உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

உலகின் எந்தவொரு நாட்டிலும் காண முடியாத, இந்தியாவில் மட்டுமே அரங்கேறக்கூடிய விநோதமான சம்பவங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.உலகின் எந்தவொரு நாட்டிலும் காண முடியாத, இந்தியாவில் மட்டுமே அரங்கேறக்கூடிய விநோதமான சம்பவங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

உலக நாடுகளில் காண முடியாத சில விநோதமான செயல்களையும், போக்குவரத்து விதிமீறல்களையும் இந்திய சாலைகளில் மட்டுமே நம்மால் காண முடியும். அதாவது, வலது பக்கத்தில் இன்டிகேட்டர் போட்டுவிட்டு இடது பக்கம் திரும்புவது. இன்டிகேட்டர் போடமலே திரும்புவது, சில நேரங்களில் ஆன் செய்த இன்டிகேட்டரை ஆஃப் செய்யாமலே பயணிப்பது இதுபோன்ற காமெடிக்களை இந்தியாவில் மட்டுமே நம்மால் காண முடியும்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

அதேபோன்று, ஜாய் வால்கர்கள் எனப்படும் ஹாயாக நடக்கும் பாதசாரிகள், மிருகங்கள் (ஆடு, மாடு, நாய்), பள்ளம் மற்றும் மேடுகளுக்கும் இந்திய சாலையில் பஞ்சமிருக்காது.

இவை அதிகம் தென்படுவதன் காரணத்தினாலயே சாலை விபத்துகளும், இறப்புகளும் இந்தியாவில் மிக அதிகளவில் அரங்கேறுகின்றன. போதுமான விதிகளும், சட்டங்களும் அமலில் இருந்தும் வாகன ஓட்டிகள் துளியளவும் அதனை கடைபிடிக்காததே இதற்கு காரணம்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

இதன் விளைவாக நாள்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் விபத்து அதிகம் நடைபெறுவதற்கு போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமே காரணமில்லை என ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

சிலர் மேற்கொள்ளும் விநோதமான (முட்டாள் தனமான) செயல்களாலும் விபத்துகள் அதிகம் அரங்கேறுவதாக அது தெரிவிக்கின்றது. அந்தவகையில், இந்திய சாலைகளில் மட்டுமே காணக் கூடிய விநோதமான செயல்களைப் பற்றிய தகவலைதான் இந்தபதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

புள்ளிங்கோ ஸ்டண்ட்:

ஸ்டண்டில் ஈடுபடுவதாக கூறி சில புள்ளிங்கோ இளைஞர்கள் திடீர் சாகசத்தை பொது சாலையில் நிகழ்த்தி வருகின்றனர். அவர்களின் அதிர்ச்சிமிகுந்த செயல் ஒரு சிலரை ஆச்சரியப்பட வைத்தாலும், பலரை திடுக்கிடவே செய்கின்றது. இதனால், அவர்கள் சாலை மீதான கவனத்தை இழந்து விபத்தைச் சந்திக்கின்றனர். இதன்காரணமாகவே பொது சாலையில் சாகசத்தில் ஈடுபடும் புள்ளிங்கோக்களைப் போலீசார் வலை விரித்து தேடியும், இரும்புக்கரம் கொண்டு அடக்கியும் வருகின்றனர்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

குழு சவாரி மற்றும் உரையாடுதல்

பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் வார விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் செல்வதையாக வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, அவர்கள் ஜாலி ரைடு செல்லும்போது கூட்டமாக சாலையை ஆக்கிரமித்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் அவர்கள் செல்வதை நம்மால் பார்க்க முடிகின்றது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

இவ்வாறு, சாலையை அடைத்தவாறு குழுவாக செல்லும்போது பின் வரும் வாகனங்கள் முன்னேறிச் செல்வதில் தடை ஏற்படுகின்றது. குறிப்பாக, நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே செல்வதால், சாலையின் மீதான கவனச் சிதறல் ஏற்பட்டு, விபத்தைச் சந்திக்க வழி வகுக்கின்றது. இம்மாதிரியான செயல்களை அயல்நாடுகளிலும் நம்மால் காணமுடிகின்றது. ஆனால், இந்தியாவிலேயே வழியை விடாமல் செல்வது, அரட்டை அடித்தவாறு செல்வது அதிகமாக உள்ளது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

