மேனுவல் ட்ராகிங்கிற்கு குட்பை... வந்தாச்சு புதிய ரேடியோ சாதனம்; இந்திய இரயில்வேயில் அதிரடி அறிமுகம்

Written By:

2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேகன்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட எஞ்சின்களை கொண்டுள்ள ஒரு பிரம்மாண்ட நெட்வோர்க் தான் இந்திய இரயில்வே துறை.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

உலகின் மிகப்பெரிய இரயில்வே துறையான இந்திய ரயில்வேயில் இரயில்கள் ஒவ்வொன்றையும் இதுவரை மேனுவலாகத்தான் ட்ராக் செய்யப்பட்டுகின்றன.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்த முறையை மாற்றி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ராக்கிங் அமைப்பை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் ரேடியோ அதிர்வெண்கள் (Radio-frequency identification (RFID) ).

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

ரேடியோ அதிர்வெண்கள் மூலம் இயங்ககூடிய RFID டேக் (Tag ), ரூ.1000 மதிப்புகொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்த RFID டேக்கை இரயில் பெட்டிகள், எஞ்சின்கள், வேகன் ஆகியவ்வற்றில் பொறுத்தப்படும். ஒவ்வொறு டேகுக்கும் தனித்தனியாக குறீயிட்டு எண் தரப்படும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

பிறகு இரயில் பாதைகளில் ரேடியோ அதிர்வெண்ணைக் கண்டறியும் ரீடர் அமைக்கப்படும். இந்த ரீடர் கணினியோடு இணைக்கப்பட்டுயிருக்கும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இரண்டு மீட்டர் தூரம் வரை செல்லகூடிய இரயில்களுக்காக தரப்பட்டுயிருக்கும் குறியீட்டு எண்ணை (ரேடியோ அதிர்வெண்) இந்த ரீடர் வாசித்து, அவை கணினிக்கு தகவல் கொடுக்கும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இதன்மூலம் ரயில் எங்கே இருக்கிறது? ஒரே வழிப்பாதைகளில் எத்தனை ரயில்கள் பயணிக்கின்றன என்பன போன்ற தகவல்களை கணினி வழியே அதற்கான அலுவலர்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

ரயில்களில் தரப்படும் RFID டேக்கை 25 ஆண்டுகள் வரை இரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம். அதற்கு பிறகு கலாவதி ஆகிவிட்டால் புதிய டேக்கை பொருத்தி, புதிய குறியீட்டை எண்ணை வழங்கலாம்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

தற்போது இயக்கப்படும் ரயில்கள் மட்டுமில்லாமல், இனி புதியதாக தயாரிக்கப்பட்டும் இரயில்பெட்டிகள், எஞ்சின்கள் ஆகியவற்றிலும் RFID டேக்குகள் பொருத்தப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

கடைகளில் பொருட்களை வாங்கும் போது, அதன் பின்னர் பார்கோடு இருக்கும், அதை ஸ்கேன் செய்தால், அந்த பொருளை குறித்த அனைத்து தகவல்களும் பில் போடும் போது தெரியவரும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இரயில்களில் பொருத்தப்படும் ரேடியா அதிர் வெண்ணிற்கான செயல்பாடும் கிட்டத்தட்ட இதே தொழில்நுட்பம் முறை தான்.

ஆனால் பார்கோடு போலில்லாமல், இது இன்னும் மேம்படுத்தப்பட்ட வடிவில் இருக்கும். அதாவது பார்கோடில் ஏதாவது பழுது ஏற்பட்டால், ஸ்கேனரால் பொருட்களின் தகவலை பெறமுடியாது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இரயில்களை கண்டுபிடிக்க உதவும் RFID டேக்குகள் இரயில் அதிர்வெண் தொழில்நுட்பத்தில் கண்டறியப்படுவதால் பார்கோடு போன்ற பிரச்சனைகள் இதில் ஏற்பட வாய்பில்லை.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

ரீடர், குறியீட்டு எண்ணை தவிர, ஒவ்வொரு இரயில்களிலும் ரியாக்டர் சிப், சிக்னலை தெரிவிக்கும் ஆன்டனா இடம்பெற்றிருக்கும். எந்த வானிலை சூழலையும் தாங்கக்கூடிய வகையில் ஆன்டனாவின் மேற்பரப்பு மூடப்பட்டு இருக்கும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

ரியாக்டர் சிப் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, அதில் ரயில் பாதைகளில் உள்ள ரீடரில் ரிசீவ் செய்யப்பட்டு, பிறகு கணினிக்கு அது தகவல் வழங்கும்.

சிப் மற்றும் ரீடருக்கான தகவல் பரிமாற்ற பணியை ஆன்டனா மேற்கொள்ளும்.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ரேடியோ மின்காந்த அலைகளால் இயங்குவதால் RFID டேக் இயங்க மின்சாரமோ, பேட்டரியோ அல்லது எரிவாயுவோ தேவையில்லை.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

ஏற்கனவே ரேடியோ அதிர்வெண்கம் ( RFID) மூலம் இயங்கக்கூடிய முறை இந்தியாவில் தனியார் துறையில் இருந்து வருகிறது. ஊழியர்களின் வருகையை அறிந்துகொள்ள ஐ.டி கார்டுகளிலும், கீசெயின் மூலம் திறக்கப்படும் கார் கதவுகள் ஆகியவற்றிலும் RFID முறை இங்கு வழக்கத்தில் தான் உள்ளது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

கார் தயாரிப்பு நிறுவனங்களும், ஐ.டி போன்ற பெருநிறுவனங்களிலும் வழக்கத்திலிருந்த RFIDயை இந்திய அரசு இரயில்வே துறை மூலம் போக்குவரத்து செயல்பாடுகளுக்கு முதன்முறையாக இந்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

RFIDயின் பயன்பாடு இந்தியாவில் இந்த அளவில் இருக்குமானால். மேலை நாடுகளில் டிராஃபிக் சிக்னல், சுங்கச் சாவடிகளில் விதி மீறும் ஓட்டுநர்களை குறித்த தகவல்களை அறிய RFID பயன்படுத்தப்படுகிறது. இதுபோல பல நாடுகளில் இது வேவ்வேறு பயன்பாட்டிற்காக வழக்கத்தில் உள்ளது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்தப்படவுள்ள RFID முறையால் இரயில்களின் இயக்கம், ஒரே பாதையில் இருக்கும் ரயில்களின் செயல்பாடுகள் மட்டுமே கண்காணிக்கப்படவுள்ளன.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்த திட்டம் இந்திய ரயில்வேதுறையில் பெரிய வரவேற்பையும், தேவையையும் அதிகரிக்குமானால் போக்குவரத்து சார்ந்த செயல்பாடுகளில் மேலைநாடுகளில் RFIDயை பயன்படுத்துவது போல இந்தியாவிலும் பயன்படுத்த அரசு முயற்சிக்க வாய்ப்பு உள்ளது.

ரயில்களை கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம்: இந்திய இரயில்வே

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இதை செயல்படுத்துவதற்கு முன்னர், விசாக்கப்பட்டிணம்- தால்சர் வழித்தடத்தில் RFID டேக் தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக இந்திய ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Indian Railways will use radio-frequency identification tags (RFID) for tracking of wagons, coaches and locomotives. Click for Details...
Story first published: Friday, May 5, 2017, 15:10 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos