கோயிலை போல பய-பக்தியுடன் பார்க்கப்படும் கார்.. அப்படி யாருங்க இந்த காரை பயன்படுத்துறாங்க!
கோயில்களைப் போல இந்தியர்கள் ஒவ்வொருவரும் பய-பக்தியுடன் பார்க்கப்படும் கார் மாடலைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அது வேற யாருமில்லைங்க நம்ம குடியரசு தலைவர் திரௌபதி மர்மு பயன்படுத்தக் கூடிய கார் மாடல்தான். உலக அளவில் பாதுகாப்பிற்கு பெயர்போன கார் மாடலாக அறியப்படும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 குவார்டு புல்மேன் (Mercedes Maybach S600 Guard Pullman) கார் மாடலே குடியரசு தலைவரின் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கார் மாடலின் அரிய புகைப்படமே தற்போது வெளியாகி உள்ளது.
மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 குவார்டு அதீத பாதுகாப்பு வசதிகளுக்கு மட்டுமல்ல அதிக சொகுசு அம்சங்ளுக்கும் பெயர்போன கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலே திரௌபதி மர்முவின் பயணங்களுக்காக இந்திய அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் பாதுகாப்பு திறன் மற்றும் சில சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி மர்மு மட்டுமல்ல உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரின் அதிகாரப்பூர்வம வாகனமாக இந்த கார் மாடலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக பயங்கரமான தாக்குதலில் இருந்தும் இந்த கார் தனக்குள் பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல் போன்றவற்றை இந்த கார் சர்வசதாரணமாக கடந்து சென்றுவிடும். ஏன் இந்த காரால் 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ எடையுள்ள டிஎன்டி வெடி பொருள் வெடித்தாலும்கூட அதன் தாக்கத்தையே இந்த கார் தாங்கிக் கொள்ளும் என கூறப்படுகின்றது.
இதுதவிர, 7.62X51 மிமீ ரைஃபிள் தாக்குதல், ஏகே 47 துப்பாக்கி தாக்குதல் போன்றவற்றையும் இது தாங்கிக் கொள்ளும் என கூறப்படுகின்றது. இதற்காக இந்த காரில் இஆர்வி 2010 லெவல் மற்றும் விஆர்9 லெவல் புரெடக்சன் ஆகிய பாதுகாப்பு திறன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரின் விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் அதிக உறுதியானவையே. நெருப்பிற்குள்ளும் இந்த காரால் புகுந்து பயணிக்க முடியும். இதன் டயர்கள் அவ்வளவு எளிதில் பஞ்சராகாது. அதேவேளையில், பஞ்சரே ஆகினாலும் அதனால் பயணிக்க முடியும். மிக முக்கியமாக விஷ வாயு தாக்குதலையும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த கார் மாடல் ஆகும்.
இதுபோன்ற இன்னும் பல பாதுகாப்பு திறன்களைக் கொண்டதே மெர்சிடிஸ் மேபேக் எஸ் குவார்டு புல்மேன் ஆகும். குடியரசு தலைவருக்கு அதிக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த காரை மத்திய அரசு வாங்கியிருக்கின்றது. இந்த காரை இந்திய அரசு 2021 ஆம் ஆண்டிலேயே வாங்குவதாக இருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதன் கொள்முதல் தள்ளிப் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 15 அன்றே இக்கார் வாங்கப்பட்டது. தற்போது குடியரசு தலைவரின் பயன்பாட்டில் முழு வீச்சில் அந்த கார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஒரே ஒரு கார் யூனிட்டின் விலை ரூ. 15 கோடிக்கும் அதிகம் ஆகும்.
இந்த அதீத விலைக்கு அக்காரில் உள்ள ஆடம்பர அம்சங்களும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. முன்னதாக பிரனாப் முகர்ஜியின் பயணங்களுக்காக டபிள்யூ221 மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் (W221 Mercedes Maybach S600 Pullman) காரும், ராம்நாத் கோவிந்தின் பயணங்களுக்காக டபிள்யூ222 மேபேக் புல்மேன் (W222 Maybach Pullman) காரும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
திரௌபதி மர்மு பயன்படுத்தி வரும் கார் அதிக பாதுகாப்பு திறனைக் கொண்டது என்பதனால் அதன் எடையும் பலமடங்கு அதிகமாக காணப்படுகின்றது. சுமார் 5 டன் எடைக் கொண்டதே அந்த கார் மாடல் ஆகும். இத்தகைய அதீத எடையை இழுத்துச் செல்வதற்காக 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 530 பிஎச்பி பவர் மற்றும் 830 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திரௌபதி மர்முவின் இந்த காரின் படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. மூன்று தலை சிங்கம் சின்னத்துடன் இந்த கார் கெத்தாக நிற்கும் படங்களே தற்போது வெளியாகி உள்ளன. மேலும், 0008 எனும் ஃபேன்சியான பதிவெண்ணே இந்த காருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








