41வருட சேவை! இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர் கப்பல் விடுவிப்பு! மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு

41 ஆண்டு கால சேவைக்கு பின்னர் ஐஎன்ஸ் ராஜ்புத் போர் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போர் கப்பல்குறித்த சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம்.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

எதிரி நாடுகளை மிரள செய்யும் வகையில் நாட்டின் கடற்படையில் இருந்த போர்க்கப்பல் ஐஎன்எஸ் ராஜ்புத். நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் இதுவாகும். முந்தைய சோவியத் ஒன்றியத்தால் கட்டப்பட்ட போர்க் இது 41 ஆண்டுகளாக சேவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இக்கப்பல் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

நெடுந்தூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரஹ்மோஸ் மிசைல், நீருக்குள்ளேயே சென்று தாக்கி அழிக்கும் ஏவுகனைகள், விமானத்தை தாங்கி திற்கும் திறன், குண்டு மழையே பொழிந்தாலும் தாங்கிக் கொள்ளும் வசதி என பல்வேறு அதி திறன்களைக் கொண்ட கப்பலே இது.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட கப்பலையே கடற்படை நேற்று (வெள்ளிக்கிழமை) விடுவிப்பதாக அறிவித்தது. இதற்கான விழா விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்தில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இவ்விழா மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பற்படையில் இருந்து விளக்கும் விதமாக அக்கப்பலில் இருக்கும் கடற்படை கொடி இன்று சூரியன் மறையும் நேரத்தில் இறக்கப்பட இருக்கின்றது. இதன்பின்னர் முழுமையாக கடற்படையில் இருந்து விலகி ஐஎன்எஸ் ராஜ்புத் ஓய்வெடுக்கும்.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

ரஷ்யாவின் கஷின் ரகத்தைச் சேர்ந்த இந்த போர்க்கப்பல் கடந்த 1980ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி அன்றே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை அப்போதைய ரஷியாவுக்கான இந்திய தூதர் ஐகே குஜ்ரால் கடற்படையில் இணைத்தார்.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

தற்போது வரை இக்கப்பலில் 31 தலைமை அதிகாரிகளாக பணியாற்றியிருக்கின்றனர். மேலும், இதுவரை 7,87,194 நாடிக்கல் மைல் தூரம் வரை பயணித்திருக்கின்றது. இந்த இடைவெளியானது பூமியில் இருந்து நிலவிற்கு 3.8 முறை சென்று வரும் இடைவெளி ஆகும். இதேபோன்று. உலகளவில் கணக்கிட்டால் 36.5 முறை பூமியை சுற்றி வந்ததற்கு இது சமம் ஆகும்.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

இதேபோன்று, பல்வேறு மிஷன்களில் இக்கப்பல் தனது பங்கினை வகித்திருக்கின்றது. ஐபிகேஎஃப் (Indian Peace Keeping Forces), ஆபரேஷன் காக்டஸ் (மாலத்தீவில் இருந்த பிணயக் கைதிகளை மீட்க) மற்றும் ஆபரேஷன் கிரவுஸ்நெஸ்ட் (Crowsnest) போன்ற மிக முக்கியமான மிஷன்களில் ஐஎன்எஸ் ராஜ்புத் பங்கேற்றியிருக்கின்றது.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

இதுமட்டுமின்றி பல்வேறு பேரிடர் மீட்பு பணிகளிலும் இக்கப்பல் தனது பங்கினை வகித்திருக்கின்றது. அந்தவகையில், 1999ல் ஒடிசாவை புயல் தாக்கியபோது, சுனாமியால் ஏற்பட்ட சேதத்தின்போது மற்றும் எச்ஏடிஆர் (HADR) மிஷன் போன்ற பேரிடர் மீட்பு பணிகளில் ஐஎன்எஸ் ராஜ்புத் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

இவ்வாறு பல்வேறு பணிகளில் ஓடி ஓடி உழைத்த கப்பலே தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தகவல் கப்பலில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கன்றது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார்.

41 வருட சேவை... இந்திய கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் விடுவிப்பு... மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு!

இக்கப்பலின் முதல் கமேண்டர் கேப்டைன் குலாப் மோஹன்லால் ஹிரநந்தனி ஆவார். இவரைத் தொடர்ந்தே இதுவரை ஒட்டுமொத்தமாக 31 பேர் கமேண்டராக பணியாற்றியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Navy's First Destroyer INS Rajput DeCommissioned After 41 Years Of Service. Read In Tamil.
Story first published: Saturday, May 22, 2021, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X