துபாயில் தாறுமாறாக பறந்த லம்போர்கினி கார்கள் - உள்ளே இருந்தது இவங்களா? டிரெண்ட் ஆகும் வீடியோ!!

லம்போர்கினி, போர்ஷே கார்களுக்கு நம் நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும், அதிகப்படியான விலையினால் அவற்றை வைத்திருப்போர் என்று பார்த்தால் குறைவுதான். இதனால், அத்தகைய கார்களை சாலையில் காண்பதும் அரிதாக உள்ளது. ஆனால், அரபு நாடுகளில் சர்வ சாதாரணமாக இத்தகைய ஸ்போர்ட்ஸ் கார்களை காண முடியும். அந்த அளவிற்கு, எண்ணெய் வளங்கள் மூலமாக பொருளாதாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால், அந்த நாடுகளில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் விலையுயர்ந்த கார்களை தங்களது அன்றாட பயன்பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர்.

ஆனால், அத்தகைய நிகழ்வுகளை நமது இந்தியாவில் காண்பது அரிதானது. தற்போது நாம் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ள சம்பவமும் துபாயில் நடைபெற்றதுதான். ஆனால், இந்த சம்பவத்தில் விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்திருப்பவர்கள் இந்தியாவை சேர்ந்த பாட்டிகளாவர். வயதானவர்களில் கூட தாத்தாக்கள் தான் விலையுயர்ந்த கார்களை பரவலாக பயன்படுத்துகின்றனர்.

grandmothers takes ride on lamborghini

ஆனால் இங்கு, நம் இந்தியாவை சேர்ந்த இரு பாட்டிகள் சேலையில் லம்போர்கினி உருஸ் காரில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஆனந்த் என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆனந்த் என்பவர்தான் இந்த லம்போர்கினி உருஸ் காருக்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோவின் துவக்கத்தில், அவர் தனது மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் பாட்டியுடன் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காரில் பயணம் செய்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எதை வாங்க விரும்புவீர்கள் பாட்டி ஃபெராரி காரா அல்லது போர்ஷே காரா? என ஆனந்த் கேள்வியெழுப்ப, அதற்கு அவரது பாட்டி லம்போர்கினி என பதிலளித்துள்ளார்.

grandmothers takes ride on lamborghini

நம் நாட்டில் நிறைய பேருக்கு லக்சரி கார் பிராண்ட்களின் பெயர்கள் தெரிவதில்லை. ஆனால், இந்தியாவை சேர்ந்த இந்த பாட்டி ஃபெராரி, போர்ஷேவுக்கு பதிலாக லம்போர்கினியை பரிந்துரை செய்யும் அளவிற்கு சொகுசு கார்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே, இந்த வீடியோவை, "குதிரையாற்றல் மற்றும் பாட்டிகள் என வரும்போது வயது வெறும் எண் மட்டுமே" என்கிற கேப்ஷனில் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு ஆனந்த் கேள்வி கேட்டு முடித்ததும், அடுத்த காட்சியில் இரு பாட்டிகள் இரு லம்போர்கினி கார்களுக்கு முன்னால் நின்றிருப்பது காட்டப்பட்டுள்ளது. இந்த இரு லம்போர்கினி கார்களுள் ஒன்று ஹூராகென், மற்றொன்று உருஸ் ஆகும். பின்னர், பாட்டிகள் இருவரும் ஆளுக்கொரு லம்போர்கினி காரினுள் அமர்ந்துக் கொள்ள, டிரைவர்கள் வந்து காரை எடுத்துள்ளனர்.

grandmothers takes ride on lamborghini

இந்த பயணம் ஆனது துபாயில் ஒரு பாலைவனத்தில் நடந்துள்ளது. பொதுவாக, இவ்வாறு ஆற்றல்மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களை பாலைவன பகுதிக்கு கொண்டு செல்ல பலர் தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில், மென்மையான மணலில் கார்களின் சக்கரங்கள் புதைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், பாட்டிகளை இந்த பயணத்தில் அழைத்து சென்றவர்கள் இத்தகைய கார்களை ஓட்டுவதில் நன்கு அனுபவமிக்கவர்களாக இருக்க வேண்டும்.

உருஸ் காரை ஓட்டியவர் 2,3 முறை மணல் நிறைந்த பகுதிக்கு காரை கொண்டு செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஹூராகெனை ஓட்டியவர் உஷாராக ஏற்கனவே வாகனங்கள் சென்ற பாதையில் சென்றுள்ளார். மற்றப்படி, பாட்டிகள் இந்த கார்களை ஓட்டும் காட்சிகள் எதுவும் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை. துபாயில் காருக்குள் ஸ்டேரிங் சக்கரம் இடதுப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. இதனால், வீடியோவில் பாட்டிகள் காரின் வலதுப்பக்க கதவு வழியாக நுழைந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வலதுப்பக்க கதவுகள் வழியாக நுழைந்ததினால், கார்களை பாட்டிகள் தான் ஓட்ட போகிறார்களா என வீடியோவை பார்க்கும் நமக்கு சற்று நேரத்தில் ஒருவித சந்தேகம் எழுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்தியாவில் இருந்து சென்ற இந்த பாட்டிகளை அவர்களது பேரப்பிள்ளைகள் இந்த சூப்பர் கார் பயணத்திற்காக அழைத்து சென்ற போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2024, 15:00 [IST]
English summary
Indian grandmothers takes ride on lamborghini cars check all details here
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X