ரயில் ரத்தாகிடுச்சு நான் உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர்! ரயில்வே நிர்வாகம் செய்த எதிர்பாராத உதவி

வதோதராவிற்குச் செல்ல வேண்டிய ரயில் ரத்தானதால் மாணவருக்கு ரயில் வே நிர்வாகம் கார் ஒன்றை புக் செய்து கொடுத்து வழியனுப்பிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விபரங்களைக் காணலாம்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இந்தியாவில் நீண்ட தூரப் பயணத்திற்குச் சிறந்த போக்குவரத்து வசதி என்றால் ரயில் தான் பட்ஜெட்டிற்கு ஏற்றது. அதே நேரத்தில் வசதியாகப் படுத்துத் தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம். ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்பாராத விதமாக பல்வேறு சூழ்நிலை காரணமாக ரயில்கள் சில நேரங்களில் ரத்து செய்யப்படுவதுண்டு

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இவ்வாறு ஒருவர் பயணத்திற்காக ரயிலை ரத்து செய்துவிட்டால் அன்று அவர் பாடு திண்டாட்டம் தான் திடீரென அவர் மாற்றப் பயண வழியைத் தேடுவது என்பது சிரமம். அதனால் ரயில் பயணத்திற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு அந்த ரயில் கேன்சல் ஆகிவிட்டால் கடைசி நேரத்தில் அவர் வேறு போக்குவரத்தைத் தேடுவது பெரும் சிரமம். பலர் இதனால் தங்கள் பயணத்தையே ரத்து செய்துவிடுவார்கள்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இப்படியாகச் சமீபத்தில் ஒரு ரயில் ரத்தாகியுள்ளது. ஆனால் ரயில்வே நிர்வாகம் பயணி ஒருவர் அந்த பயணத்தைத் தவிர்க்க முடியாது என்ற காரணத்தால் அவருக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்து கொடுத்துள்ளனர். இது பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம். சென்னை ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவர் சத்யம் கட்வி, இவர் மகாராஷ்டிரா மாநிலம் எக்தா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இவர் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டு அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு வர ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தார். அதன்படி இவர் எக்தா நகர் ரயில் நிலையத்திலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்து வதோதரா வந்து பின்னர் அங்கிருந்து சென்னை வரும் ரயிலைப் பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு ரயிலில் டிக்கெட் புக் செய்திருந்தார்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பயங்கரமாக மழை பெய்து வருகிறது. இதனால் எக்தா நகர் - வதோதரா இடையேயான ரயில் பாதை சேதமடைந்துள்ளது. இதனால் எக்தா நகரிலிருந்து வதோதரா வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இந்நிலையில் சத்யம் கட்விக்கு கட்டாயம் சென்னை வந்தாகவேண்டிய சூழ்நிலை இருந்தது. ரயில் ரத்தான விவகாரம் சத்யம் கட்விக்கு அப்பொழுது தெரியாது. அவர் எக்தா ரயில் நிலையத்திற்கு வந்த போதுதான் அதற்கான அறிவிப்பு வருகிறது. இதையடுத்து அவர் உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொண்டு தன் நிலைமையை விளக்கினார்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

இந்நிலையில் எக்தா நகரிலிருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் தான் வதோதரா ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியும். வதோதரா ரயில் நிலையத்திற்கு போன் செய்த ஸ்டேஷன் மாஸ்ட் சத்யம் கட்வி புக் செய்திருந்த சென்னை ரயில் குறித்து விசாரித்தார். அது எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொண்டார்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

உடனடியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் ஒரு கார் ஒன்றை புக் செய்து வதோதராவிற்கு அனுப்பி வைத்தார். இந்த வசதி குறிப்பிட்ட அந்த இளைஞருக்காக மட்டும் ரயில்வே நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து சத்யம் கட்வி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியிருந்தது.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

பொதுவாக ரயில்களில் கேன்சல் செய்யப்பட்டால் அந்த ரயிலுக்காக டிக்கெட் புக் செய்தவர்களின் நிலை என்ன ஆகும் தெரியுமா? இதற்கு இந்திய ரயில்வேயில் டிக்கெட் கேன்சல் பாலிசி குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகச் சாதாரணமாக ரயில் இயக்கப்பட்டால் அந்த ரயிலுக்கான சார்ட் தயாராகும் வரை கேன்சல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

சார்ட் தயாரான பிறகு டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. அதற்கு முன்பு கேன்சல் செய்தால் அந்த டிக்கெட்டின் நிலையைப் பொருத்து வேறுபடும். ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை பொருத்தவரை எக்ஸிக்யூட்டிவ் கிளாசிற்கு ரூ240 , ஏசி சேர் காருக்கு ரூ180, மற்ற ஏசி வகுப்புகளுக்கு ரூ120 மற்றும் சிலீப்பர் வகுப்பிற்கு ரூ60 என ஒரு நபருக்கு கேன்சல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு மீதி பணம் ரிட்டர்ன் செய்யப்படும்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு 48 மணி நேரத்திற்குப் பிறகு கேன்சல் செய்தால் டிக்கெட்டிற்கான பணத்தில் 25 சதவீதம், 12 நேரத்திற்குப் பிறகு சார்ட் தயாராகும் முன்பு கேன்சல் செய்தால் 50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். இது போக காத்திருப்பு பட்டியலில் சார்ட்டின் போது டிக்கெட் புக் செய்யப்படாமலிருந்தால் முழு பணமும் ரிட்டர்ன் செய்யப்படும்.

ரயில் ரத்தாகிடுச்சு நான் வேற உடனே சென்னை போணுமேன்னு தவித்த மாணவர் . . . ரயில்வே நிர்வாகம் செய்த யாரும் எதிர்பாராத உதவி

ஒரு வேலை ரயில் முழுவதுமாக கேன்சல் செய்யப்பட்டால் முழு பணமும் ரிட்டர்ன் கொடுக்கப்படும். ரயில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் கேன்சல் செய்யப்பட்டால் பயணிகள் வெப்சைட்டில் டிடிஆர் புக் செய்து பணத்தைக் கோர வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2022, 12:44 [IST]
English summary
Indian railway offer car ride for IIT madras student after the train got canceled
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+