ஊர் உலகத்துல மனைவிக்காக என்ன என்னவெல்லாம் செய்றாங்க!! காரை டெலிவிரி எடுக்க போன இடத்தில் தம்பதி செய்த காரியம்!
புதியதாக கார் வாங்குவது என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாகும். கஷ்டப்பட்டு எப்படியாவது கார் ஒன்றை வாங்கிவிட்டால் அப்போது கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இருக்காது. அந்த அளவிற்கு, வாழ்வில் எதையோ பெரியதாக சாதித்துவிட்டது போன்று துள்ளி குதிப்போம். புதியதாக வாங்கிய காரை நீண்ட தொலைவிற்கு ஓட்டி சென்று பிரசித்தி பெற்ற கோயிலில் சிலர் பூஜை போடுவதை பார்த்திருப்பீர்கள். நம் இந்தியாவில் புதியதாக வாங்கும் வாகனங்களையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பார்ப்போம். ஆதலால், வாகனங்கள் என்பன ஓர் இயந்திரம் என்று தள்ளி வைக்காமல் அவற்றையும் நமது குடும்ப உறுப்பினர் போன்று போற்றி பாதுகாப்போம்.
அந்த வகையில், சமீப காலமாக வாகனம் வாங்குபவர்கள் மத்தியில் ஒரு செயல் டிரெண்ட் ஆகி வருகிறது. அதுதான், குங்கும நீரால் நினைக்கப்பட்ட மனைவியின் கால் பாத சுவடை புதியதாக வாங்கிய வாகனத்தில் பதிப்பது ஆகும். பெரும்பாலான பெண்களால் வாகனத்தின் மீது ஏற முடியாது என்பதினால், கணவரே தனது மனைவியை தூக்கி அவர்களது கால் பாதத்தை வாகனத்தில் பதியும்படி செய்கின்றனர்.

இது மனைவிக்கு ஐஸ் வைப்பதுபோல் ஆகிறது, அதேநேரம் இந்து முறைப்படி பூஜையும் போடப்பட்டதுபோல் ஆகிறது என்பதால் ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்கும் முயற்சியாக இவ்வாறு மனைவியை தூக்கி பூஜை செய்வதை புதியதாக வாகனம் வாங்கும் கணவர்மார்கள் வாடிக்கையாக பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பிராண்ட்-நியூ மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரை வாங்கிய ஒருவர் தனது மனைவியை தூக்கி அவரது கால் பாதம் மூலமாக பூஜை நடத்தி உள்ளார்.
அதாவது, குங்கும நீரில் நினைக்கப்பட்ட மனைவியின் கால் பாதங்களை புதிய ஸ்கார்பியோ-என் காருக்கு அருகே கொண்டு சென்று, மனைவியின் கால் பாத சுவடை பதிய வைத்து மகிழ்ந்துள்ளார். இதில், ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், சற்று உடல் பருத்த நிலையில் இருக்கும் மனைவியை இந்த நபர் தனது மார்பளவு உயரத்திற்கு தூக்கியது ஆகும்.

இந்த நபர் தனது மார்ப்பளவு உயரத்திற்கு தூக்கியதன் மூலமாகவே அவரது மனைவியால் காரின் பொனெட்டின் மீது தனது கால் பாதங்களை பதிக்க முடிந்துள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் எங்கு நடந்தது என்பது குறித்த விபரங்கள் இல்லை. அதேபோல், இது டீலர்ஷிப் ஷோரூமா அல்லது இந்த தம்பதியின் வீடா என்பதும் உறுதியாக தெரியவில்லை.
ஏனெனில், இவர்களது ஸ்கார்பியோ-என் காருக்கே அருகே, மற்றொரு வெள்ளை நிறத்திலான கார் ஒன்றும் மாலை அணிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பைக் ஒன்று மாலை உடன் நிற்பதையும் பார்க்க முடிகிறது. இவை மூன்றுமே டெலிவிரி செய்யப்படுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது போன்று உள்ளது. சில நேரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் இவ்வாறு ஒரே நேரத்தில் நிறைய வாகனங்களை சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்து கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் அடுத்த தலைமுறை வெர்சனாக கடந்த 2022ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. அதேநேரம், ஸ்கார்பியோவுக்கே உண்டான பழைய பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் காரும் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீட்டிற்கு புதியதாக முக்கியமானவர்கள் யாராவது வந்தால், குங்கும திலகம் இடுவதை நம் ஊர்களில் பரவலாக பார்க்க முடியும். அதுபோல், புதியதாக வாகனம் வாங்கினால் அதற்கும் திலகம் வைத்து வீட்டிற்குள் வரவேற்க ஆரம்பித்தோம். அதன் அப்டேட் வெர்சன் தான் இவ்வாறு கால் பாதங்களில் திலகம் இடுவது ஆகும். அதேநேரம், இவ்வாறான செயல்களினால் மனைவி மீது கணவர் எந்த அளவிற்கு பாசம் வைத்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








