அறிவிப்பு பலகைகளை மாற்ற இந்திய ரயில்வே திடீர் முடிவு! இன்னும் ஒரு சில நாளில் எல்லாம் வேற மாறி மாறப்போகுது!

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் உள்ள அறிவிப்புப் பலகைகளை மாற்ற ரயில்வே அமைச்சகம் திடீர் முடிவை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பலகைகளைப் பொருத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் ரயில்கள் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள சிறிய கிராமங்கள் வரை பெரிய நகரங்கள் முதல் பெரும்பாலான பகுதிகளில் ரயில்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இப்படியாக இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் பல்வேறு அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள சிறிய தகவல்கள் முதல் பெரிய தகவல்கள் என எல்லாமே பயணிகளுக்குப் பயன்படும்படியான தகவல்களாக இருக்கும்.

railway station signboard Change

தற்போது இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் ஒரே மாதிரியாக அறிவிப்புப் பலகைகள் தான் பொருத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே மாதிரியான அறிவிப்புப் பலகைகள் இருக்கிறது. இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இதில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகள் எல்லாம் இனி மத்திய அரசு வெளியிடப்போகும் மாற்றத்தைப் பின்பற்றி மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி அறிவிப்புப் பலகையின் நிறம், அதில் எழுதப்படும் எழுத்துக்களின் அச்சு, எழுத்துக்களின் அளவு, எழுத்துக்களின் நிறம், ஆகியவற்றை மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள டிஜிட்டல் போர்டுகளிலும் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை என்ன நிறம், எந்த ஃபான்ட் உள்ளிட்ட தகவல்களை இதுவரை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை.

railway station signboard Change

இந்த மாற்றத்தில் முதியவர்கள், குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் புரியும் வகையில் அறிவிப்புப் பலகைகள் பொருத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலைய அறிவிப்புப் பலகையில் நாடு முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது போக அறிவிப்புப் பலகைகளில் பொறிக்கப்படும் அடையாள படங்கள் அதாவது கழிவறை என்றால் அதற்கு அருகே இருக்கும் கழிவறை போன்ற படங்களை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது 1257 ரயில்வே ஸ்டேஷன்கள் அம்ரீத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஸ்டேஷன்களிலும் அதே அறிவிப்புப் பலகை கொள்கை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான அறிவிப்புப் பலகை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

railway station signboard Change

புதிதாக மாற்றப்படும் போது பயன்படுத்தப்படும் வார்த்தைகள் லோக்கல் மக்களுக்குப் புரியும் வார்த்தைகளாகவும், எழுத்தின் அளவு சுலபமாகத் தெரியும்படியும் குழப்பம் இல்லாமல் இருக்கும்படியும் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான பணிகளை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்நிலையங்களை நவீனத்துவம் படுத்தும் பணி முக்கியமானது தான். சர்வதேச தரத்தில் இந்திய ரயில் நிலையங்கள் படிப்படியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு இந்த ஒரே மாதிரியான அறிவிப்பு பலகைகள் முக்கியமானது. ஆனால் மத்திய ரயில்வே அமைச்சகம் இந்த பணியை அவசரம் இல்லாமல் நன்கு ஆய்வு செய்து பணியை செய்வது சிறந்ததாக இருக்கும். அவசரமாக செய்விட்டு பின்னர் மாற்றுவது தேவையில்லாத இரட்டை வேலையை இழுத்துவிட்டுவிடும்!

Article Published On: Tuesday, May 16, 2023, 12:40 [IST]
English summary
Indian railways planning to change sign boards in the railway station
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X