுல பெரிய காரை வாங்கிய பாட்டிகள்.. அவங்களே அந்த காரை ஓட்டிட்டு போனத பாத்து எல்லாரும் மிரண்டுட்டாங்க
கார் டெலிவரி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் ஆயிரக் கணக்கில் கார் டெலிவரி செய்யும் சம்பவம் என்பது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த டெலிவரி நிகழ்வு கொஞ்சம் ஸ்பெஷலானதாக மாறி இருக்கின்றது. காரணம், இரண்டு வயதான பாட்டிகள் அந்த காரை டெலிவரி பெற்றதுதான். குறிப்பாக, அந்த மூதாட்டிகளே காரை ஓட்டிச் சென்றது பலரையும் வியக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவே தற்போது இணையத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றது.
அந்த வயதான பாட்டிகள் டெலிவரி எடுத்திருக்கும் கார் மாடல் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி (Land Rover Range Rover Autobiography LWB) மாடல் ஆகும். இதன் விலை ரூ. 2.61 கோடிக்கும் அதிகம் ஆகும். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் மாடலிலேயே இதுதான் விலை உயர்ந்த உயர்நிலை மாடல் ஆகும்.

இத்தகைய காரையே வயதான மூதாட்டிகள் வாங்கி இருக்கின்றனர். இந்த விலையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3.30 கோடியை நெருங்கும். இந்த காரை பாட்டிகளின் பேரன் வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவும் அதையே காட்டுகின்றன.
வீடியோவில் இரு பாட்டிகளும் துபாயில் உள்ள தங்களின் பேரனிடம் உரையாடுவதையும், இந்த உரையாடலின்போது பாட்டிகள் ரேஞ்ச் ரோவரின் எந்த காரை வாங்கலாம் என முடிவெடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதிக இட வசதிக் கொண்ட கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்ட பின்னரே மூதாட்டிகள் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி கார் மாடலை வாங்கி இருக்கின்றனர்.
இந்த இரண்டு பாட்டிகளும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சொகுசு கார்களை இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இவர்களிடத்தில் ஏற்கனவே இன்னும் பல ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. லம்போர்கினி கார்களும்கூட அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
கடந்த காலத்தில் இந்த கார்களை அவர் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மிக அதிக சொகுசு வசதிகள் மற்றும் இட வசதிகளைக் கொண்ட ரேஞ்ச் ரோவர் எல்டபிள்யூபி கார் மாடலை இந்த பாட்டிகள் வாங்கி இருக்கின்றனர். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பாக, இந்த காரில் இடம் பெற்றிருக்கும் இருக்கைகள் மிக அதிக சொகுசு வசதிகளைத் தாங்கியதாக இருக்கின்றது. சூடாகும், காற்றோட்டத்தை வழங்குதல் மற்றும் மசாஜ் செய்யுதல் ஆகிய வசதிகளையே அது தாங்கியிருக்கின்றது. இதுதவிர, ஹெட்ரெஸ்ட், கால்களுக்கான ரெஸ்ட் ஆகியவற்றையும் இந்த காரின் இருக்கைகள் தாங்கி இருக்கும்.
இதுபோன்று இன்னும் பல சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, 13.1 அங்குல தொடு திரை, வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கும்.
மேலும், அடாப்டீவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஏர் சஸ்பெஷன். அடாப்டீவ் டைனமிக்ஸ், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் மெரிடியின் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் பயணத்தை சுவாரஷ்யமானதாகவும், அழகானதாகவும் மாற்றும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் மாடலில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஒன்று பெட்ரோல், மற்றொன்று டீசல் ஆகும். 523 பிஎஸ் மற்றும் 750 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 4.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 346 பிஎஸ் பவர், 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் 3.0 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முதியோர்கள் காரை சொந்தமாக வாங்கும் நிகழ்வு அரங்கேறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், கேரளாவைச் சேர்ந்த இந்த இரண்டு பாட்டிகள் மிகவும் சாதாரண உடையில் வந்து, அவர்களே காரை ஓட்டிச் சென்று பலரை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








