இந்தியப் போக்குவரத்து வரலாற்றை கௌரவிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியீடு

இந்தியப் போக்குவரத்து வரலாற்றை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அஞ்சல் துறை, சிறப்பு நினைவு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.

By Azhagar

ஆட்டோமொபைல் உலகில் இன்று இந்தியாவும் உலகளவில் ஒரு முக்கிய நாடாக உள்ளது. இந்த முக்கியத்துவத்தை அடைய போக்குவரத்து துறையில் இந்தியா பெற்ற வளர்ச்சி என்பது கொண்டாடப்பட வேண்டியது.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

மற்ற உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா உயர்ந்திருந்தாலும், ஆரம்பக்கால கட்டத்தில் நம் நாட்டில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி தாமதமாகத்தான் தொடங்கியது.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

ஆரம்பக் காலத்திலிருந்து, தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற போக்குவரத்து வளர்ச்சியை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஆதிக்காலத்து இந்தியாவின் போக்குவரத்து முறைகள் இன்றைய இந்தியாவில் வாழும் நமக்கு தெரியவந்துள்ளது.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சியை கொண்டாடும் விதமாக இந்திய அஞ்சல் துறை கிட்டத்தட்ட 20 நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அஞ்சல் தலையும்,இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சி பற்றிய வரலாற்றை நமக்கு ஒவ்வொரு விதத்தில் உணர்த்துகிறது.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

மேலும் அஞ்சல் தலைகளில் போக்குவரத்து சாதனங்கள் அந்த காலத்தில் மக்களால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் காட்சிப்படுத்தப்படுள்ளது.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

நினைவு அஞ்சல் தலைகளில் ஆதி மனிதர்கள் பயன்படுத்திய பல்லக்கு, மிருகங்களை கொண்டு ஓட்டப்பட்ட கட்டை வண்டி, மனிதனால் முற்றிலும் இயக்கப்பட்ட ரிக்‌ஷாக்கள், நாகரீகம் வளர்ந்த காலத்தில் இந்தியாவில் ஓடத்தொடங்கிய விண்டேஜ் கார்கள்.

தற்போதைய காலத்தில் இந்தியர்களுக்கு முக்கிய பயண தொடர்பாக உள்ள இரயில் மற்றும் மெட்ரோ ரயில் என இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை இந்த நினைவு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றுள்ளன

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உந்துதல் பேரில் இந்த நினைவுச் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியப் போக்குவரத்து வரலாற்றிற்கு அஞ்சல் துறை கௌரவம்

வெறும் அஞ்சல் தலையாக மட்டுமல்லாமல், இந்தியப் போக்குவரத்து குறித்த வரலாற்று செய்திகள் மற்றும் படங்கள், மினியேச்சர் தாள்கள், கையேடு என அனைத்து வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian postal department Commemorates India's History Of Transportation.
Story first published: Friday, March 31, 2017, 17:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X