2ஜியை எல்லாம் மிஞ்சிடுமே! இந்திய ரயில்வேயின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? பாக்கும்போதே கண்ணு கட்டுதே!

ஏப்ரல் மாதம் துவங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கடந்த நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேக்கான கடந்த நிதியாண்டு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி இந்திய ரயில்வே முன் எப்பொழுதும் இல்லாத வகை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாகப் பயணிகள் ரயில்களில் 80 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில், சரக்கு ரயில் என இரண்டு விதமான ரயில் சேவைகளை தற்போது செயல்படுத்தி வருகிறது.

2ஜி எல்லாம் மிஞ்சிடுமே! இந்திய ரயில்வேயின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? பாக்கும்போதே கண்ணு கட்டுதே!

கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்திய ரயில்வே மொத்தம் ரூ 2.31 லட்சம் கோடியை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளது. இது கடந்த 2021-22 நிதியாண்டை ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் கொரோனா காரணமாகப் பல ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அது மீண்டும் இயக்கத்திற்கு வந்தது தான் இந்தாண்டின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்.

2022-23ம் நிதியாண்டில் தென்னக ரயில்வே பயணிகள் ரயில்கள் மூலம் மட்டும் இந்திய ரயில்வே மொத்தம் ரூ6345 கோடியை வருமானமாகப் பெற்றுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான தொகை வருமானமாக வந்தது இந்தாண்டுதான். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ3539.77 கோடி வருமானமாக வந்தது.

இதுவரை அதிகமாக இருந்தது. 2019-20ம் நிதியாண்டுதான். அது கொரோனாவிற்கு முந்தைய காலம் அந்த நிதியாண்டின் கடைசி 10 நாட்கள் தான் ரயில்கள் ரத்த செய்யப்பட்டன. அந்தாண்டு மொத்தம் ரூ 5225 கோடி வருமானமாக வந்திருந்தது. தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதையும் தாண்டிய வருமானத்தை ரயில்வே நிர்வாகம் ஈட்டியுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 64 கோடி மக்கள் ரயில்களில் பயணித்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை 88.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு வெறும் 33.96 கோடி மக்கள் தான் ரயில்களில் பயணம் செய்திருந்தது. இதற்குக் காரணம் முந்தைய நிதியாண்டில் பல ரயில்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது தான்.

மேலும் கடந்த நிதியாண்டில் முன்பதிவு செய்யப்படாத பட்டிகளில் பயணிகள் பயணித்ததன் மூலம் வருமானம் மட்டும் ரூ14,616 கோடியாகும். இது கடந்த நிதியாண்டை விட 300 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த 2021-22ம் நிதியாண்டில் பல ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் நீக்கப்பட்டிருந்தது தான் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். முன்பதிவு செய்த பயணிகள் வருமானமும் 38.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

சரக்கு ரயில் செக்மெண்டில் இந்தியா ரயில் பல முதன் முறை சாதனைகளைச் செய்துள்ளது. சரக்குகளை கொண்டு செல்வதில் இதுவரை அதிகமாகக் கடந்த நிதியாண்டில் 4.05 மெட்ரிக் டன் எடையைக் கொண்டு சென்றுள்ளது. பெட்ரோலியத்தில் 5.2 மெட்ரிக் டன் எடை கொண்ட பொருட்களையும், உணவு தானியத்தில் 3.23 மெட்ரிக் டன் எடை கொண்ட பொருட்களையும் சுமந்து சென்றுள்ளது.

இது போக நிலக்கரி உள்ளிட்ட அனைத்துவகையான சரக்குகளையும் சேர்த்துக் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1512 மெட்ரிக் டன் எடை கொண்ட சரக்குகளை ரயில்வே இந்தியாவிற்குள் சுமந்து சென்று உரிய இடத்தில் சேர்த்துள்ளது. இதுவே கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் 1416 மெட்ரிக் டன் எடையைத் தான் சுமந்து சென்றுள்ளது.

Article Published On: Tuesday, April 4, 2023, 12:40 [IST]
English summary
Indian railways records highest ever income in fy 23
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+