கோடி கணக்கில் அபராதம் போட்ட மத்திய அரசு! இனி பெட்ரோல் பங்க்ல இந்த சேஃப்டி இருக்கான்னு செக் பண்ணுங்க!
இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சில்லறை விநியோக மையத்தில் பெட்ரோல் மூலம் வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்தும் கருவி பொருத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் மாசு ஏற்படுவதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பல விதிமுறைகளையும் வகுத்துள்ளது. பெரும்பாலான மாசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் தான் ஏற்படுகிறது என்பதால் இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதற்கு தகுந்தார் போல் வாகனங்கள் தயார் செய்யப்படுகிறது. அதே நேரம் பெட்ரோல் பங்குகளில் சேமிக்கப்பட்டு இருக்கும் பெட்ரோல் மூலம் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பங்குகளில் பேப்பர் ரெக்கவரி சிஸ்டம் என்ற கருவியை பொருத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எல்லாம் இருக்கும். பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருளை சில்லறை விநியோக நிறுவனங்கள் பூமிக்கு அடியில் பெரிய டேங்க் ஒன்றை கட்டி அதில் நிரப்பி அதன் மூலம் தான் சில்லறை விநியோகத்தை செய்து வருவார்கள். இப்படியாக பூமிக்கு கீழே உள்ள டேங்கில் ஏற்படும் வெப்பம் காரணமாக அதில் தேங்கியுள்ள பெட்ரோல் டீசல் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கலக்க துவங்கும்.
இதனால் அப்பகுதி அதிகமான நெருப்பு பற்றிக் கொள்ளும் காற்றாக மாறும். இதை தடுப்பதற்காக பெட்ரோல் பம்புகளின் ஒரு கருவி ஒன்றைப் பொருத்துவார்கள். அந்த கருவி ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும் போதும் வெளியில் உள்ள காற்றை எடுத்து டேங்க் பகுதிக்கு கொண்டு சென்று அங்கு ஏற்கனவே காற்றில் கலக்க தயாராக இருக்கும். வேப்பர்களை எடுத்து மீண்டும் அதை ஒருங்கிணைத்து பெற்ரோலாக மாற்றி அதை மீண்டும் பெட்ரோலுடனே கலந்து விடும்.
இந்த கருவி பொருத்துவதன் மூலம் மிகக் குறைவான பெட்ரோல் வீணாவதை பெட்ரோல் நிறுவனங்களால் தவிர்க்க முடியும். அதே நேரம் பெட்ரோல் பங்க் பகுதியை சுற்றியுள்ள காற்று மாசடைவதை பெரும் அளவில் தவிர்க்க முடியும். இதனால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் பங்குகளில் இந்த கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என விதிமுறைகளை வகுத்துள்ளது.
இந்நிலையில் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் டெல்லியின் பெருநகரப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இப்படியாக பேப்பர் ரெகவரி சிஸ்டம் கருவிகளை பொருத்தவில்லை என கூறப்படுகிறது. இதை எடுத்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு கோடியும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ரூபாய் 2 கோடியும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் பம்புகளில் இப்படியாக பேப்பர் ரெகவரி சிஸ்டத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான பெட்ரோல் ஸ்டேஷன்களில் இது பொருத்தப்பட்டு விட்டது. தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் இரு நிறுவனங்களும் வழக்கு தொடர்ந்து உள்ளன. அதில் தங்களுக்கு இந்த கருவிகளை பொருத்த இன்னும் கால அவகாசம் வேண்டும் என இரு நிறுவனங்களும் கேட்டுள்ளன.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த கருவியை பொருத்துவதன் மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு காற்றில் கலந்து வீணாகும் பெட்ரோலின் அளவு குறையும் அதே நேரம் காற்று மாசுபடாமல் இருக்கும் இதனால் இந்த கருவை கட்டாயம் பொருத்த வேண்டும். என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் சில்லறை விநியோக நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கருவியை தங்கள் தயாரிப்பு மையம் மற்றும் ஸ்டாக் வைக்கும் மையங்களில் நிச்சயம் பொறுத்து இருப்பார்கள். இதன் மூலம் ஏகப்பட்ட பெட்ரோல் காற்றில் கலப்பதை தடுக்க முடியும். ஆனால் சில்லறை விநியோக மையங்களில் இது ஒரு தேவையில்லாத செலவாக கருதுகின்றனர். இதன் மூலம் பெரிய அளவில் பெட்ரோலை சேமிக்க முடியாது என்பதால் இதை பொருத்த பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்


Click it and Unblock the Notifications








