10லட்சம் கிமீ கடந்தும் உழைக்கும் ஹோண்டா கார்.. மாடுபோல உழைக்குது! ஓடோமீட்டரில் மாற்றம் செய்ய சொல்லும் இந்தியர்
டொயோட்டா (Toyota) கார்கள் நீடித்து உழைக்கும் திறன் கொண்டவை என்பது நம்மில் பலர் அறிந்ததே. இதனால்தான் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு மிக அமோகமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹோண்டா (Honda) நிறுவனத்தின் தயாரிப்புகளும் நீண்ட காலம் உழைக்கும் என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹோண்டாவின் தயாரிப்பு ஒன்று ஓடோமீட்டரின் அளவையும் தாண்டி உழைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியர் ஒருவரிடமே அந்த கார் பன்பாட்டில் உள்ளது என்பதுதான்.
கேரளாவின், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்தலா எனும் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான அருண் கோஷ். இவர் மேற்படிப்பிற்காகவும், சிறந்த வாழ்க்கையை தேடியும் கடந்த 2017 ஆம் ஆண்டில் கனடாவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. அங்கு தன்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்கு உதவும் விதமாக ஹோண்டா அக்கார்டு வி6 (Honda Accord V6) காரை வாங்கியிருக்கின்றார்.

பயன்படுத்தப்பட்ட கார்கள் மார்க்கெட்டில் இருந்தே இந்த வாகனத்தை அவர் வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கும்போது அந்த கார் சுமார் 90,000 கிலோமீட்டர்கள் வரை பயணித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு பின்னரே, அதாவது, அருண் கோஷ் கை வசம் வந்த பின்னரே அந்த வாகனம் மிக கடினமாக உழைத்திருக்கின்றது.
சுமார் 1 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் அந்த காரை பயன்படுத்தி உள்ளார். அதாவது, 10 லட்சம் கிமீ தூரத்திற்கு காரிலேயே அவர் பயணத்திருக்கின்றார். இருந்தும் இப்போதும் அக்கார் இயங்கும் நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், இதன் ஓடோமீட்டரை ஆறு டிஜிட்டில் இருந்து ஏழு டிஜிட்டாக மாற்றி தர ஹோண்டா நிறுவனத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஆனால், சில சிக்கல்களை அவர் சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில், உள்ளூர் ஹோண்டா கார் விற்பனையகம் ஒன்று அருண் கோஷ்-இன் இந்த கோரிக்கையை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. பொதுவாக, கனடா நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் ஆண்டு ஒன்றிற்கே 20 ஆயிரம் கிமீ மட்டுமே டிராவல் செய்வார்கள் என கூறப்படுகின்றது.
ஆனால், நம்ம ஊருக்காரர் அருண் கோஷ் சற்றே விநோதமாக ஆண்டு ஒன்றிற்கே 1 லட்சத்து 30 ஆயிரம் கிமீட்டருக்கும் அதிகமான தூரம் டிராவல் செய்திருக்கின்றார். இதனால்தான் அவரால் 10 லட்சம் கிமீ தூரம் டிராவலை குறுகிய காலத்தில் அவரால் மேற்கொள்ள முடிந்திருக்கின்றது. இந்த தகவல் பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மேலும், அருண் முழுமையாக நடை பயணத்தை தவிர்த்து அவர் காரிலேயே அதிகம் பயணித்திருக்கின்றார் என்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அருண் கோஷ் அந்த காரை மிக சிறப்பாக பராமரித்து வந்திருக்கின்றார். இதன் விளைவாகவே அந்த கார் இப்போதும் இயங்கும் நிலையில் இருக்கின்றது. குறிப்பாக, அதன் வெளிப்புற தோற்றம் புதிய காரை போல் தெரிகின்றது.
இதன் வாயிலாக அந்த காரை அருண் கோஷ் எந்த அளவிற்கு பராமரித்திருப்பார் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்த தகவல் ஹோண்டா கார்களுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஹோண்டா கார்களை பார்க்கும் விதத்தில் பார்த்துக் கொண்டால் காலம் கடந்து அவை நீடித்து உழைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா அக்கார்டு விற்பனையில் இல்லை. இப்போதைக்கு இந்தியாவின் செடான் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார் மாடல்களே விற்பனையில் உள்ளன. இவற்றிற்கு நாட்டு மக்கள் மத்தியில் கணிசமான நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