சன் ரூஃப் வழியாக சாலையை ரசித்தல்

வான்வெளியை ரசிப்பதற்காக வழங்கப்பட்ட சன் ரூஃபை ஒரு சிலர் சாலையை ரசிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அதுவும், அது வழியாக வெளியே எட்டிப் பார்த்தவாறு உற்சாகத்தை அனுபவிக்கின்றனர். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயல் ஆகும். இதுபோன்ற காரணத்தினாலயே டாடா போன்ற ஒரு சில நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளில் சன் ரூஃப் வசதிகளை அறிமுகம் செய்யாமலே இருந்தன. இருப்பினம், சந்தையில் நிலவி வரும் டிமாண்டின் காரணமாக அதனை அவை அறிமுகம்செய்ய தொடங்கியுள்ளன.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

பலர் ஜாலியாக வெளியே எட்டிப்பார்த்தவாறு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக சன் ரூஃப் வைத்த கார்களை வாங்குகின்றனர். ஆனால், அது மிகப்பெரிய ஆபத்தையே விளைவிக்கும் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. திடீர் பிரேக்குகள் மற்றும் ஜர்க்குகளின்போது நாம் சன் ரூஃப் வழியாக எட்டிப்பார்த்துக் கொண்டிருப்போமேயானால், அப்போது ஏற்படும் சிறு அசைவுகூட நம்மை வெளியே தூக்கிப் போட்டுவிடும். அதுமட்டுமின்றி, சன் ரூஃப் வாய் பகுதியில் மோதி மிகப் பெரிய காயங்களுக்கும் வழி வகுத்துவிடும்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

ஹை பீம் மின் விளக்கு

ஹை பீம் மின் விளக்கு வழங்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை இன்னும் பலர் அறிந்திராமலே இருக்கின்றனர். இதில் அதிக அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களும் அடங்குவர். அதிக அடர்ந்த இருட்டு மற்றும் தெரு விளக்குகள் இல்லாத சாலைகளில் மட்டுமே பயன்படுத்துவதற்காக ஹை பீம் மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாதாரணமான நேரங்களிலும் கூட பயன்படுத்துகின்றனர்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

இதனால் எதிரில் வருபவர்களுக்கு சரியாக பாதை தெரிவதில்லை. மேலும், ஹை பீம் பயன்படுத்திய வாகனம் சென்றபின்னும் அதன் தாக்கம் இருப்பதால், அதன் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் அந்த வாகனம் மோதிவிடுகின்றது. இதுபோன்ற விபத்து சம்பவங்கள் பல இந்திய சாலைகளில் அரங்கேறியிருக்கின்றன. இதனாலயே தேவையற்ற நேரங்களில் ஹை பீம் மின் விளக்கைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

டேஞ்ஜர் மின் விளக்கு (ஹசார்ட் லேம்ப்ஸ்)

எச்சரிக்கை அளிப்பதற்கான நோக்கில் ஹசார்ட் மின் விளக்குகள் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதனை பெரும்பாலானோர் தேவையற்ற நேரங்களிலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மழை மற்றும் பனி அதிகம் நிறைந்திருக்கும் சாலைகளில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, காரை இயக்கியவாறு அதனை பயன்படுத்துகின்றனர்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

இந்த மின் விளக்கை வாகனம் பழுதானால் மற்றும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் மட்டும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கையளிக்கும் நோக்கில் ஆன் செய்ய வேண்டும். இதை தவிர்த்து சாதாரண நேரங்களிலும் ஹசார்ட் மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சில நேரங்களில் விபத்துபோன்ற கசப்பான சம்பவங்கள் அரங்கேறிவிடுகின்றது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

ஓஆர்விஎம்-களைப் பயன்படுத்த தவிர்ப்பது

ஓஆர்விஎம் என்பது பின் பக்கம் வரும் வாகனங்களைப் பார்க்க உதவும் கண்ணாடிகளைக் குறிக்கும் சொல் ஆகும். இந்த கண்ணாடிகள் பெரும்பாலும் நாம் வலது மற்றும் இடது பக்கங்களில் திரும்பும் உதவுகின்றது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகளில் இவற்றின் பங்கு இன்றியமையாதது. ஆனால், இந்த கண்ணாடிகளைப் பலர் பயன்படுத்துவதில்லை. மேலும், பின் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் அசால்டாக திரும்புவிடுகின்றனர். இதனால், விபத்துதான் அதிகம் நடைபெறுகின்றன. இவ்வாறான சிலர் இன்டிகேட்டர் மின் விளக்குகளையும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

