வியட்நாமிற்கு இந்தியா வழங்கிய ஆயுதம் தாங்கிய போர் கப்பல்; உச்சகட்ட பயத்தில் சீனா!

இந்தியா வியட்நாமிற்கு ஐஎன்எஸ் கிர்பான் என்ற போர்க்கப்பலை பரிசாக வழங்கியுள்ளது. இந்திய கடற்படையை பாதுகாத்து வந்த இந்த போர்க்கப்பல் தற்போது சீனாவிற்கு பயம் காட்டுவதற்காக வியட்நாமிற்கு சென்றுள்ளது. இந்த போர்க்கப்பலில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான விபரங்களை காரணம் வாருங்கள்.

வியட்நாம் என்ற நாடு தென்கிழக்கு ஆசிய கண்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடக்கு பகுதி சீன நாட்டின் எல்லையுடன் பகிரப்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதிக்கும் வியட்நாம் நாட்டிற்கும் எல்லை பகிரப்படுவதால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

ins kirpan gifted to vietnam

இந்நிலையில் கடந்த 1979 ஆம் ஆண்டு இந்த இரு நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் போர் வெடித்தது. இந்தப் போரில் இந்தியா வியட்நாமிற்கு தான் ஆதரவாக இருந்தது. இந்திய ராணுவம் சார்பில் பல்வேறு ராணுவ உதவிகளும் வழங்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் வரை இந்த போர் நீடித்தது. இந்த போரில் சீனா, இந்திய ராணுவத்தால் பெரும் பின்னடைவை சந்தித்தது.

இதன் பிறகு சீனா வியட்நாம் கடல் எல்லையில் அவ்வப்போது பதற்றம் ஏற்படும் இரு நாடுகளும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபடும். இந்நிலையில் வியட்நாமிற்கு கடற்பலையில் இந்தியாவும் அதிகமான உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒருபடியாக தற்போது வியட்நாம் நாட்டிற்கு இந்தியா பயன்படுத்தி வந்த கிர்பான் என்ற போர்க்கப்பலை பரிசாக வழங்கியுள்ளது.

ins kirpan gifted to vietnam

இந்த கிர்பான் என்ற போர்க்கப்பல் சுமார் 1350 தன் எடை கொண்டது இது 91.1 மீட்டர் நீளமும் 10.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கப்பலில் இரண்டு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது கப்பலுக்கு 14,400 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் இரண்டு சாஃப்டுகளால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இந்த இன்ஜினை பயன்படுத்தி 25 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் அதாவது 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இது கடலில் வேகமாக பயணிக்கும் கப்பல்களில் ஒன்று. இந்தக் கப்பலில் ஏகப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் மொத்தம் மூன்று ரேடர்கள் பொருத்தப்பட்டுள்ளது. எம் ஆர் 352 பாஸிடிவ் இ-ரேடார், கிர்பான் பால் ரைடர், பாரத் 1245 நேவிகேஷன் ரேடார் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது. இது போக பல்வேறு ஆயுதங்களும் இந்த கப்பலில் எதிரிகளை தாக்குவதற்காக பொருத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலை கண்டு எதிரிகள் இந்தியா பக்கம் வருவதற்கே அஞ்சினர்.

அதன்படி எதிரி கப்பல்களை தாக்கும் நான்கு பி 20 எம் ஆன்ட்டி ஷிப் மிசெல், எதிரியின் விமானங்களை தாக்கும் இரண்டு சர்ஃபேஸ் டு ஏர் மிசெல். 76 எம்எம் கொண்ட ஏகே 176 ரக துப்பாக்கி ஒன்று, ஏகே 650 ரக 30 எம் எம் துப்பாக்கி இரண்டு ஆகிய ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிரிகளை தடம் தெரியாமல் அழித்து விட முடியும்.

இது எல்லாம் போக இந்த கப்பலிலேயே இந்தியாவின் ஹச்ஏஎல் நிறுவனத்தின் தயாரிப்பான சேத்தக் ரக ஹெலிகாப்டர் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. நடுக்கடலிலிருந்து இதை ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆகி வான்வெளிதாக தாக்குதல்கள் மற்றும் கண்காணிப்பிற்காக பயன்படுத்தப்படும். இதுவும் இந்த கப்பலின் முக்கியமான ஒரு அம்சமாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகளின் அமைதிக்காக ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு ஆயுதங்களை பரிசாக வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது அப்படியாக தான் இந்தியா வியட்நாமிற்கு இந்த பரிசை வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் நிச்சயமாக சீனா போன்ற நாடுகள் வியட்நாம் மீது கடல் வழியாக தாக்குதல் நடத்த யோசிக்க வைக்கும் நிச்சயமாக இந்த கப்பலை பார்த்து சீன கடற்படை அஞ்சி நடுங்கும் என்பது அச்சமில்லை

More from DriveSpark

Article Published On: Monday, July 24, 2023, 11:45 [IST]
English summary
Indian navy missile boat kirpan gifted to vietnam full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+