ஏசி மட்டுமல்ல! வெளிநாட்டுல ஓடும் டிரக்குகளில் இருக்கும் எதெல்லாம் இந்திய லாரில கிடையாது தெரியுமா?

இந்தியாவில் இயங்கும் லாரிகளுக்கும் வெளிநாடுகளில் இயங்கும் டிரக்குகளுக்கும் பார்க்கும் போதே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பது நமக்கு தெரியும். இந்தியாவில் இருக்கும் லாரிகள் போதுமான வசதி இல்லாமல் இருப்பதும் வெளிநாட்டு டிரக்குகள் சொகுசு கார் போல ஏகப்பட்ட வசதிக்குழுடன் இருப்பதும் நாம் பார்த்திருப்போம். இப்படியாக இந்தியாவில் உள்ள லாரிகளுக்கும் வெளிநாட்டுகளில் உள்ள டிரக்குகளுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்து மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஒரு இடத்தில் தயார் செய்யப்படும் பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்ற விற்பனை செய்யும் போது தான் பண பரிவர்த்தனை அதிகம் ஏற்படும். இதனால் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியை சந்திக்கும். இதற்கு லாரிகள் மிக முக்கிய பங்கு வைக்கின்றன அதிகமான சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லாரிகள் தான் கொண்டு செல்கிறது.

indian lorry vs foreign truck

இந்தியா போன்ற மிக வேகமாக வளரும் நாடுகளில் லாரிகளின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இயங்கி வரும் லாரிகளையும் வெளிநாடுகளில் இயங்க இயங்கி வரும் டிரக்குகளையும் பார்க்கும்போது ஏகப்பட்ட வித்தியாசங்களை நம்மால் காண முடியும். சொகுசு கார் போன்ற வசதிகளை கொண்டதாக இருக்கும். டிரக்குகளிலேயே வாழும் குடும்பங்கள் கூட வெளிநாடுகளில் இருக்கின்றன.

இந்திய லாரிகளில் அடிப்படை தேவையான வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் நிலையில் வெளிநாட்டு டிரக்குகளில் பல்வேறு அம்சங்கள் இருப்பதால் வெளிநாட்டு டிரக்குகளில் உள்ள அம்சங்கள் எது எல்லாம் இந்தியாவில் இல்லை என்ற விபரங்களையும் இந்திய லாரிகளில் எது எது அடிப்படை தேவை என்ற விபரங்களையும் இங்கே விரிவாக பார்ப்போம்.

indian lorry vs foreign truck

வெளிநாட்டு டிரக்குகள் பெரிதாகவும் சகல வசதிகளையும் கொண்ட கேபின் அமைப்புகளை கொண்டதாக இருக்கும். முக்கியமாக இதில் வென்டிலேட்டர் சீட்டுகள் மற்றும் ஏசிகள் பொருத்தப்பட்டிருக்கும். சில லாரிகளில் படுக்கை வசதி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன், டிவி, உள்ளிட்ட வசதிகள் இருக்கும். சில லாரிகளில் வெளியில் இருக்கும் சத்தம் உள்ளே கேட்காத அளவிற்கு இன்சுலேஷன் செய்யப்பட்டிருக்கும். இதனால் சொகுசான ரைடிங் அனுபவம் கிடைக்கும்.

இந்திய லாரிகளை பொறுத்தவரை சிறிதாகவும் வசதி இல்லாத கேபின் அமைப்புதான் வழங்கப்பட்டிருக்கும். இதில் பெரும்பாலும் படுக்கை வசதி பிரிட்ஜ் உள்ளிட்ட வெளிநாட்டில் டிரக்குகளில் இருக்கும் எந்த வசதிகளும் இருக்காது. மேலும் இந்த லாரிகளுக்குள்ளே அதிகமான அதிர்வுகள் மற்றும் சத்தம் கேட்கும் வகையில் தான் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

indian lorry vs foreign truck

வெளிநாடுகளில் பவர்ஃபுல்லான இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகியவை இருக்கும். இதனால் எளிதாக டிரைவர்களால் இயக்க முடியும். இது போக பாதுகாப்பு அம்சத்திற்காக க்ரூஸ் கண்ட்ரோல், லேண்ட் டிபார்ச்சர், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், உள்ளிட்ட அம்சங்களும் இருக்கும். இதனால் வெளிநாட்டு லாரிகள் அதிக பாதுகாப்பாக இருக்கின்றது.

இந்திய லாரிகளில் உள்ள இன்ஜின் அதிக பவர் இல்லாமல் இருக்கிறது. இதுபோக மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட லாரிகள் பயன்பாட்டிற்கு அதிக அளவில் வரவில்லை. பாதுகாப்பு அம்சங்களும் மிக குறைவாக இருக்கிறது. சஸ்பென்ஷனும் ஹார்டாக இருக்கும். இந்திய லாரிகளை கையாள்வது சிரமமான விஷயமாக இருக்கும்.

வெளிநாட்டு டிரக்குகளில் ஜிபிஎஸ் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் சொகுசான சீட்டிங் வசதி பொருட்களை வைக்க போதுமான ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்று இருக்கும். ஆனால் இந்திய லாரிகளில் இது போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் எதுவும் இருக்காது. அடிப்படையான டெக்னிக்கல் தேவை உள்ள அம்சங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். சீட்டிங் எல்லாம் சொகுசான சீட்டிங் இருக்காது, ஸ்டோரேஜ்க்கு அதிக இடம் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓடும் லாரிகள் அதிக பட்ஜெட் கணக்கை வைத்து உருவாக்குவதை இதனால் இந்த லாரிகள் வசதிகள் குறைவாக இருக்கிறது. இந்திய லாரிகளை விட வெளிநாட்டுக்குகள் அதிக விலை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் லாரிகளுக்கான பட்ஜெட் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்களால் இந்த சொகுசு லாரிகளை இந்தியாவில் கொண்டுவர முடியவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, July 21, 2024, 20:00 [IST]
English summary
Indian lorry vs foreign truck differences
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X