12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
உலகின் வெகு சில நாடுகளில் மட்டுமே இருக்கும் பவர்ஃபுல் இன்ஜின் தற்போது இந்தியாவிலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. சுமார் 12 ஆயிரம் குதிரைகளைக் கட்டி வைத்து இழுத்துச் செல்லும் சென்றால் எவ்வளவு பவர் கிடைக்குமே அவ்வளவு பவரில் இந்த இன்ஜின் இயங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
உலகின் அதிக பவர்ஃபுல் ரயில் இன்ஜின்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று, சீனா, ரஷ்யா, ஜெர்மன், ஃபிரான்ஸ், சுவிடன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் அதிக பவர்ஃபுல் இன்ஜின்களை தயாரித்துள்ளார். முதன் முறையாக இந்தியா தனது பவர்ஃபுல் இன்ஜின் ஆனா WAG12 B இன்ஜின் பிராடு கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்டது.

இந்த ரயில் இன்ஜினை இந்திய ரயில்வே மற்றும் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ALSTOM என்ற தனியார் நிறுவனமும் இணைந்து மாதேப்புரா எலெக்ட்ரிக் இன்ஜின் ஆலையில் வைத்து இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளது. இந்த இன்ஜின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இதுவரை 100 இன்ஜின்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 இன்ஜின்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 12 ஆயிரம் குதிரை திறனில் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் WAG 12B வகை இன்ஜின் ஆகும. இதில் W என்பது பிராடு கேஜ் என்பதைக் குறிக்கும். A என்பது ஆல்டர்நேட் கரண்ட் என்பதைக் குறிக்கும். G என்பது கூட்ஸ் ரயில் பயன்பாடு என்பை குறிக்கும். 12 என்பது இதன் 12 ஆயிரம் குதிரை திறனை குறிக்கும். இந்த இன்ஜின் புதிய 3 பேஸ், 9000 கிலோ வாட் ஐஜிபிடி-யை அடிப்படையாகக் கொண்ட ரயில் இன்ஜின் என்பதை குறிக்கும்.
இந்த ரயில் இன்ஜினில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பிராஸ் பார்டர் டிராக்கிங் வசதி இருக்கிறது. இந்த இன்ஜின் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சிறி பாயும் திறன் கொண்டது. இந்த இன்ஜினை சரக்கு ரயில்களில் பொருத்துவது மூலம் ரயிலின் வேகம் மற்றும் கொள்ளளவை அதிகரித்துக்கொள்ள முடியும். இந்த ரயிலில் 22.5 முதல் 25 டன் அளவிலான ஆக்ஸில் லோடுகளை இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் முதன் முறையாகக் கடந்த 2020ம் ஆண்டு பண்டிட் தீன்தயான் உபபாத்தியா ரயில் நிலையத்திலிருந்து ஷிவ்பூர்வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இநத் ரயில் 120 கி.மீ வேகத்தில் செல்வது மட்டுமல்ல இதன் கேபின் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 2 இன்ஜின்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வசதி என்னவென்றால் ரயிலில் லோடு குறைவாக இருந்தால் ஒரு இன்ஜினை ஆஃப் செய்து கொள்ளும் வசதி இதில் இருக்கிறது. 12 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட ரயில் இன்ஜினை தயாரித்துள்ள சில நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது அது பெருமையே!


Click it and Unblock the Notifications