இரயில் டிரைவர் தூங்கிட்டாலும் இது மறக்காது!! இந்தியன் இரயில்வேயின் இந்த டெக்னாலஜி பல உயிர்களை காப்பாற்ற போகுது
கவாச் (Kavach) சிஸ்டத்தின் உதவியுடன் சுமார் 160kmph வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரயிலை நிறுத்தி, சோதனையை இந்தியன் இரயில்வே வெற்றிக்கரமாக முடித்துள்ளது. எங்கு இந்த இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது என்பதையும், இரயிலில் கவாச் சிஸ்டத்தின் பணி என்ன என்பதையும் பற்றி இனி பார்க்கலாம்.
விமான விபத்துகளை போன்று, இரயில் விபத்துகளும் மிகவும் அரிதாக நடக்கின்றன. ஆனால், அந்த அளவிற்கு மிகவும் அரிதாக கூட இரயில் விபத்துகள் நடந்துவிட கூடாது என்பதுதான் நம் விருப்பம். அதுமட்டுமின்றி, விமான விபத்துகளை போல் இரயில் விபத்துகளும் ஒருமுறை நடந்தாலும் கொத்தாக உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

கடந்த ஆண்டில் ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இரயில் விபத்துகளை தடுக்க இந்தியன் இரயில்வே தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக கண்டுப்பிடிக்கப்பட்டதே கவாச் ஆகும். இது ஒரு ஆட்டோமேட்டிக் டிரெயின் புரோடெக்ஷன் சிஸ்டம் ஆகும்.
அதாவது, விபத்து நிகழும் சூழல் ஏற்பட்டால் தன்னிச்சையாக இரயிலை விபத்தில் இருந்து காப்பாற்றுவது கவாச் சிஸ்டத்தின் பணி ஆகும். இந்த கண்டுப்பிடிப்பை முழுக்க முழுக்க இந்தியன் இரயில்வே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உருவாக்கி உள்ளது. இந்த கண்டுப்பிடிப்பிற்கான ஆராய்ச்சிகள் இரயில் மோதல் தடுப்பு சிஸ்டம் (TCAS) என்ற பெயரில் 2012இல் துவங்கப்பட்டது.

ஆனால், இந்த ஆராய்ச்சிகள் முழுமையாக கடந்த 2022இல் தான் நிறைவடைந்தன. அதாவது, சுமார் 10 வருட கால ஆராய்ச்சிகளின் வெளிப்பாடே தற்போது இந்தியன் இரயில்களில் இருக்கும் கவாச் சிஸ்டம் ஆகும். ஆனால், இன்னுமும் சோதனைகள் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த வகையில், மத்திய வடக்கு இரயில்வே, கவாச் சிஸ்டத்தை கொண்ட இரயிலை மணிக்கு 160kmph வேகத்தில் இயக்கி சோதனை செய்து பார்த்துள்ளது.
சிக்னலை அறிந்து இரயிலுக்கு கவாச் எந்த அளவிற்கு துல்லியமாக பிரேக்கை வழங்குகிறது என்பதை கண்டறியும் விதமாக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதாவது, சிக்னலுக்கு ஏற்ப டிரைவர் செயல்படாமல் போனால், கவாச் எவ்வாறு செயல்படும் என்பது இந்த சோதனையில் துல்லியமாக கணக்கிடப்பட்டது. இதற்காக செமி-ஹை ஸ்பீடு வாப்-5 என்ஜின் பெட்டியை மத்திய வடக்கு இந்தியன் இரயில்வே பயன்படுத்தியது.

இந்த வாப்-5 என்ஜின் தான் சதாபதி மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் போன்ற பிரபலமான இரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. சதாபதி மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் இரயில்களில் கவாச் சிஸ்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய வடக்கு இந்தியன் இரயில்வே துறையினரால் இந்த கவாச் சோதனை ஓட்டம் ஹரியானாவின் பல்வால் மற்றும் உத்தர பிரதேசத்தின் மதுரா பகுதிகள் இடையே மேற்கொள்ளப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சோதனை ஓட்டத்தில் கவாச் இரயில் என்ஜினை சிவப்பு சிக்னலுக்கு 30 மீட்டருக்கு முன்னதாகவே வெற்றிக்கரமாக நிறுத்தி உள்ளது. அதாவது, டிரைவரின் உதவியின்றி, ஆபத்தை உணர்ந்து தன்னிச்சையாக இரயிலின் பிரேக் சிஸ்டத்தை செயல்பட வைத்துள்ளது. இதில் இருந்து இந்தியன் இரயில்வே பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் கண்டுப்பிடிப்பில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை அறிய முடிகிறது.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications









