இந்தியா மேல கை வெச்சா என்ன நடக்கும்னு காட்டனும்!! அரபிக்கடலில் கம்பீரமாக நிற்கும் 3 இந்திய போர்க்கப்பல்கள்!!
அரபிக்கடல் (Arabian Sea)-இல் இந்தியாவின் மங்களூர் துறைமுகம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எம்.வி.கெம் ப்ளூட்டோ என்ற வணிகக்கப்பலின் மீது மர்ம நபர்கள் சிலர் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர்களை கண்டிக்கும் விதமாக, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில், செங்கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு, வழக்கத்தை காட்டிலும் இந்திய கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரபிக்கடலில் இந்திய கடல் எல்லை பகுதியில் இந்திய கப்பற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் மோர்முகோவ், ஐ.என்.எஸ் கொச்சி மற்றும் ஐ.என்.எஸ் கொல்கத்தா என 3 போர்க்கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இவை மூன்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐ.என்.எஸ் மோர்முகோவ்: விமான எஃகு, தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்கள் மற்றும் எடை குறைவான இலகுவான பொருட்கள் என மூன்றும் கலந்த கலவை இதுவாகும். 75% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் உள்ள ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் அனைத்தும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
2016 செப்டம்பர் 17ஆம் தேதி இந்த போர்க்கப்பல் அறிமுகம் செய்யப்பட்டாலும், 2021 டிசம்பர் 19ஆம் தேதி தான் இந்த கப்பல் கடலில் ஓட்டிப் பார்த்து ஐ.என்.எஸ்-ஆல் சோதனை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலில் ஏறக்குறைய 300 பணியாளர்கள் பணியாற்றுக்கின்றனர். இந்திய கடற்படையில் எந்தவொரு மிஷனுக்கும் பயன்படுத்தக்கூடியதாக மோர்முகோவ் விளங்குகிறது.

ஐ.என்.எஸ் கொச்சி: இந்தியாவில் உருவாக்கப்பட்ட மற்றொரு ஆற்றல்மிக்க போர்க்கப்பல். 164 மீட்டர்கள் நீளம் மற்றும் ஏறக்குறைய 17 மீட்டர்கள் அகலம் கொண்ட இந்த கொச்சி போர்க்கப்பலில் 7,500 டன் வரையிலான சுமையை ஏற்றிச் செல்லலாம். இரு கேஸ் டர்பனைஸ் மூலமாக இந்த கப்பலுக்கு உந்துவிசை கிடைக்கிறது.
இந்த போர்க்கப்பலினால் அதிகப்பட்சமாக மணிக்கு 30 க்னாட்ஸ் வேகத்தில் இயங்க முடியும். இந்த கப்பலுக்கான மின்சார ஆற்றலை வழங்க 4 கேஸ் டர்பைன் ஜெனரேட்டர்கள் மற்றும் ஒரு டீசல் ஆல்டர்னேட்டர் உள்ளது. இவை மொத்தமாக 4.5 மெகா-வாட்ஸ் வரையில் எலக்ட்ரிக் ஆற்றலை வழங்கக்கூடியவை ஆக உள்ளன. இந்த கப்பலில் 40 அதிகாரிகள் மற்றும் 350 மாலுமிகள் பணியாற்றுக்கின்றனர்.

ஐ.என்.எஸ் கொல்கத்தா: இது பிராஜெக்ட்-15ஏ வகுப்பை சேர்ந்த அழிக்கும் போர்க்கப்பல் ஆகும். இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட முதல் போர்க்கப்பல். இதில் மாடர்ன் தரத்திலான ஆயுதங்களும், சென்சார்களும் உள்ளன. இதன் மூலமாக, எந்தவொரு திசையில் இருந்து ஆபத்து வந்தாலும் இந்த போர்க்கப்பலினால் அடையாளம் காண முடியும்.
ஐ.என்.எஸ் கொச்சியை போலவே, இந்த போர்க்கப்பலிலும் 4 ஆற்றல்மிக்க கேஸ் டர்பைன்ஸ் உள்ளன. மேலும், இந்த போர்க்கப்பலினாலும் மணிக்கு 30 க்னாட்ஸிற்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால், இயக்க ஆற்றல் அளவுகளிலும் கூட இந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ் கொச்சிக்கு இணையானதாக உள்ளது. ஆனால், இந்த கொல்கத்தா போர்க்கப்பலில் 30 அதிகாரிகள் மற்றும் 300 மாலுமிகள் மட்டுமே பணியாற்றுக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கடற்படையின் முக்கியமான 3 போர்க்கப்பல்களாக இவற்றை சொல்லலாம். இதில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதலை மத்திய அரசாங்கம் முக்கிய விஷயமாக பார்ப்பதை உணர முடிகிறது. ஆனால் அதேநேரம், இந்திய கடற்படையில் மேலும் பல போர்க்கப்பல்களும் பயன்படுத்தப் படுகின்றன.


Click it and Unblock the Notifications









