சொகுசு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு வரும் புதிய ரயில் பெட்டிகள் - கேலரி!

Written By:

சொகுசு மற்றும் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய ரயில் பெட்டிகள் விரைவில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. போபாலில் உள்ள ரயில் பெட்டி புனரமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ரயில் பெட்டிகளில் சொகுசான இருக்கைகள், கண்ணை கவரும் இன்டீரியர் வேலைப்பாடுகள், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் நவீன கழிப்பறை வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியும் ரூ.14 லட்சம் செலவில் நவீன வசதிகள் கொண்டதாக புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பல ரயில் பெட்டிகளை இவ்வாறு மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாக மேற்கு மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் ரமேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 20 ரயில் பெட்டிகள் இவ்வாறு மாற்றப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும், மேலும் 111 ரயில் பெட்டிகள் இவ்வாறு மாற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதிய ரயில் பெட்டிகளின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

புதிய ரயில் பெட்டிகள் - 01
 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways Will be Introduced New Train Coaches Soon.
Story first published: Saturday, January 9, 2016, 11:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X