எல்லாமே டெக்னாலஜி... யானைகள் இனி இரயிலில் அடிப்பட வாய்ப்பே இல்ல!! இந்தியன் இரயில்வேஸின் சூப்பரான ஏஐ-டெக்னாலஜி!

இந்தியன் இரயில்வேஸ் (Indian Railways), யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது இரயிலில் மோதி அடிப்படுவதை தடுக்க புதிய AI-சார்ந்த தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 'கஜ்ராஜ் சுரக்‌ஷா' (Gajraj Suraksha) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த புதிய தொழிற்நுட்பத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிக பெரிய நாடான இந்தியாவின் பிரதான போக்குவரத்து இரயில்வே ஆகும். ஏனெனில், ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கிலான மக்கள் இந்தியன் இரயில்வேயை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்கள் நிறைய பேர் தேர்வு செய்வது இரயில் போக்குவரத்தை ஆகும்.

indian railways introduced gajraj suraksha

இருப்பினும், இரயில் போக்குவரத்தில் ஆபத்துகள் இல்லையென சொல்லிவிட முடியாது. குறிப்பாக, தண்டவாளத்தை கடக்கும்போது நிகழும் உயிரிழப்பு சம்பவங்களை தினந்தோறும் செய்திகளில் பார்க்க முடிகிறது. ஆறறிவு உள்ள மனிதர்களே தண்டவாளத்தை கடக்கையில் இரயிலில் அடிப்படும்போது, மற்ற ஜீவராசிகள் உயிரிழப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

இருப்பினும், இந்த உயிரிழப்புகளை தவிர்க்க இந்தியன் இரயில்வே நிர்வாகம் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனையையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால், கார், பேருந்தை போல் அதிவேகத்தில் செல்லும் இரயில்களில் சடர்ன் பிரேக் அடிக்க முடியாது. இதனாலேயே, தண்டவாளத்தை ஏதேனும் ஒரு உயிரினம் கடப்பதை இரயில் ஓட்டுனர் கவனித்தாலும், பெரும்பாலான நேரங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடிவதில்லை.

ஆனால், யானை போன்ற அளவில் பெரிய உயிரினம் தண்டவாளத்தை கடப்பதை தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும் என்பதால், இதனை பயன்படுத்தி இந்தியன் இரயில்வே நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழிற்நுட்பத்தை யானைகளை பாதுகாக்க அறிமுகப்படுத்தி உள்ளது. 'கஜ்ராஜ் சுரக்‌ஷா' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த தொழிற்நுட்பம் ஆனது ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு ஆகும்.

அதாவது, இந்த ஏஐ தொழிற்நுட்பம் தனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையில் யானை நடமாட்டத்தால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தால், அது குறித்து அருகில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு அலார்ம் மூலம் எச்சரிக்கை செய்யும். அதன்பின், ஸ்டேஷன் மாஸ்டர் அதுகுறித்து அந்த வழியாக வரும் இரயில் ஓட்டுனருக்கு எச்சரிக்கை செய்வார்.

செயற்கை நுண்ணறிவின் வழிமுறையில் செயல்படும் இந்த தொழிற்நுட்பம் 99.5% யானை விபத்துகளை தடுக்கும் என இந்திய இரயில்வே தெரிவித்துள்ளது. இந்த டெக்னாலஜி செட்-அப்பில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் சிக்னல்களை விரைவாக மாற்றுவதற்காக இடம்பெற்றுள்ளன. அதாவது, யானைகளின் அதிர்வுகளினால் கிடைக்கும் சிக்னல்களை அறிந்து, அதற்கேற்ப ஸ்டேஷன் மாஸ்டருக்கு எச்சரிக்கையை வழங்கும்.

கஜ்ராஜ் சுராக்‌ஷா தொழிற்நுட்பம், தான் இருக்கும் இடத்தில் இருந்து அதிகப்பட்சமாக 200 மீட்டர்கள் தொலைவில் தண்டவாளத்தை கடக்கும் அல்லது கடக்க முற்படும் யானைகளை அடையாளம் காணும் என கூறப்படுகிறது. இந்த ஏஐ-சார்ந்த சிஸ்டத்தை முதற்கட்டமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், அஸ்ஸாம், கேரளா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரிய நிலம் சார்ந்த விலங்கு யானை ஆகும். அத்தகைய யானைகள் அதிகளவில் இருக்கும் நாடுகளுள் ஒன்றான நம் இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யானைகளின் எண்ணிக்கை குறைவிற்கு, அவை இரயில்களில் அடிப்பட்டு இறப்பதை ஒரு காரணமாக சொல்லலாம். ஆதலால், இவ்வாறான ஏஐ-சார்ந்த தொழிற்நுட்பங்களின் அறிமுகம் அவசியமான ஒன்றே.

Note: Image is representative purpose only.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 15:40 [IST]
English summary
Indian railways introduced gajraj suraksha ai based technology check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+