ரயில் பயணிகளுக்கன ஹேப்பி நியூஸ்... பிக்-அப், டிராப் சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க போறாங்களா?
ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே தற்போது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான ஓர் தகவலையே அது அறிவித்து இருக்கின்றது. பயணிகள் ரயில் நிலையங்களில் பயன்படுத்தும் பிக்-அப் மற்றும் டிராப் சேவைக்கான கட்டணத்தைக் குறைப்பதற்கான முயற்சியிலேயே அது களமிறங்கி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், வரும் நாட்களில் இந்த சேவைக் கட்டணம் மிகப் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வியாலாக பிக்-அப் மற்றும் டிராப் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, ரயில் நிலைய வளாகத்திற்குள் மின்சார வாகனம் (Electric Vehicle)-களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் இந்தியன் ரயில்வேஸ் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுக்க மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மானியம் மற்றும் வரிச் சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நாட்டில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை வசதியை ரயில் நிலையங்களில் உருவாக்கி தரும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது.
சார்ஜிங் மையங்களை ரயில்வே நிலைய வளாகத்தில் உருவாக்கப்படும் எனில் அது மின்சார வாகன பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக அமையும். மின்சார வாகனத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர் அவருடைய உறவினரை ரயில்வே ஸ்டேஷனில் டிராப் செய்யவோ வரும் போதோ அல்லது பிக்-அப் செய்ய வரும்போதோ தன்னுடைய வாகனத்தை அவரால் சார்ஜ் செய்துக் கொல்ள முடியும்.

சில நேரங்களில் ரயில்கள் வர தாமதமாகலாம். இந்த மாதிரியான நேரத்தில் நேரத்தை வீணடிக்காமல் அவர்களால் குறைந்தபட்சம் தன்னுடைய வாகனத்தையாவது சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். முதல் கட்டமாக இரண்டு ரயில் நிலையங்களிலேயே இந்த வசதிகளை மேற்கொள்ள இந்தியன் ரயில்வேஸ் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கூறப்படுகின்றது.
வடக்கு ரயில்வேயின் ஆக்ரா பிரிவில் உள்ள ஆக்ரா கண்டோன்மென்ட் மற்றும் மதுரா சந்திப்பு ரயில் நிலையங்களில் இந்த முயற்சி முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதிகள் இப்போதே வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் மிக குறைவான எண்ணிக்கையிலேயே சார்ஜிங் மையங்களின் இருப்பு இப்போது உள்ளது.
இதன் விளைவாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சார வாகனங்கள் காத்திருந்து சார்ஜ் செய்யும் சூழல் நிலவுகின்றது. இந்த சூழலை போக்கும் பொருட்டு சில முன்னணி நிறுவனங்கள் பொது இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தமாதிரியான சூழலிலேயே இந்தியன் ரயில்வேஸும் இப்பணியில் களமிறங்கி இருக்கின்றது.
நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இருப்பதைப் போல கட்டமைப்பு வசதி இன்னும் சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கு உருவாக்கப்படவில்லை. இப்போதே, இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் மின்சார வாகனங்களுக்கான அடிப்படை வசதி மிகப் பெரிய அளவில் வளர்ச்சிக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரயில்வேஸ் ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணியில் சமீப காலமாகவே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்து வரும் நாட்களில் மேலும் சில முக்கிய ரயில் நிலையங்களிலும் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்ட் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இங்கு சார்ஜ் செய்ய குறைவான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு சார்ஜிங் வசதி அதிகரிக்கும் எனில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரிக்கக் கூடும்.


Click it and Unblock the Notifications