பேட்மேன் காரில் கெத்தாக வந்திறங்கிய மாப்பிள்ளை! 90ஸ் கிட்ஸூன்னு நிரூபிச்சிட்டாருப்பா!
இந்தியாவில் திருமணங்கள் எல்லாம் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வாடிக்கைதான். இப்படியாக பணக்கார்கள் பலர் திருமண விழாவில் காஸ்ட்லியான விஷயங்களை பயன்படுத்துவார்கள். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இப்படியாாக பேட்மேன் காரில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து வந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் திருமணங்களின் போது மாப்பிள்ளை ஊர்வலம் என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. மாப்பிள்ளை திருமணத்திற்கு அழைத்து வரப்படும் போது மாப்பிள்ளைக்கு முடிந்த அளவிற்கு அதிக மதிப்பு மரியாதை அளிக்கும் வகையில் ஊர்வலம் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஒரு காலத்தில் குதிரையில் மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டார். பின்னர் இது படிப்படியாக மாறி தற்போது பேட்மேன் காரில் மாப்பிள்ளை அழைப்பு நடந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

Friends Studio.in என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியள்ளது. அதில் The Dark Knight படத்தில் வரவது போல Batman Mobile வாகனத்தில் மாப்பிள்ளை அழைத்து நடந்த சம்பவம் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது. அந்தபடத்தில் இந்த வாகனத்தை டம்பளர் என அழைப்பார்கள். இது பார்க்க ராணுவத்தில் பயண்படுத்தும் ஆயுதம் ஏந்திய கார் போன் லுக்கில் இருக்கிறது. பேட்மேன் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்த கார் நன்றாக தெரியும்.
இந்த காரை பயன்படுத்தி பிரம்மாண்டமான இந்திய திருமணம் ஒன்று நடந்துள்ளது. ஆனால் இது இந்தியாவில் நடக்கவில்லை. தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. டெஸ்டினேஷன் வெட்டிங் தற்போது பிரபலமாகியுள்ளது போல இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று இந்த திருமணம் நடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வீடியோவில் பேட்மேன் மொபைல் வாகனத்தில் மாப்பிள் அமர்ந்திருக்கிறார். இவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இவரை சுற்றி கொண்டாடிக்கொண்டே ஊர்வலமாக செல்கின்றனர். இதை பார்க்கும் போது மாப்பிள்ளை பேட்மேன் ரசிகராக இருப்பார் என தெளிவாக தெரிகிறது. இந்த காரில் பயணிக்கும் உற்சாகம் அவரிடம் நன்றாக தெரிகறிது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது முதல் பிரபலமாகி வருகிறது. இது முழுமையாக கஸ்டமைஸ் செய்ய்பட்ட கார் என்பதால் இந்த கார் குறித்த மற்ற விபரங்கள் கிடைக்கவில்லை.
ஆனால் இ்நதியாவில் சமீபத்தில் தான் பேட்மேன் அடிப்படையிலான கார் ஒன்று அறிமுகமானது. மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 எலெக்ட்ரிக் காரின் பேட்மேன் எடிசனை அறிமுகப்படுத்தியது. இது ஒரு லிமிடெட் எடிசன் காராக உருவாக்கப்பட்டது. இந்த காரை வெறும் 999 பேர் மட்டுமே வாங்க முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 135 நொடியில் மொத்த காரும் விற்று தீர்ந்தது.
மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 பேட்மேன் எடிசன் காரை ரூ27.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. முதலில் 300 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது அதிக எதிர்பார்ப்பு இருந்தததால் இந்த காரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இந்தியாவில் வாகனதயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் இது போன்ற பேட்மேன் கார்களை இந்தியாவில் பொது சாலைகளில் பயன்படுத்த முடியாது. இதை வெறும் ஊர்வல காராக தனிநபர் இடங்களில் பயன்படுத்தலாம். பொது சாலைகளில் இது போன்ற வாகனங்களை இந்தியாவில் பொதுசாலைகளில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு வெளியான கல்கி திரைப்படத்திற்காக இது போன்ற கார் ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் திருமணங்களில் இப்படியாக வித்தியாசமான வாகனங்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம் தான். தாய்லாந்தில் இந்திய முறைப்படி நடந்த திருமணத்தில் இப்படி வித்தியாமான காரை பயன்படுத்தியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








