சீனா, ஜப்பான் எல்லாம் தோற்றுப்போகும்! இந்திய ரயில்வே எப்படி தண்டவாளங்களை போடுறாங்க தெரியுமா?
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் தங்கள் ரயில் நெட்வொர்க்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 7.41 கிலோமீட்டர் அளவுக்கு ரயில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இப்படியாக ரயில் தண்டவாளங்கள் எப்படி பதிக்கப்படுகிறது என்ற வீடியோவை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் போக்குவரத்துக்கு ரயில்வே மிகப்பெரிய முதுகெலும்பு என சொல்லலாம். தற்போது இந்திய ரயில்வே தினம்தோறும் 13,523 பயணிகள் ரயிலையும் 9,146 சரக்கு ரயில்களையும் கையாண்டு வருகிறது. இந்த ரயில்கள் எல்லாம் பயணிப்பதற்கு தண்டவாளம் கண்டிப்பாக தேவை என்பது தெரியும். ஆனால் அந்த தண்டவாளங்களை எப்படி அமைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? பலருக்கும் இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில், இந்திய ரயில்வே அமைச்சகம் தரப்பிலிருந்து ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் இந்தியாவில் தண்டவாளங்கள் எப்படி கட்டமைக்க கட்டமைக்கப்படுகின்றன என விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமங்களையும் இணைக்கும் வகையில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுவது குறித்த இந்த வீடியோ பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கான படிநிலைகள் குறித்து காட்டப்பட்டுள்ளன. நவீன கருவிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்த ரயில்வே தண்டவாளங்கள் கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே தண்டவாளங்களை கட்டமைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. இதற்கு அதிக பொறுமை, முயற்சி மற்றும் அதிக நேரமும் தேவை, இதையெல்லாம் எடுத்துக்காட்டும் வகையில் தான் இந்த வீடியோ அமைந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரயில்வே நிர்வாகம் எவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

இந்தியாவில் ரயில்வே கணத்தை விட்டு மிக அத்தியாவசிய தேவையாக இருக்கிறது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமாக இருக்கிறது. உலக அளவில் இந்தியா நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடாக இருக்கிறது. தற்போது சுமார் 1.26 லட்சம் கிலோமீட்டர் அளவிற்கு ரயில்வே கனெக்டிவிட்டி இருக்கிறது.
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது தண்டவாளங்களை அமைப்பதில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வருகிறது. மிகத் துல்லியமாக நம்பகமான கட்டமைப்புகளை ரயில்வே நிர்வாகம் உருவாக்கி வருகிறது. இதனால் பாதுகாப்பாகவும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் தரும் ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா வளப்படுத்தி வருகிறது.

இது மட்டுமல்லாமல் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளை விரைவாக பல்வேறு விதமான யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. முக்கியமாக அதிக எண்ணிக்கையிலான வேலையாட்கள் இந்த பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் கருவிகள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தண்டவாள பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.
சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த 2014-15ம் நிதியாண்டு முதல் 2023-24 ஆம் நிதியாண்டு வரை மொத்தம் 27,057.07 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 7.41 கிலோமீட்டர் அளவுக்கு தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன. இது புதிய தண்டவாள பணிகள் ஏற்கனவே தண்டவாளம் இருக்கும் பணிகளில் இரட்டை ரயில் பாதை அல்லது மூன்று ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகள் அடங்கும்.
கடந்த 2023ம் ஆண்டு மட்டுமே 5,200 கிலோமீட்டர் அளவுக்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் தற்போது 5500 கிலோ மீட்டர் அளவுக்கு தண்டவாளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக 15 கிலோமீட்டர் தண்டவாளங்களை ஒரு நாளுக்கு அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவாக தண்டவாளங்களை அமைப்பதன் மூலம் விரைவாக தனது நெட்வோர்க்கை விரிவாக்கி வருகிறது. இதன் மூலம் அதிகமான பயணிகள் பயன்பெறுவார்கள். தினமும் ரயில் மூலம் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை நிச்சயம் நாம் வரவேற்றக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









