வட இந்தியாவில் ஓடும் இந்த ரயிலில் டிக்கெட் புக் பண்ண ஆளே இல்லையாம்! ஏன் தெரியுமா? முழு விபரம் இதோ!

இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் உலகில் உள்ள மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாக இருக்கிறது. தினம்தோறும் இந்தியாவில் 1217 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2.3 கோடி மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் ரயில் பயணத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. மக்கள் மத்தியில் ரயில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இதனால் தினந்தோறும் ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

இதன் மூலம் இந்திய ரயில்வே நிர்வாகம் பல கோடிகளில் வருமானத்தை ஈட்டி வருகிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் எவ்வளவு வருமானம் ஈட்டி உள்ளது என்ற விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பெங்களூர் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் தான் இந்தியாவிலேயே அதிகமான வருமானத்தை ஈட்டி உள்ள ரயிலாக இருக்கிறது. கடந்த 20223 ஆண்டில் மொத்தம் ரூ176 கோடியை வருமானமாக அந்த ரயில் ஈட்டி உள்ளது.

indian railways loss train

அதே நேரம் இருப்பதிலேயே குறைவான வருமானம் பெற்ற ரயில் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளன. டில்லி முதல் லக்னோ வரை இயங்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தான் இருப்பதிலேயே குறைவான வருமானத்தை ஈட்டி உள்ளது. இது மட்டுமல்லாமல் அகமதாபாத், மும்பை இடையே இயங்கும் தேஜஸ் ரயிலும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இது ரயில்கள் மொத்தம் ரூ62.88 கோடியை கடந்த மூன்று ஆண்டுகளில் நஷ்டமாக ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு ரயில்களும் கடந்து 2019ம் ஆண்டு தான் முதல் முதலில் ஐஆர்சிடிசி-யால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டெல்லி முதல் லக்னோ வரை இயங்கும் முறையில் ரூ27.52 கோடியை நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் போதுமான அளவுக்கு புக்கிங் குவியவில்லை. இதனால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாரத்துக்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த ரயில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

indian railways loss train

இந்த ரயில் இயங்கும் போது தினம்தோறும் 200-250 டிக்கெட் வரை காலியாக இருக்கும் நிலையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், இந்த தேஜஸ் ரயில் இயங்கும் அதே ரூட்டிலேயே ராஜஸ்தானி மற்றும் சதாப்தி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது குறைந்த டிக்கெட் அளவில் அதிக வசதிகளை கொண்ட ரயிலாக இருக்கிறது என்பதால் மக்கள் பலர் அந்த ரயில்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.

ராஜஸ்தானி மற்றும் சதாப்தி ஆகிய ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் சிலர்தான் இந்த தேஜஸ் ரயிலில் டிக்கெட் விலை புக் செய்து வருகிறார்கள் இதன் காரணமாக இந்த ரயில் மிகப் பெரிய அளவு நஷ்டத்தை சந்தித்து வருகிறது இந்த தேஜஸ் ரயிலில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டன 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 5முறை இந்த ரயில் தற்காலிகமாக போதுமான பயணிகள் எண்ணிக்கை இல்லாததால் நிறுத்தப்பட்டது.

2020-21ம் நிதியாண்டில் இந்த ரயில் ரூ16.69 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. 21-22ம் நிதியாண்டில் ரூ8.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியாக நஷ்டம் ஏற்படுத்தி வரும் இந்த ரயிலை தொடர்ந்து ஒரு பக்கம் இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இது மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசாங்கம் நடத்தி வரும் பல்வேறு விதமான துறைகளில் ரயில்வே துறை மிகப் பெரிய அளவில் மத்திய அரசுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதிக்கிறது. இந்நிலையில் அதில் குறிப்பிட்ட ஒரு ரயில் ரூபாய் 62 கோடியை நஷ்டமாக ஏற்படுத்தியுள்ளது என்பதை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இன்று ரயில்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் அவஸ்திப்பட்டு வருகிறார்கள். ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இதற்காக காத்திருப்பு பட்டியல் பல ரயில்களுக்கு மிக நீளமாக இருக்கிறது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் இப்படியான ரூட்டுகளை கண்டுபிடித்து இங்கு கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் இந்த ரயிலைதான் விரும்புகிறார்கள். ரயிலில் பயணம் செய்யும்போதுதான் மக்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லாமல் விரைவாக பயணம் செய்ய முடிகிறது. இதனால் மக்கள் தேவை அதிகம் இருக்கும் ரூட்டுகளில் அதிக ரயில்களை இயக்கி இது போன்ற நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்டுகளில் ரயில்களை நிறுத்துவது தான் சிறந்த ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் என மக்கள் கருதுகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 13:54 [IST]
English summary
Indian railways loss train rs 62 8 crores daily 250 vacant seats
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+