26 ரஃபேல் எம் விமானம்,3 நீர் மூழ்கி கப்பலை வாங்கப்போகும் இந்திய அரசு! யாருக்கிட்டேயிருந்து தெரியுமா?

இந்திய அரசு பிரான்ஸ் நாட்டிடமிருந்து 26 மெரைன் ரஃபேல் விமானங்களையும் மூன்று கல்வேரி கிளாஸ் நீர்மூழ்கி கப்பலையும் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. மெரைன் ரஃபேல் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் பயன்படுத்தப்பட உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்க ஆயுதங்கள்ல விமானங்கள்,போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதற்காக இந்தியா மற்ற நாடுகளுடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவிற்கு தேவையான ராணுவ தளவாட பொருட்களை வாங்கி வருகிறது.

rafale m deal

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் 13 மற்றும் 14ஆம் தேதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிருக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும்-பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோரும் முக்கியமான சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். அதில் இந்திய கடற்படைக்கான ஒப்பந்தமும் முக்கியம் பெறுகிறது.

அதன்படி கடல் வழியே பாதுகாப்பை மேம்படுத்த சீனாவிடமிருந்து எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரு நாடுகளும் சுதந்திரமாக கடல் வழி போக்குவரத்தை மேற்கொள்ள சில ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளன. அதற்கு அடுத்ததாக இந்தியாவின் ராணுவ தளவாட சேர்ப்பு கவுன்சில் மூலம் ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சில ஒப்பந்தங்களை கையெழுத்திடவுள்ளார்.

rafale m deal

அதன்படி இந்திய அரசு பிரான்ஸ் அரசு மூலம் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் 26 ரஃபேல் எம் ரக ஃபைட்டர் ஜெட் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளனர். ரஃபேல் எம் ரக விமானங்கள் என்றால் அது விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்கி ஏற ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட விமானங்கள் ஆகும்.

இந்த விமானங்களை இந்திய ராணுவம் தனது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் வைத்து இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிரான்ஸ் அரசு மூலம் இந்த விமானத்தை இந்திய அரசு வாங்க முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்ல மேக் இன் இந்தியா திட்டத்தின் படி மும்பையில் உள்ள எம்டிஎல் கப்பல் கட்டும் ஆலையில் கல்வேரி கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல், மூன்று கப்பலை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

rafale m deal

தற்போது மும்பை கப்பல் கட்டுமான அரங்கில் ஐஎன்எஸ்விக்ஷீர் என்ற நீர்மூழ்கி கப்பல் கட்டமைக்கப்பட்டு வருகிறது தற்போது இந்த கப்பல் சோதனை மற்றும் ட்ரையல் முயற்சியில் இருக்கிறது. வரும் 2024 ஆம் ஆண்டு இந்த கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட உள்ள கல்வேரி கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓ வடிவமைத்ததாகும். இந்த கப்பலை கட்டுமானம் செய்து சோதனை செய்து அதன் உறுதி தன்மையை உறுதி செய்தது பிரான்ஸ் நாட்டின் கடற்படையாகும்.

இந்தக் கல்வேரி கிளாஸ் நீர் மூழ்கிக் கப்பல் ஏஐபி எனப்படும் ஏர் இண்டிபெண்டன்ட் புரோபல்ஷன் மூலம் இயங்கும் திறன் கொண்டது. இந்த ரக நீர் மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியில் சுமார் ஒரு வாரம் வரை எந்தவித தேவையும் இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது. மற்ற கப்பல்கள் அவ்வப்போது பேட்டரி மாற்ற நீரிலிருந்து வெளியே வர வேண்டும் ஆனால் இந்த கப்பலுக்கு அந்த தேவை கிடையாது.

26 ரஃபேல் விமானங்களை பொறுத்தவரை அது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்களில் தான் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரக விமானங்கள் எல்லாம் சிங்கிள் சீட்டர் விமானங்களாக கட்டமைக்கப்படுகின்றன. இந்த விமானத்தை ஓட்டி பயிற்சி பெற இந்தியாவிலிருந்து விமானிகள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று பயிற்சி பெற உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த விமானம் குறித்த சிமுலேட்டர் ஒன்று கோவாவில் நிறுவப்பட உள்ளது. விமானிகள் இந்த சிமுலேட்டர் மூலமும் தங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். மொத்தம் வாங்க உள்ள 26 விமானங்களில் 18 விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நிறுத்தப்படும் மற்ற எட்டு விமானங்கள் கோவாவில் உள்ள ரிசர்வ் இடத்தில் நிறுத்தப்படும்.

ரிசர்வ் இடத்தில் உள்ள விமானங்கள் அவ்வப்போது சுழற்சி முறையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுக்கு சென்று வரும். நீர்மூழ்கிக் கப்பலும் இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்கும் உள்ளே உள்ள தொடர்பு மூலம் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த கப்பல்கள் தயாரானால் இந்திய பெருங்கடல் முழுவதும் சுலபமாக இந்திய கடற்படையின் கட்டுப்பாடுக்கு வந்துவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தனது ராணுவ பலத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 26 ரஃபேல் எம் ரக விமானங்களை வாங்கி இந்திய கடற்படையை மேம்படுத்த உள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு கடல் வழியாக எந்த ஆபத்து வந்தாலும் எதிரிகளை சுலபமாக இந்திய ராணுவத்தால் வீழ்த்தி விட முடியும்.

Article Published On: Monday, July 10, 2023, 20:51 [IST]
English summary
Indian navy to receive 26 rafale m fighters and 3 attack submarines from france
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X