இவ்வளவு பணத்தை வச்சு பாகிஸ்தானையே விலைக்கு வாங்கிடலாம் போலயே! இந்திய ரயில்வேயின் ஆண்டு வருமானம் எவ்வளவு?
இந்திய ரயில்வே நிர்வாகம் கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் மூலம் மொத்தம் ரூபாய் 2.56 லட்சம் கோடியை வருமானமாக ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்ததிலேயே மிக அதிகமான வருமானம் ஆகும். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில்கள் என்பது மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக இருக்கிறது. மிகக் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் மட்டுமே தற்போது மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சரக்கு ரயில்களை இயக்குவது மூலம் மத்திய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது.

இந்திய ரயில்வே நிர்வாகம் கடந்த 2023-24 நிதியாண்டு முடிவடைந்து நேற்று முதல் 2024-25 நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில் 2023-24-ம் நிதியாண்டிற்கான ரயில்வே நிர்வாகத்தின் வருமானம் மற்றும் சாதனை குறித்த விபரங்களை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பல முக்கியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதன்படி இந்திய ரயில்வே நிர்வாகம் கடந்த 2023-24ம் தேதி ஆண்டில் மொத்தம் 2.56 லட்சம் கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இதுவே இந்திய ரயில்வே நிர்வாகம் இயற்றிய மிகப்பெரிய வருமானமாகவும் இதற்கு முந்தைய நிதியாண்டில் 2.4 லட்சம் கோடியை மட்டுமே வருமானமாக ஈட்டி இருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக 0.16லட்சம் கோடியை வருமானமாக இயற்றியுள்ளது.

இது மட்டுமல்லாமல் கடந்த நிதியாண்டில் சரக்கு போக்குவரத்திலும் மிக முக்கியமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் மொத்தம் 1591 மில்லியன் டன் ஏடை கொண்ட சரக்குகளை ரயில்வே நிர்வாகம் போக்குவரத்து செய்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டை விட 5 சதவீதம் அதிகமாகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் 1512 மில்லியன் டன் சரக்குகளை மட்டுமே போக்குவரத்து செய்திருந்தது. தற்போது கூடுதலாக 79 மில்லியன் டன் சரக்குகள் போக்குவரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த 2024-25-ஆம் தேதி ஆண்டில் அரசு 1650 மில்லியன் சரக்குகளை போக்குவரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் எல்லாம் ஏற்கனவே துவங்கி விட்டன. அடுத்ததாக ரயில்வே கட்டுமானத்திலும் கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவிலான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை அமைப்பது, ஏற்கனவே உள்ள ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை மாற்றுவது ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் மொத்தம் 7,188 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நடந்துள்ளன. அதாவது ஒரு நாளுக்கு 14.5 கிலோ மீட்டர் தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில் 6,565 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் ரயில்வே நிர்வாக மொத்தம் 5,300 கிலோமீட்டருக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே 2022-23-ம் நிதியாண்டில் 5241 கிலோமீட்டர் மட்டுமே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ரயில் பாதை அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் பல நகரங்கள் ரயில் மூலம் இணைக்கப்படுகின்றன.
தற்போது உள்ள ரயில் நிலையங்களை டிஜிட்டல் மயம் ஆக்குவதற்காக செய்யப்பட்ட பணியில் மொத்தம் 551 ரயில் நிலையங்கள் கடந்த நிதியாண்டில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிதியாண்டில் இதை விட அதிக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து என்பது இந்திய வளர்ச்சிக்கான முதுகெலும்பாக இருக்கிறது. முக்கியமாக சரக்கு போக்குவரத்திற்கு ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. தொடர்ந்து இது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








