அக்பர் இன்ஜினை மீண்டும் பழுது பார்த்த ரயில்வே நிர்வாகம்! இப்படி ஒரு சாதனையை யாருமே பண்ணீருக்கமாட்டாங்க!

இந்திய ரயில்வே 58 ஆண்டுகள் பழமையான அக்பர் நீராவி இன்ஜினை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள மிக சில நீராவி இன்ஜினில் இந்த அக்பர் நீராவி இன்ஜினும் ஒன்று. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1965 ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயால் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையில் உருவாக்கப்பட்ட ரயில் இன்ஜின் தான் டபிள்யூபி 7161. இந்த ரயில் இன்ஜினிற்கு இந்திய ரயில்வே முகலாயப் பேரரசர் அபுல் ஃபாத் ஜலாலுதீன் முகமத் அக்பர் பெயரை வைத்து அக்பர் இன்ஜின் என அழைத்து வந்தது.

akbar steam engine

இது ஒரு நீராவி ரக இன்ஜின் இந்த இன்ஜின் தயாரிக்கப்படும் போதே அதிக வேகத்தில் செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரை சென்றுள்ளது. இந்த இன்ஜின் பிராட்கேஜ் ரயில் தண்டவாளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் போது பல எக்ஸ்பிரஸ் ரயில்களை இழுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நீராவி இன்ஜினுக்கு பிறகு ரயில் இன்ஜினில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டது. டீசல் இன்ஜின் வந்து தற்போது அதுவும் போய் எலெக்ட்ரிக் இன்ஜின் தான் தற்போது அதிகமான பயன்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த இன்ஜின் தயாரிக்கப்படும் போது தரமாக தயாரிக்கப்பட்டதால் நீடித்த காலம் உழைக்கிறது. இதனால் இந்த இன்ஜின் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இந்த இன்ஜின் இதுவரை 20க்கும் அதிகமான ஹிந்தி படங்களில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த இன்ஜின் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமும் அடைந்துள்ளது.

இந்த அக்பர் இன்ஜின் பழுதாகி நின்ற நிலையில் இந்த இன்ஜினுக்கு மாற்றாக டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த இன்ஜினை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்ட து. புதுப்பிக்கப்பட் இன்ஜினை டில்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதி வரை இயக்கப்பட்டு சுற்றுலா ரயில் இன்ஜின் ஆக பயன்படுத்தப்பட்டு வந்தது.

2012 ஆம் ஆண்டு இந்த இன்ஜின் புதுப்பிக்கப்படும் பணி தொடர்ந்து தொடங்கினாலும் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தான் மீண்டும் இந்த ரயில் இன்ஜின் பயன்பாட்டிற்கு வந்தது. குறிப்பாக சிருஷ்கா தேசிய பூங்கா பகுதி வழியாக இந்த ரயில் இன்ஜின் பயணித்து வந்தது. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இருந்தது.

மீண்டும் இந்த ரயில் என்ஜின் பழுதானதால் இந்த ரயில் இன்ஜினின் பயன்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயில் என்ஜின் ஹரியானா மாநிலத்தில் ராவாரி பகுதியில் உள்ள ஹேரிடேஜ் ஸ்ட்ரீம் ஷெட்டில் வைத்து மீண்டும் பழுது பார்க்கப்பட்டது. இந்திய ரயில்வேயை சேர்ந்த பல தொழிற்நுட்ப கலைஞர்கள் சேர்ந்து இந்த இன்ஜின் பழுதை சரி செய்தனர்.

அதன் பிறகு தற்போது இந்த இன்ஜின் முழுமையாக தனது செயல்பாட்டை துவங்கி உள்ளது. ரயில்வே ஊழியர்கள் இந்த ரயில் இன்ஜினை தற்போது முழுமையாக செயல்படும் இன்ஜினாக மாற்றியுள்ளனர். சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட ரயில் இன்ஜின் இன்றும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில்வே என்பது உலக அளவில் மிக முக்கியமான பெரிய அளவிலான நெட்ஒர்க் ஆகும். இந்த நெட்வொர்க்கில் இப்படியான பழைய இன்ஜின்களை பாதுகாப்பது வருங்கால தலைமுறைக்கு இந்திய ரயில்வே எப்படி எல்லாம் வளர்ந்தது என்பதை உணர ஒரு சாட்சியாக அமைகிறது. ரயில்வே ஊழியர்கள் இந்த ரயிலை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

Article Published On: Wednesday, August 9, 2023, 17:37 [IST]
English summary
Indian railways revives 58 year old locomotive akbar learn about the steam locos return
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+