25 வயசு பையனுக்கு இவ்ளோ காஸ்ட்லியான காரா! சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்த பெற்றோர்!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள பிஇ6 (Mahindra BE6) எலெக்ட்ரிக் காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்த காரை 25 வயதே நிரம்பிய இளைஞர் ஒருவர் தற்போது தனது பெற்றோரிடம் இருந்து பரிசாக பெற்றுள்ளார். அந்த இளைஞரின் பெயர் ஆர்யன் சிங் ரத்தோர் என்பதாகும். thar_offroads என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தொடர்பான தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 59 kWh மற்றும் 79 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 59 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 557 கிலோ மீட்டர்கள் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 79 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 683 கிலோ மீட்டர்கள் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. இவை மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அத்துடன் மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சம் கிடையாது.

இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், டால்பி அட்மாஸ் உடன் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 7 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை எல்லாம் மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.
மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மொத்தம் 5 ட்ரிம்களில் (Trims) கிடைக்கும். அவை பேக் ஒன், பேக் ஒன் எபோவ், பேக் டூ, பேக் த்ரீ மற்றும் பேக் த்ரீ செலக்ட் ஆகியவை ஆகும். இதில், ஆர்யன் சிங் ரத்தோர் பரிசாக பெற்றிருப்பது மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேக் த்ரீ மாடலாக இருக்கலாம் என கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) 27.65 லட்ச ரூபாய் ஆகும். இதன் உடன் 11.2 kW சார்ஜரும் வந்து விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெரும்பாலான வசதிகளை நாங்கள் மேலேயே குறிப்பிட்டு விட்டோம். இருப்பினும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் இன்னும் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.
இதில், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், செமி-ஆக்டிவ் சஸ்பென்ஸன், ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் முழு எல்இடி லைட்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இது போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவி, இந்திய சாலைகளில் தற்போது ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள ஒரு கார் ஆகும். அப்படிப்பட்ட ஒரு காரை பரிசாக வழங்கியிருப்பதன் மூலம் ஆர்யன் சிங் ரத்தோரின் பெற்றோர், தங்கள் மகனின் பிறந்த நாளை, இன்னும் சிறப்பான ஒன்றாக மாற்றியுள்ளனர் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








