இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் குறித்த முக்கிய தகவல்கள்!

By Saravana Rajan

Destroyer ship வகையில் குறிப்பிடப்படும் 4 போர்க்கப்பல்களை இந்தியா சொந்தமாக தயாரித்து வருகிறது. அதில், முதலாவது கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் தற்போது இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கிறது.

பி15ஏ குடும்ப வரிசையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டதாக இந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்திய கடற்படையின் பலத்தை கூட்ட வரும் இந்த புதிய போர்க்கப்பல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 தேங்காய் உடைத்து...

தேங்காய் உடைத்து...

கடந்த ஆண்டு இந்த புதிய ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பல் கடலில் இறக்கப்பட்டது. அப்போது இந்த போர்க்கப்பலை தேங்காய் உடைத்து, ஆரத்தி காண்பித்து பூஜைகள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், வெளிநாடுகளில் போர்க்கப்பலை இதுபோன்று தண்ணீரில் இறக்கும்போது சாம்பைன் பாட்டிலை கட்டுவது வழக்கம்.

கட்டுமான தளம்

கட்டுமான தளம்

இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய போர்க்கப்பல் மும்பையிலுள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த புதிய போர்க்கப்பலை டெல்லியில் உள்ள இந்திய கடற்படை வடிவமைப்பு இயக்குனரகம் வடிவமைத்துள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அணுகுண்டு தாக்குதல், ரசாயனம் மற்றும் உயிரி தாக்குதல்கள் நடத்தப்பட்ட சூழல்களில் கூட இதனை இயக்க முடியும். மேலும், எதிரி நாட்டு ரேடார்களில் இது எளிதில் சிக்காத வடிவமைப்பு மற்றும் அம்சங்களை கொண்டது.

4 கப்பல்கள்

4 கப்பல்கள்

15B என்ற குடும்ப வரிசையில் தயாரிக்கப்படும் 4 போர்க்கப்பல்களில் முதலாவதாக உருவாக்கப்பட்டிருக்கும் போர்க்கப்பல்தான் ஐஎன்எஸ் விசாகப்பட்டணம். 2018ம் ஆண்டில் இது கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

 இதர கப்பல்கள்

இதர கப்பல்கள்

ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலை தொடர்ந்து, 2020ம் ஆண்டில் ஐஎன்எஸ் பிரதீப் என்ற கப்பலும், 2022ம் ஆண்டில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பலும் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அடுத்ததாக, 4வது கப்பலுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த கப்பல் 2024ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மிகப்பெரிய டெஸ்ட்ராயர்

மிகப்பெரிய டெஸ்ட்ராயர்

அதிவேகமாகவும், எளிதாகவும் திருப்பக்கூடிய சிறிய வகை தாக்குதல் போர்க்கப்பல்களை டெஸ்ட்ராயர் என்று அழைக்கின்றனர். இந்த வகை போர்க்கப்பல்களில் இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த கப்பல் அதிகபட்சமாக 3000 டன் எடை கொண்டது. ஆயுதங்கள், இதர பொருட்களுடன் சேர்த்து அதிகபட்சமாக 7,300 டன் எடை வரை கொண்டதாக இயக்க முடியும். இந்த போர்க்கப்பல் 17.4 மீட்டர் நீளம் கொண்டது. 50 அதிகாரிகள் மற்றும் 250 பணியாளர்களை இந்த போர்க்கப்பல் கொண்டிருக்கும்.

 பயணிக்கும் திறன்

பயணிக்கும் திறன்

இந்த போர்க்கப்பலில் 4 கேஸ் டர்பைன் எஞ்சின்கள் மூலமாக இயக்கப்படுகிறது. அதிகபட்சமாக 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். அதிகபட்சமாக 1,000 டன் எரிபொருளை வைத்து செல்லும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல் 4,000 நாட்டிக்கல் மைல் தூரம் வரை பயணிக்கும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

உலகிலேயே அதிக ஆயுதங்கள் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கூறப்படுகிறது. விமான எதிர்ப்பு பீரங்கிகள், 30மிமீ விட்டம் கொண்ட துப்பாக்கிகள், எம்ஆர் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த போர்க்கப்பலில் 32 பாரக்-8 நீண்ட தூர ஏவுகணைகள், 16 பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகள், 100 கிமீ தூரத்திற்கு அப்பால் வரும் எதிரி போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தண்ணீருக்குள்ளேயே பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

தண்ணீருக்குள் ஏவுகணையை செலுத்தும் டர்பிடோ ராக்கெட் லாஞ்சர்கள், சாதாரண வகை ராக்கெட் லாஞ்சர்கள், பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், கப்பலை நோக்கி வரும் ஏவுகணைகளை கண்டறிந்து சுட்டு வீழ்த்தக்கூடிய பெல் நிறுவனமும் கன் ஷெல் ஃபேக்டரியும் இணைந்து உருவாக்கிய க்ளோஸ் இன் வெப்பன் சிஸ்டம், நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் சோனார் கருவி, முன்கூட்டியே எச்சரிக்கும் எல்லோரா வார்னிங் சிஸ்டம் போன்றவை இந்த போர்க்கப்பலின் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

உலகின் காஸ்ட்லியான ராணுவ வாகனங்கள்

உலகின் காஸ்ட்லியான ராணுவ வாகனங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2016, 12:59 [IST]
English summary
Indian Navy’s Biggest Destroyer INS Visakhapatnam.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+