மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

நாட்டின் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டூர் மெக்கானிக் சேவையைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

நாட்டின் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனமே டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை வீட்டுக்கே உணவுகளை அனுப்பி வைப்பதைப் போல் மெக்கானிக்குகளை வீட்டுக்கே அனுப்பி வைத்து சர்வீஸ் செய்யும் சேவையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொடங்கியுள்ளது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இதற்காக தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் 'ஹோம் மெக்கானிக்' எனும் நிறுவனத்துடன் அது கூட்டணி வைத்துள்ளது. ஆயில் நிறுவனம் இதுமாதிரியான சேவையில் களமிறங்குவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் டூர் டெலிவரி ஆயில் சேவையைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இதைத்தொடர்ந்தே வீட்டுக்கே மெக்கானிக்குகளை அனுப்பி வைத்து சர்வீஸ் செய்யும் சேவையை அது தொடங்கியிருக்கின்றது. இந்த சேவைக்கு ஹோம்-மெக்கானிக் இந்த் என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. மேலும், இந்த சேவை முதல்கட்டமாக தலைநகர் டெல்லியில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இந்த சிறப்பு சேவைக்காக ஓர் மெக்கானிக்கிற்கு தேவையான கருவிகளும் கொண்ட மினி வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஈகோ அடிப்படையிலான வாகனம் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இதுவே, மொபைல் சர்வீஸ் மையமாக செயல்பட இருக்கின்றது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களைச் சர்வீஸ் செய்வதற்கான அனைத்து முக்கிய கருவிகளும் இதில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

ஆனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த சேவையில் கார்களுக்கு மட்டுமே சர்வீஸ் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, பவர் ஜெனரேட்டர், ஏர் கம்ப்ரஸ்ஸர், ஆயில் டிஸ்பென்சர், தேவியில்லாத ஆயில்களை சேகரிக்கும் பாட்டில்கள், பாதிப்பைக் கண்டறியும் கருவி, நியூமேடிக் கருவிகள், வாஷிங் மற்றும் வேக்யூம் க்ளீனர்கள் உள்ளிட்ட கருவிகள் இந்த மொபைல் மெக்கானிக் நிலையத்தில் இருக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இதுபோன்ற கருவிகளை வைத்தே சாலையோர மெக்கானிக்குகள் கார் மற்றும் பைக்குகளை பழுதுநீக்கி வருகின்றனர். ஆகையால், இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவைக்குப் போதுமான கருவிகளாக இருக்கின்றன.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இந்த நடமாடும் மெக்கானிக் மையங்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்குககளில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றன. ஏதேனும் அழைப்பு அல்லது புக்கிங் பெறப்பட்ட பின்னர் அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்று சேவையை வழங்கும். இதற்காக 300க்கும் மேற்பட்ட நடமாடும் மெக்கானிக் மையங்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

மேலும், அவற்றை அழைப்பதற்கான தனிப்பட்ட எண்ணையும் அது வெளியிட்டுள்ளது. 985 986 4141 என்ற எண்ணே அது. இதைக் கொண்டு வாட்ஸ் ஆப் மூலமாக டெல்லி வாசிகள் மெக்கானிக்குகளைப் புக் செய்ய முடியும். இதன்மூலம் விருப்பப்பட்ட இடத்திற்கே மெக்கானிக்குகளை அழைக்க முடியும்.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

வாட்ஸ்-ஆப் மூலம் அழைப்பு விடுக்கும்போது குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கேட்கின்றது. அதாவது, வாகனத்தின் மாடல், பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே வாடிக்கையாளர்களிடத்தில் கேட்கப்படுகின்றது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

இதைத்தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட மெக்கானிக் குழுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹோம்-மெக்கானிக் கூட்டணி அனுப்பி வைக்கும். இவர்கள் காரில் உள்ள பழுதை நீக்கி, அதற்கான கட்டணத்தை அங்கேயேப் பெற்றுக் கொண்டுச் செல்வர். இந்த சேவையை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பெற முடியும்.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

வாரத்தின் அனைத்து நாட்களிலும் இச்சேவையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், வாட்ஸ் ஆப் மூலமாக மட்டுமின்றி ஹோம்-மெக்கானிக்.இன் (home-mechanic.in) தளத்தின் வாயிலாகவும் டூர்-ஸ்டெப் மெக்கானிக் சேவைக்கான புக்கிங்கைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

வாகனங்களில் ஏற்படும் 90 சதவீத கோளாறுகளை நிவர்த்தி செய்யும் திறன் தங்களின் நடமாடும் மெக்கானிக் மையங்களுக்கு இருப்பதாக ஹோம்-மெக்கானிக் நிறுவனத்தின் சிஇஓ ஆட்டோகார் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றார். ஆகையால், மெக்கானிக் நிலையங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் நிச்சயம் இருக்காது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

மேலும் பேசிய அவர், "இந்தியன் ஆயிலுடனான கூட்டு, எங்களின் திறனை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அணுகலை அதிகரிக்கவும் செய்யும்" என கூறினார். இந்தியன் ஆயில் நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளைக் கொண்டுள்ளது.

மெக்கானிக் சேவையை தொடங்கும் இந்தியன் ஆயில்... போன் பண்ணா போதும் வீட்டுக்கே அனுப்பி வைப்பாங்க..!

கொரோனா வைரஸ் பரவல் தற்போதும் மக்களை அச்சுறுத்தி வருவதால், பலர் நேரடி தொடர்பு மற்றும் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆகையால், இந்த நடமாடும் மெக்கானிக் மையங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ஹோம்-மெக்கானிக் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Oil To Provide Doorstep Car Service Facility. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X