ரயில்வே பாதுகாப்புக்கு இவ்வளவு செலவா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே பாதுகாப்புக்காக ரூபாய் 1.08 லட்சம் கோடியை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் விபத்துக்கள் அதிகம் நடப்பதாக சமீபத்தில் பேச்சு எழுந்த நிலையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இப்படியான பதில் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் சுமார் 293 ரயில் பயணிகள் உயிரை இழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் விபத்தாக அமைந்துள்ளது. இந்தக் கோர விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் இந்தியாவில் ரயிலில் உள்ள பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

ரயிலில் பயணிகள் எல்லாம் நம்பகதன்மையுடன் பயணிக்கலாமா? அல்லது பயத்துடன் தான் பயணிக்க வேண்டுமா? ரயில் பயணம் நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்குமா? என்பதை ரயில்வே அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்ற பேச்சுகள் எல்லாம் எழுந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் ரயில்வேயில் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "கடந்த 2017 - 18 ஆம் ஆண்டில் "ராஷ்டிரிய ரயில் சன்ரக்ஷா கோஷ்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் முக்கியமான பணியை ரயில்வே துறையை பாதுகாப்பான போக்குவரத்து துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான். இந்த அமைப்பு மூலம் இதுவரை சுமார் 1 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் டிராக்குகளை புதுப்பித்தல், பாலங்களை அமைத்தல், சிக்னலிங், ஸ்டாக்குகளை மாற்றி அமைத்தல், ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சியை அளித்தல் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட பணம் மூலம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணம் கிராஸ் பட்ஜெட்ரி சப்போர்ட் மற்றும் ரயில்வே வருமானம் மூலம் செலவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்த பணம் பெரும்பாலும் லெவல் கிராசிங், அமைத்தல் ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல், ரயில்வே கீழ் பாலங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்காக செலவு செய்யப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் ரயில்வே போக்குவரத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை போக்குவதற்காக ரயில்வே அதிகாரிகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இனி இது போன்ற ரயில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா சம்பவம் சிக்னல் பிரச்சனை காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது மனித தவறால் நிகழ்ந்த பிரச்சினை என்பதால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த பிரச்சனைக்கான மூல காரணத்தை கண்டறியவும் ரயில்வே அதிகாரிகளால் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ரயில்வேயில் இன்னும் பாதுகாப்பிற்காக மேலும் பல வசதிகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக ஓடும் ரயில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த பல்வேறு வசதிகள் செய்யப்பட வேண்டும். மற்ற போக்குவரத்து வசதிகளை ஒப்பிடும்போது ரயில்வே சிறப்பான பாதுகாப்பு வசதிகளை தான் வழங்கி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் பெரிய அளவில் மெத்தனமாக இருந்தது இல்லை. ஒரு சில தவறுகளால் சில ரயில் விபத்துகள் நடந்துள்ளது. ஆனால் ரயில் விபத்துகளில் சிறிய தவறு கூட பெரிய விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் இந்திய ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாக மெனக்கிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்


Click it and Unblock the Notifications