திருப்பத்தை இழந்த பின்னர் ரிவர்ஸ் எடுப்பது

இன்றைய காலத்தில் பலர் முன், பின் தெரியாத இடங்களுக்கு அதிகம் பயணிக்கின்றனர். அப்போது கூகுள் மேப்பினையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் அது தரும் தகவலை கூர்ந்து கவனிப்பது அவசியமானதாக உள்ளது. ஆனால், பெரும்பாலானோர் அதை தவறவிட்டுவிடுகின்றனர். மேலும், வளைவை தாண்டிய பின்னரே அதை உணர்கின்றனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் தவற விட்ட திருப்பத்தை மீண்டும் பிடிப்பதற்காக பின்னாடி வரும் வாகனங்களைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல், திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு யு டர்ன் எடுக்கின்றனர்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

இதனை இந்தியாவின் அனைத்து மூலையிலும் நம்மால் காண முடியும். இவ்வாறு செய்வதனால் மிகப்பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகிவிடும்.

குறிப்பாக, பின் வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இடையூறு செய்த காரின் மீதோ அல்லது மற்ற வாகனங்கள் மீதோ மோதி விடுகின்றன. எனவே, புதிய இடங்களுக்கு செல்லும்போது அதிக கவனத்துடன் செல்வது அவசியமானதாக உள்ளது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

மிக நெருக்கமாக வாகனத்தை இயக்குதல்

இதனை டெயில்கேட்டர்கள் என ஆங்கிலத்தில் சிலர் கூறுகின்றனர். ஒரு வாகனம் முன்னாடி செல்லும்போது அதை பின் தொடர்ந்தவாறு மற்றொரு வாகனம் செல்வதையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இவ்வாறு, செல்வதனால் மிகப்பெரிய விபத்துகள்கூட கணப்பொழுதில் ஏற்பட்டுவிடும். இதையும் நம்முடைய இந்திய சாலையில் நம்மால் அதிகம் காண முடியும். பெரும்பாலான வாகனங்கள் டிராஃபிக் அல்லாத நேரத்தில்கூட இவ்வாறு பின்தொடர்ந்து செல்கின்றன. இந்த நேரத்தில் குறுக்கே வேறொரு வாகனம் அல்லது ஸ்பீடு பிரேக் வந்தால் முன் செல்லும் வாகனம் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின் தொடர்ந்து வந்த வாகனம் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்துவிடுகின்றது.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

கண்களுக்கு புலப்படாத இடங்களில் வாகனத்தை நிறுத்துதல்

ஜாலி ரைடு செல்லும் பலர் சில ரம்மியமான வியூக்களைப் பார்ததவுடன் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். அவர்கள் எம்மாதிரியான இடத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளோம் என்பதைக்கூட உணர்வதில்லை. குறிப்பாக, இந்த தவறை வளைவு பகுதிகளில் செய்துவிடுகின்றனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கண்களுக்கு புலப்படுவதில் தடை ஏற்படுகின்றது. இதனையறியாமல் வரும் வாகனம் அதன்மீது விபத்தை ஏற்படுத்துவிடுகின்றது. ஆகையால், குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தும் முன்பு, அது பாதுகாப்பான இடம்தானா என்பதை ஆய்வு செய்த பின்னர் நிறுத்த வேண்டும். இது உங்களுக்கும் உங்களது வாகனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

தவறான பாதையை பயன்படுத்துவது

இந்திய சாலையில் பொதுவாக நடக்கும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் முட்டாள்தனமான செயல்களில் தவறான பாதையில் செல்வதும் ஒன்று. இம்மாதிரியான செயலினாலயே அதிகளவில் விபத்துகள் இந்தியாவில் ஏற்படுகின்றது. குறிப்பாக எதிரில் வரும் வாகனத்திற்கு வழி கொடுக்காமல் செல்வதன் காரணத்தினாலயே விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

பாதசாரிகள் நடைமேடையே பயன்படுத்துவது

இம்மாதிரியான விதிமீறலை அதிகபட்சம் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட நகரங்களில் மட்டுமே காண முடியும். டிராஃபிக்கின் காரணமாக பாதசாரிகள் நடப்பதற்கும் வழங்கப்பட்டும் நடைமைடையக் கூட வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கடக்கின்றனர்.

அதிகபட்சம் இந்த விதிமீறலில் இருசக்கர வாகன ஓட்டிகளே ஈடுபடுகின்றனர்.

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்திய சாலைகள்.. இம்மாதிரியான விநோதங்களை எங்குமே காண முடியாது!

மேற்கூறிய அநாகரீகமற்ற பல விதிமீறல்களை இந்தியாவின் சாலைகளில் மட்டுமே நம்மால் காண முடியும். பல வளர்ந்த நாடுகளில் இம்மாதிரியான செயல்களுக்கு அதிகபட்ச அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Public Roads & Idiotic Things. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X