புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் கட்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் இந்த பாலம் இந்தாண்டே செயல்பாட்டிற்கு வர வாய்ப்பிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்தியா ரயில் போக்குவரத்தில் மிக முக்கியமான நாடாக இருக்கிறது. நாட்டில் உள்ள பல இடங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் இந்தியாவிற்கான ஒரு அடையாளத்தைத் தருவது ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம். ராமதாபுரத்தில் ராமேஸ்வரம் பகுதி தீவாக உள்ளது. இந்த தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

1914ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராமதாபுரத்தின் பாம்பன் பகுதியையும், ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மண்டபம் பகுதியையும் இணைக்கும் வகையில் ரயில்வே பாலம் ஒன்று அமைக்கப்பட்டு மீட்டர் கேஜ் ரயில்கள் ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடி வரை இணைக்கப்பட்டிருந்து. அதில் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்ட வந்தன. இந்த பாலம் இந்தியாவின் அடையாளமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் இந்த பாலம் கடலில் கப்பல்கள் செல்லும் வகையில் தூக்குபாலமாக அமைக்கப்பட்டது தான்.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்த பாலத்தின் மத்திய பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் போது பாலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடுவில் உள்ள பகுதியைத் தூக்கும் வசதி கொண்ட லிஃப் அமைக்கப்பட்டிருப்பது இந்த பாலத்தின் அடையாளம் குறிப்பிட்ட நேரத்தில் இந்த பாம்பன் பலம் தூக்கப்படும் போது அதன் கீழ் வழியாகக் கப்பல்கள் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லும். இந்த பாலத்தில் தூக்கி மூடும் பணியே சுமார் 30 நிமிடங்கள் வரை நடக்கும். 1988 வரை தமிழகத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைப்பது பாம்பன் ரயில்வே பாலமாக மட்டுமே இருந்தது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

அதன்பின்னர் சுமார் 17 மீட்டர் உயரத்தில் பாம்பன் சாலை பாலம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 1964ல் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தில் தனுஷ்கோடி என்ற ஊரே அழிந்து போனது. இந்த நேரத்தில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பனை இணைக்கும் ரயில் பாலமும் தண்ணீரில் முழ்கிபோனது. இந்த பாலம் மீண்டும் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் பாம்பன் பாலம் மீட்டர்கேஜாக இருந்தது. கடந்த 2007ம் ஆண்டு பிராட்கேஜ்ஜாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாலம் அவ்வப்போது சோதரமாகி விடுகிறது. அதனால் அதில் அவ்வப்போது பராமரிப்பு வேலைகள் நடத்தப்படுகிறது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே வேறு ஒரு பாலத்தைக் கட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் சுமார் ரூ250 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி தற்போது கொரோனா காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் ரூ30 கோடி அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்டப் பழைய பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளைத் தாண்டுவதால் புதிய பாலம் கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்நிலையில் புதிய பாலம் 18.3 மீட்டர் உயரத்தில் 99 கிரிட்டர்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தில் தூக்கு வசதி பழைய பாலம் போல இல்லாமல் லிஃப்ட் போல பாலத்தைத் தூக்கும் வசதி இந்த பாலத்தில் இருக்கிறது. தற்காலிகமாக இந்த பாலத்தில் ஒன்றை ரயில் பாதை தான் அமைக்கப்பட்டாலும் பிற்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அதற்குத் தகுந்தார் போல இரண்டு ரயில் பாதை அமையும்யும் வகையில் பாலம் தயார் செய்யப்படுகிறது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்த பாலம் கட்டப்படும் முன் நடந்த மண் பரிசோதனை முடிவுகளின் காரணமாக இந்த பாலத்தில் 1.5 மீட்டர் குவியல் குறை தூண்கள் இந்த பாலத்தில் கட்டமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்காகப் பொருட்களைத் தயாரிக்கும் தற்காலிக தொழிற்சாலை சத்திரக்குடி ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்குத் தயார் செய்யப்படும் பொருட்கள் பாம்பன் பாலத்திற்குக் கொண்டு வரப்பட்டு கட்டுமானம் செய்யப்படுகிறது.

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

புதிதாக அமைக்கப்படும் லிஃப்ட் முறை தூக்கு பாலம் சுமார் 17 மீட்டர் வரை உயரத்திற்கு அமைக்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட அருகில் உள்ள சாலை பாலத்தின் உயரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதனால் பெரிய கப்பல்கள் கூட இந்த வழியாகச் செல்ல முடியும் என்பதால் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக தூண்கள் அமைக்கக் கடலுக்கு அடியில் சுமார் 35 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பாலம் திறந்து மூட 30 நிமிடம் ஆகும் நிலையில் புதிய பாலத்தை வெறும் 10 நிமிடத்தில் திறந்து மூடிவிடலாம்

புதிய பாம்பன் பாலத்தில் இவ்வளவு தொழிற்நுட்ப விஷயங்கள் இருக்கிறதா? எப்பொழுது தயாராகும் தெரியுமா?

இந்த புதிய பாலம் குறித்து சமீபத்தில் ஊடகத்தினருக்குப் பேட்டியளித்த ரயில் அதிகாரிகள். புதிய பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் இந்த பாலம் ரயில்வே போக்குவரத்திற்குத் தயாராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாலம் தயாரானால் தற்போது செயல்பட்டுவரும் பழைய பாலம் கைவிடப்பட்டு புதிய பாலத்தில் ரயில்கள் இயங்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian railways plan to finish new Pamban bridge works end of the year
Story first published: Tuesday, June 7, 2022, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X