இனி ரயில் பெட்டியை ரெஸ்டாரென்டா பயன்படுத்தலாம்! இந்திய ரயில்வே சூப்பர் யோசனை!

இந்திய ரயில்வே நிர்வாகம் ஆயுள் காலம் முடிந்த ரயில் பெட்டிகளை வைத்து ரயில் பெட்டி தீம் கொண்ட ரெஸ்டாரண்டுகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி இரண்டு ரயில் பெட்டிகளை வைத்து ரயில்வே தீம் ரெஸ்டாரண்ட் உருவாக்கப்பட உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சமீப காலமாக தீம் வடிவ உணவகங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு உணவகத்தை குறிப்பிட்ட இடம் போல வடிவமைத்து அதிலிருந்து உணவருந்துவது என்பது ஒரு தனி விதமான அனுபவம் என மக்கள் உணருகின்றனர். இதனால் மக்கள் தீம் அடிப்படையிலான கொண்ட உணவகங்களை தேடி தேடி சென்று உணவருந்துகின்றனர்.

coaches into themed restaurant

இப்படியாக இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான உணவகத்தையும் என்றால் அது ரயில் பெட்டி தீம் தான். இந்தியாவில் உள்ள பல உணவகங்கள் தங்கள் உணவு கூடத்தை ஒரு ரயில் பெட்டி போல டிசைன் செய்து ஒரு ரயில் பயணத்தில் உணவருந்துவது போல ஒரு அனுபவத்தை தருகின்றனர். இந்நிலையில் இந்த டிரெண்டை கேப்பிட்டல் செய்ய இந்திய ரயில்வே நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வே தீமில் இந்திய ரயில்வே நிர்வாகத்தை விட வேறு யாரால் நல்ல ஆம்பியன்ஸை கொண்டு வந்து விட முடியும்? ஆம் இந்திய ரயில்வே நிர்வாகம் தன் ஆயுள் காலம் முடிந்த ரயில் பெட்டிகளை வைத்து ரயில் பெட்டி தீம்களில் உள்ள உணவகங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது இதற்கு "பியூட்டிஃபுல் ரெஸ்டாரண்ட் ஆன் வீல்" என்ற பெயரை வைத்துள்ளது.

coaches into themed restaurant

இந்தத் திட்டத்தின் படி முதற்கட்டமாக ஜம்மு மற்றும் கட்டாரா ஆகிய பகுதிகளில் இரண்டு ரயில் பெட்டிகளை கொண்டு ரயில்வே ரெஸ்டாரண்ட்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ரெஸ்டாரென்டும் சுமார் 1600 சதுர அடி அளவில் உருவாக்கப்பட உள்ளன. மேலும் இப்படியாக உருவாக்கப்படும் ரெஸ்டாரென்டுகளை பிரைவேட் பார்ட்டிகளுக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது இந்த பெட்டிகளை ரெஸ்டாரென்ட் அமைப்பதற்கான வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு ரெஸ்டாரென்டுகள் மூலம் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி இது போன்ற பல ரெஸ்டாரென்ட்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

coaches into themed restaurant

இந்த இரண்டு ரெஸ்டாரென்டுகளில் ஒரு ரெஸ்டாரென்ட்க்கு அன்னபூர்ணா எனவும் மற்றொரு ரெஸ்டாரண்டுக்கு மா துர்கா எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதல் ரெஸ்டாரண்ட் வரும் டிசம்பர் மாதம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ரெஸ்டாரென்டை சாதாரண ரயில் பெட்டியில் இருந்து உருவாக்க 90 நாட்கள் வரை தேவைப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ரெஸ்டாரண்ட் நடத்த தேவையான அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல ஏற்கனவே 9 முதல் 10 ரெஸ்டாரண்டுகள் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த முன்னெடுப்பை தேசம் முழுவதும் கொண்டு செல்ல இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே ஜபல்பூர், போபால், லக்னோ வாரணாசி உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இப்படியான ரெஸ்டாரென்டுகள் செயல்பட்டு வருகின்றன. ஜம்மு மற்றும் காத்ரா ஆகிய ரயில் நிலையங்களில் இரண்டு புதிய ரெஸ்டாரண்டுகள் உருவாக்கப்பட உள்ளன.

இது முழுமையும் ஏசி வசதி கொண்ட ரெஸ்டாரண்டுக்காக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அசைவ உணவுகளும் பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களும் ஏற்கனவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இருக்கும் நிலையில் இந்த ரெஸ்டாரென்டுகள் மேலும் ஒரு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஸ்தலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலுள்ள ரயில் பெட்டிகள் எல்லாம் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டவை. இது தன் காலம் முடிந்த பின்பு வெறும் அதன் இரும்பின் எடைக்கு மட்டும் இல்லாமல் அதை இப்படியாக மாற்றி இதன் மூலம் கூடுதல் வருவாய் மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது இந்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கை ஏற்படுத்திக் கொடுக்கும். இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது

Article Published On: Tuesday, October 10, 2023, 17:50 [IST]
English summary
Indian railways converting retired train coaches into themed restaurants
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X