தினமும் ஆஃபிசுக்கு விமானத்தில் சென்று வரும் இந்திய பெண்.. காசை மிச்சப்படுத்த இப்படி ஒரு வழி இருக்கா!
காசை மிச்சப்படுத்த நம்மில் பலர் பஸ், டிரெயின் மற்றும் ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இங்கே ஓர் பெண்ணோ பணத்தை மிச்சப்படுத்த விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றார். அந்த பெண் நம் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தினமும் அலுவலகம் சென்று வரவே அவர் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றார். ஒருவேளை அவர் ஓர் நிறுவனத்திற்கு சொந்தக்காரராக இருப்பாரோ என நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே தன்னுடைய தினசரி அலுவலக பயன்டிற்காக விமானங்களை அந்த பெண் பயன்படுத்தி வருகின்றார். விமானங்களை பயன்படுத்துவதனால் நேரம் மிகப் பெரிய அளவில் மிச்சமாகுவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் அதிக நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய போக்குவரத்தாக விமான போக்குவரத்து இருக்கின்றது.

அந்த பெண் விமான போக்குவரத்தை பயன்படுத்த பணத்தை மிச்சப்படுத்துவது, நேரத்திற்கு அலுவலகம் செல்வது இவை மட்டுமே முக்கிய காரணமல்ல, வீட்டில் அதிகம் நேரம் செலவழிக்க முடியும் என்பதும் அவர் விமானங்களை அதிகமாகப் பயன்படுத்த காரணமாக உள்ளது. ரேச்சல் கௌர், இவரே அந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
இவர் மலேசியாவில் தற்போது வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்போது ஏர் ஏசியா (Air Asia) விமான போக்குவரத்துச் சேவை நிறுவனத்திலேயே அவர் பணியாற்றி வருகின்றார். அசிஸ்டன்ட் ஃபைனான்ஸ் மேனஜர் எனும் பொருப்பிலேயே அவர் உள்ளார். ரேச்சல் வசிக்கும் இடத்தில் இருந்து 700 கிமீ தூரம் தள்ளியே அவர் பணிபுரியும் ஏர் ஏசியா அலுவலகம் அமைந்துள்ளது.
கோல லம்பூரிலேயே அவரின் அலுவலகம் அமைந்திருக்கின்றது. அவர் தற்போது வசிக்கும் வீடோ பெனாங்கில் உள்ளது. முன்னதாக நீண்ட தூர இடைவெளியைக் காரணம் காட்டி அவர் கோலாலம்பூரிலேயே ஓர் வீடு எடுத்து தங்கி இருக்கின்றார். அப்போது, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு சென்று வந்திருக்கின்றார்.
இதனால், வீட்டையும், இரண்டு பிள்ளைகளையும் அவர் மிகவும் மிஸ் செய்ய நேரிட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பெனாங்கில் இருந்து தினசரி விமானம் வாயிலாக அலுவலகம் சென்று வர திட்டமிட்டிருக்கின்றார். அதாவது, ரேச்சலை தினமும் வீட்டுடன் இணைந்தவாறு இருக்க விமானம் பெரும் உதவியாக அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, தினமும் இரவு பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல கோலாலம்பூரில் தனியாக வசித்தபோது ஏற்பட்டதை விட இப்போது மிகவும் குறைவான செலவே அவருக்கு ஏற்படுவதாகவும் ஆச்சரியமளிக்கும் தகவலையும் அவர் தெரிவித்திருக்கின்றார். கோலாலம்பூரில் அவர் தனியாக வசித்தபோது மாத செலவு மட்டும் ரூ. 41 ஆயிரம் வரை அவருக்கு ஆகியிருக்கின்றது.
ஆனால், தினசரி விமானத்தில் சென்று வர அவருக்கு 27 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகுவதாக தெரிவித்திருக்கின்றார். பெரும் தொகையை செலவிட்டு தனியாக வசித்து வருவதைக் காட்டிலும், சிறிய செலவைச் செய்து குடும்பத்துடன் தினமும் நேரம் செலவு செய்ய முடிகின்றது என்கிற கருத்தையும் அவர் முன் வைத்திருக்கின்றார்.
இது விமான பயணத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தன்னுடைய தினசரி விமான பயணத்திற்கு ஏர் ஏசியா நிர்வாகம் அதன் சார்பில் மிகப் பெரிய சப்போர்ட்டை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இது அந்த நிறுவனத்தின் மதிப்பை கூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் ஒத்துழைப்பாலேயே ரேச்சலால் தினசரி விமான போக்குவரத்தை பெரிய சிரமமின்றி மேற்கொள்ள முடிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் பெண்ணுக்கு வீட்டு வாழ்க்கையும், அலுவலக வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்ய விமான போக்குவரத்து சேவை இவ்வளவு சூப்பராக உதவுவது மொத்த விமான போக்குவரத்து சேவைக்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் வாயிலாக அவரால் பணத்தை மிச்சம் செய்ய முடிகின்றது என்கிற தகவல் பேராச்சரித்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








