சமூக நலனுக்காக பைக் பேரணி நடத்திய இந்தியன் மோட்டர்சைக்கிள் குழு!

பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி ஒரு மோட்டார்சைக்கிள் பேரணியை நிகழ்த்தியிருக்கிறது இந்தியன் மோட்டார்சைக்கிள் குழு. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

அமெரிக்காவின் முதல் மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்ற பெருமை பெற்றது நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த 'இந்தியன் மோட்டார்சைக்கிள்' நிறுவனம். 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலும் தனது பைக்குகளை விற்பனையில் களமிறக்கியது இந்த நிறுவனம். இந்த பைக்குகளுக்கென பிரத்யேக ரைடர்கள் குழு இந்தியாவில் இயங்கி வருகிறது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

மிகுந்த விலை மதிப்பு கொண்ட இந்தியன் பைக்குகளின் உரிமையாளர்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர். இதனையொட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் யூனியன் பிரதேசமான டாமனில் முதல் முறையாக இக்குழுவினர் தங்களது மோட்டார்சைக்கிள்களில் பேரணியாக சென்றனர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

தற்போது மீண்டும் இவர்கள் ஒன்றுகூடி சமூக பொறுப்புடன் கூடிய

மோட்டார்சைக்கிள் பேரணி ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இந்த பேரணி மகராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் எனும் ஊரில் கடந்த மார்ச் 6ஆம் தேதியில் நடந்துள்ளது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ‘வீல்ஸ் ஆஃப் சேஞ்ச்' என்ற பெயரிலான இந்தியன் மோட்டார் சைக்கிள் குழுவினரின் பேரணி 300 பெண் குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளையும் இவர்கள் புரிந்துள்ளனர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

பைக் பேரணியின் ஒரு பகுதியாக பஞ்ச்கனி என்ற சிற்றூரில் இயங்கும் கல்வி நிலையத்திற்கு இக்குழுவினர் வருகை புரிந்தனர். இலவச ஆங்கில வழிக்கல்வி பயிற்றிவிக்கப்படும் இங்கு 700 மாணவர்கள் படித்து வருகின்றனர், இதில் 350 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

இந்த கல்வி நிலையம் படிக்கவைக்க இயலாத சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. இதனை லஷ்மன் பார்த்தே மற்றும் சுதிர் பார்த்தே ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

இந்த பேரணி குறித்து இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ள பொலாரிஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் துபே கூறுகையில், "சமூக பொறுப்புடன் கூடிய இந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து நகரங்களிலும் இருந்து ரைடர்கள் கலந்துகொண்டனர்".

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

"சமூகம் சார்ந்த நல்ல ஒரு நிகழ்வினை நடத்த தீர்மானித்து பெண் குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்பேரணியில், இலவசமாக கல்வி அளித்து வரும் இக்கல்விநிலையத்தின் சேவையை எண்ணி பூரிப்படைந்தோம், இந்த நிகழ்வு எங்களை அடுத்த நிலைக்கு இட்டுச்சென்றது" என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

மேலும் அவர், இப்பயணம் இதோடு நின்றுவிடாமல் மேலும் விரிவடைந்து நாட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு கல்வி எந்த அளவுக்கு தேவையான ஒன்று என்ற விழுப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றார்.

இந்தியன் மோட்டார்சைக்கிள் பைக் குழுவினரின் சமூக தொண்டு!

இந்நிலையில், மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது நினைவுகூறத்தக்கது.

பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்க்ளை கீழே உள்ள கேலரியில் காணலாம்:

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2017, 13:04 [IST]
English summary
The second National Ride of Indian Motorcycle Riders Group (IMRC) was held to spread awareness for the education of a Girl child.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+