சொந்த ஊருக்கு காஸ்ட்லீ ஆடி காரில் வந்து இறங்கிய மகன்! தீபாவளிக்காக தான் வருஷம் முழுவதும் வெயிட்டிங்!

தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நன்னாளில், பல்வேறு நகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஒளித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள். இவர்களில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஒருவர் ஆவார். ஹரியானா மாநில பானிபட் மாவட்டத்தில் உள்ள கண்ட்ரா என்கிற கிராமம் தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் சொந்த ஊர் ஆகும்.

இருப்பினும், சிறு வயதில் இருந்தே நீரஜ் சோப்ரா தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பிரிய ஆரம்பித்துவிட்டார். ஒலிம்பிக் பயிற்சிக்காக வருடக் கணக்கில் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, இப்போதும் அடிக்கடி பயிற்சிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விடுகிறார். இந்தியாவிற்கு வந்தாலும் கிராமத்திற்கு செல்லாமல் பானிபட் நகரத்தில் வசிக்கிறார்.

indian javelin thrower neeraj chopra arrived in brand-new audi rsq8 car

ஆனால் தற்போது தீபாவளிக்காக, அவர் தனது புதிய ஆடி ஆர்.எஸ் க்யூ8 என்கிற சூப்பர் எஸ்யூவி காரில் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். இயற்கை எழில் மிகுந்த கிராமத்திற்கு டிரைவர் யாரையும் வைக்காமல் தானே காரை ஓட்டி வந்துள்ளார். இதனை நீரஜ் சோப்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணத்தின் போது, "வீட்டிற்கு வருவதில் உள்ள மகிழ்ச்சி முற்றிலும் வேறுபட்டது" என்று கூறியுள்ளார். இதற்கிடையில், வீடியோவில் அவரது கிராமத்தின் அழகிய காட்சிகளும், அவரைச் சுற்றியுள்ள குழந்தைகளால் அவர் உற்சாகப்படுத்தப்படுவதும் காட்டப்படுகிறது. ஒரு இடத்தில் அவர் தனது எஸ்யூவி காரை நிறுத்தி, குழந்தைகளுடன் கைகுலுக்குவதையும் காணலாம்.

indian javelin thrower neeraj chopra arrived in brand-new audi rsq8 car

இதற்குப் பிறகு, அவர் தனது வீட்டிற்கு வந்தவுடன், அவரை வரவேற்க வாசலில் காத்திருக்கும் அவரது சகோதரர் நீரஜை கண்டவுன் கட்டியணைத்து கொண்டார். அப்போது, நீரஜ் சோப்ரா ஆண்டு முழுவதும் வீட்டிற்கு வரும் இந்த தருணத்திற்காக காத்திருப்பதாகக் கூறுகிறார். குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதும், தீபாவளி பண்டிகையின் போது இனிப்புகளை உண்டு மகிழ்வதும் உண்மையான மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த பின், வீட்டில் தீபம் ஏற்றி மகிழ்ந்துள்ளார். நீரஜ் சோப்ரா அழகான டேடோனா கிரே பேர்ல் நிறத்தில், பளபளப்பான கருப்பு அலாய் சக்கரங்கள் உடன் இந்த ஆடி காரை வாங்கியுள்ளார். இந்த லேட்டஸ்ட் தலைமுறை ஆடி ஆர்.எஸ் க்யூ8 இந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.2.49 கோடி விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

indian javelin thrower neeraj chopra arrived in brand-new audi rsq8 car

இது ஒரு பெரிய தொகை என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் அறியாதவர்களுக்காக, ஆடி ஆர்.எஸ் க்யூ8 ஆனது அடிப்படையில் ஒரு லம்போர்கினி உருஸ் ஆகும், இது ஆடி பிராண்ட் இமேஜுக்கு ஏற்றவாறு சற்றே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது லம்போர்கினி உருஸ் காரைப் போலவே அதே பவர்டிரெய்ன் மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆடி ஆர்.எஸ் க்யூ8 மற்றும் உருஸ் இரண்டும் பெரிய 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜினுடன் வருகின்றன. இந்த மோட்டார் 640 bhp மற்றும் 850 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அனைத்து சக்தியும் AWD அமைப்பின் உதவியுடன் காரின் நான்கு சக்கரங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. கியர்பாக்ஸைப் பொறுத்தவரை, இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது.

indian javelin thrower neeraj chopra arrived in brand-new audi rsq8 car

மேலும், இது ஒரு எஸ்யூவி ரக கார் என்ற போதிலும், இது 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டுகிறது. பிற அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி ஆர்.எஸ் க்யூ8 ஒரு பிரத்யேக ஷிஃப்ட் லைட் இன்டிகேட்டருடன் கூடிய 12.3 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட் உடன் வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொல்லப்போனால், இந்தியாவில் ஆடி ஆர்.எஸ் க்யூ8 காரை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்து வைத்ததே நீரஜ் சோப்ரா ஆவார். ஆதலால், அத்தகைய கார் இவரிடம் இருப்பது ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஆடி ஆர்.எஸ் க்யூ8 காரை தவிர, நீரஜ் சோப்ரா ஒரு ஃபோர்டு மஸ்டங், ரேஞ்ச் ரோவர் வேலர், ஒரு சிறப்பு பதிப்பு மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 10:59 [IST]
English summary
Indian javelin thrower neeraj chopra reached home in brand new audi rsq8 car for diwali
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X