ஏசி மட்டும் கிடைக்காது... ஆனால் டிக்கெட் விலை குறைவாக இருக்கும்!! இந்தியன் இரயில்வேஸின் அடுத்த திட்டம்!

ஏழை, எளிய மற்றும் மிடில்-கிளாஸ் மக்களை, வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் இரயில்களில் பயணம் செய்ய வைக்கும் முயற்சியாக ஓர் அருமையான திட்டத்தை இந்திய இரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது. எந்த மாதிரியான திட்டம் அது? அன்றாட வாழ்வில் அது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதை இனி பார்க்கலாம்.

இந்திய போக்குவரத்தின் மிக முக்கிய முதுகெலும்பாக இரயில் போக்குவரத்து விளங்குகிறது என சொன்னால் அதில் மிகையில்லை. நம் நாட்டில் ஏழை, எளியோரும், மிடில்-கிளாஸ் மக்களும் தான் அதிகமானோர் வாழ்கின்றனர். எல்லாராலும் எல்லா நேரங்களிலும் விமானங்களில் பயணம் செய்ய முடியாது. இதனால், தினந்தோறும் இட்சக்கணக்கிலான மக்கள் இரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

railways planning new non-ac train

இந்தியன் இரயில்கள் பல விதங்களில் உள்ளன என்பது உங்களுக்கே தெரியும். அதாவது முன்பதிவில்லா பெட்டிகளில் இருந்து, படுக்கை வசதி மற்றும் டைனிங் டேபிள் என சகல வசதிகளும் கொண்ட பெட்டிகளை கொண்ட இரயில்கள் வரையில் இயக்கப்படுகின்றன. இதில் சில வகை பெட்டிகள் ஏசி வசதியை கொண்டவை. சில பெட்டிகளில் ஏசி கொடுக்கப்படுவதில்லை.

ஏசி வசதியை கொண்ட பெட்டிகளில் பயணிப்பதற்கு பெரும்பாலும் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். ஏசி-க்காக செலவாகும் மின்சாரம் மற்றும் உடனே மூடிக்கொள்ளும் கதவுகள் மற்றும் சுத்தமான பராமரிப்புகளுக்காக அதிக கட்டணத்தை இந்திய இரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. இதனால், ஏழை, எளிய மிடில்-கிளாஸ் மக்களால் அவ்வப்போது ஏசி பெட்டிகளில் பயணிக்க முடிவதில்லை.

railways planning new non-ac train

சரி ஏசி இல்லாத பெட்டிகளில் ஆவது டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளதா என பார்த்தால், சில இரயில்களில் அதிவேக பயணம் உள்ளிட்ட காரணங்களை காட்டி நான்-ஏசி பெட்டிகளில் பயணிப்பதற்கு கூட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த குறையை சரி செய்யுவும் விதமாக, ஏசி-இல்லா இரயில் சேவையை அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் வழங்க இந்திய இரயில்வே துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்திய இரயில்வே துறையின் சமீபத்திய மிக முக்கியமான & வெற்றிக்கரமான நடவடிக்கையாக வந்தே பாரத் இரயில்களை சொல்லலாம். வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியில்லாமல், முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் வந்தே பாரத் இரயில்களை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வந்தே பாரத் இரயில்கள் பார்ப்பதற்கும் அழகாக உள்ளது மற்றும் அதிவேகமாக இயங்குவதால் மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

railways planning new non-ac train

ஆனால் வந்தே பாரத் இரயில் சேவையில் உள்ள ஒரே குறை என்னவென்றால், அதிகப்படியான டிக்கெட் கட்டணம் ஆகும். இதனை புரிந்து கொண்ட இரயில்வே நிர்வாகம், செகண்ட்-கிளாஸ் முன்பதிவில்லா பெட்டிகளையும், செகண்ட்-கிளாஸ் 3-டயர் ஸ்லீப்பர் பெட்டிகளையும் அப்கிரேட் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த நான்-ஏசி பெட்டிகளில் ஏற்கனவே டிக்கெட் விலை குறைவே. இருப்பினும், பெட்டிகளை அப்கிரேட் செய்வதுடன், பயணிகளின் பயணத்திற்கான செலவையும் குறைக்க இரயில்வே நிர்வாகம் விரும்புகிறது.

இந்த வகையில் இயக்கப்படவுள்ள இந்த புதிய இரயில்களுக்கு பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறைந்த செலவில் உருவாக்கப்பட்டாலும் வந்தே பாரத்தில் வழங்கப்படும் சில வசதிகள் இந்த புதிய இரயில்களிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்கல் மின்சார இரயில்களை போல், இரு முனைகளிலும் லோகோ என்ஜின் பெட்டிகள் இடம்பெற உள்ளனவாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா மட்டுமின்றி உலகளவில் விமானங்களின் தேவையும், பயன்பாடும் நாளுக்கு அதிகரித்துவரும் சூழலில், இரயில் போக்குவரத்தை நான்-ஏசி இல்லாமல், ஏசி உடனே இன்னும் மலிவானதாக வழங்க அரசாங்கங்கள் முயற்சிக்க வேண்டும். இந்திய இரயில்வேயின் திட்டத்தில் உள்ள புதிய மலிவான இரயில்கள் எத்தகைய தரத்தில் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 20, 2023, 19:16 [IST]
English summary
Indian railways planning for new non ac train
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X