என்ன, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா... இவற்றை தவிர்க்கலாமே!!
பெருகி வரும் போக்குவரத்து நெரிசலில், மன அமைதியுடன் வாகனத்தை ஓட்டுவது என்பது பலருக்கு இயலாத காரியமாகிவிட்டது. இருக்கிற டென்ஷனை பிறர் மீது பாய்ச்சுவதை பலர் தொழிலாக கொண்டுள்ளனர். சிறிய விஷயத்தையெல்லாம் பெரிதுப்படுத்துவதுடன் வாய்க்கு வந்த வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
தமிழ்நாட்டு சாலைகளில் ஊருக்கு ஒரு வசைச்சொல்லை வைத்து வரிந்து கட்டுகின்றனர். இதேபோன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் எமது வாசகர்கள் இந்த வசை வார்த்தைகளை தெரிந்து வைத்துக் கொள்வதும், அதனை தவிர்க்கும் வகையில் செல்வதும் அவசியம் என்பதை போதிப்பதற்காகவே இந்த செய்தித் தொகுப்பு.
அடுத்தவரை பார்த்து எளிதாக கூறும் வசை வார்த்தைகள், அவரை எப்படி பாதிக்கிறது என்பது, நம்மை பார்த்து ஒருவர் கூறும்போதுதான் அதன் வலி தெரியும். எது எப்படியோ, எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமலும், அடுத்தவரின் மனதை புண்படுத்தாமல் இருப்பதும் அவசியம்.

01. தமிழ்: வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?
தவறுதலாகவோ, தாறுமாறாகவோ வண்டி ஓட்டி வருபவர்களை நோக்கி வீசப்படும் வார்த்தை. கடைசியா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா என்பதை குறிப்பிடுகிறது இந்த வார்த்தை. இது அடுத்தவர்களை எந்தளவு காயப்படுத்தும் என்பதை கருதி, இதுபோன்று வசைகளை சாலைகளில் தவிர்ப்பது அவசியம். தேவையில்லாத டென்ஷனையும், பிரச்னைகளையும் குறைக்கலாம்.

02. ஹிந்தி: அபி சேல், அந்தா ஹை கியா?
டெல்லி, சாலைகளில் அடிக்கடி பயணிப்போருக்கு இந்த வார்த்தைகள் பரீட்சயமாகி இருக்கும். ஏய், நீ என்ன குருடனா? என்பதுதான் அதன் அர்த்தம். இதுபோன்று, பேசுவதால் சில சமயம் அடிதடி வரை போய்விடுவதுண்டு.

03. பெங்காலி: பகோல் சாகோ!!
கொல்கத்தாவில் இருக்கும் எமது வாசகர்கள் இந்த வார்த்தையால் சங்கடத்துக்குள்ளாகியிருப்பர். தவறுதலாக வரும் வாகன ஓட்டிகளை ஏய், பைத்தியக்கார ஆடே என்று வசைபாடுவதுதான் இது.

04. கன்னடா: த்தூ, லோஃபர் நன் மகனே!!
கன்னடத்தில் கெட்ட வார்த்தை. இதனை கர்நாடக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை காணமுடியும். எனவே, நாமும் கவனமாக செல்வதே இந்த வசைபாடுபவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி. தப்பிதவறி இந்த வார்த்தையை சொல்லிவிடாதீர். அப்புறம் கம்பெனி பொறுப்பாகாது.

05. குஜராத்தி: அபி சாலா தேகாதோ நாதி? அயின்தோ செசூ?
குஜராத்தில் இருக்கும் வாசகர்கள் இந்த வார்த்தையை கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. தாறுமாறாக செல்பவரை பார்த்து கண்மண் செல்கிறான் பார் என்று கூறுவதுதான் அது.

06. மலையாளம்: நயின்டே மோனே, முகத்து கண்ணிலேடா?
கேரளாவில் இருக்கும் எமது வாசகர்கள் இந்த வார்த்தை பிரயோகத்தை சாலைகளில் அடிக்கடி கண்டிருக்கலாம். உன்னோட முகத்தில் கண்கள் இல்லையா என்பதையே இந்த வார்த்தை குறிக்கிறது.

07. தெலுங்கு: போ ரா, யாதவா!
சாலையை மறித்துக்கொண்டு நிற்பவரைகளை பார்த்து பிரயோகப்படுத்தும் வார்த்தை இது. அதாவது, நம்மூரில், எருமைமாடு போல நிற்கிறான் பார் என்று கூறுவதைத்தான் இவ்வாறு தெலுங்கில் கூறுகின்றனர்.

08. டோண்ட் வொரி...
தாறுமாறாக ஓட்டுபவர்களும், சாலை ஒழுங்கீனம் கொண்டவர்களும்தான் இந்த வார்த்தைகளை பார்த்து அச்சப்பட வேண்டும். நீங்க ஏன் வொரி பண்றீங்க. ஆனால், அடுத்தவர்களை பார்த்து இந்த வார்த்தையை பிரயோகப்படுத்த வேண்டாம் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications








